கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நாட்டில், 4 இலட்சத்து 16 ஆயிரத்து 182 ஆக அதிகரித்துள்ளது. முதல்சுற்றில் இன்று (27) புதிதாக பதிவான கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,812 ஆகும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகளுக்காக விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை குறித்த பரீட்சைகளுக்கான விண்ணப்பக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.