எரிபொருள் கொள்வனவிற்காக இலங்கைக்கு இந்தியா கடன் வழங்கியுள்ளது. 500 மில்லியன் டொலர் கடன் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
நண்பர் என்ற ரீதியில் இலங்கைக்கு இந்தியா கைகொடுத்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது.
இருதரப்பு பொருளாதார கூட்டு நடவடிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்த கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடலின் பிரதிபலனாக இந்த கடன் வழங்கப்பட்டுள்ளது.