வவுனியா சேமமடு முத்தமிழ் விளையாட்டுக் கழகத்திற்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சேமமடு சண்முகானந்தா வித்தியாலய அதிபர் கணேசலிங்கம் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக புளொட் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் வவுனியா நகர சபை உறுப்பினருமான சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களின் ஒழுங்கமைப்பில் நேற்று வழங்கப்பட்டது.

புளொட் பிரான்ஸ் கிளை தோழரான சசிக்குமார் சுலக்சனா தம்பதியினரின் நிதிப்பங்களிப்பில் வழங்கப்பட்ட நிகழ்வில் வவுனியா நகர சபை உறுப்பினர் ஆசிரியர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.