கிளிநொச்சி மாவட்டம், பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலை பகுதியில் கன்னிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பிரிவினரால், மனித எச்சம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பளை பொலிஸாருக்கும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவானுக்கு தகவல் வழங்கப்பட்டது Read more
சுன்னாகம் ஐயனார் முன்பள்ளிக்கு பல்லூடக எறியி, திரை மற்றும் ஐயனார் இளைஞர் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள், மைதான மின்விளக்குகள் என்பன பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதிஉதவியில் வழங்கி வைக்கப்பட்டன.
18.01.1984இல் யாழ்ப்பாணத்தில் மரணித்த தோழர் அலெக்ஸ் (சிவசுப்பிரமணியம் சனார்த்தனன் – வடலியடைப்பு) அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….(மலர்வு-30.04.1966)
மட்டக்களப்பு வாழைச்சேனை வாகரை பிரதான வீதியிலுள்ள காயங்கேணி பாலத்துக்கு அருகில் முச்சக்கரவண்டி மீது கார் ஒன்று மோதிய விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 9 மாத கர்ப்பிணி தாய் ஒருவரின் வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்த சம்பவம் இன்று (17) இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
எரிபொருள் கொள்வனவிற்காக இலங்கைக்கு இந்தியா கடன் வழங்கியுள்ளது. 500 மில்லியன் டொலர் கடன் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
நாட்டில் மேலும் 672 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 597,707 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கையளிக்கும் வகையில், தமிழ்க் கட்சிகளினால் தயாரிக்கப்பட்டு, கையொப்பம் இடப்பட்டுள்ள ஆவணம், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் கையளிக்கப்பட்டது.
கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாடு காரணமாக நாட்டில் ஐந்தாவது கொரோனா அலை உருவாகும் அபாயம் காணப்படுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் தலைவர் மற்றும் பதில் பொது முகாமையாளரை பதவி நீக்கம் செய்யுமாறு கோரி மின்சார பொறியியலாளர்கள் குழுவொன்று இன்று (18) இலங்கை மின்சார சபையின் தலைமையகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
17.01.1988இல் வவுனியாவில் மரணித்த தோழர் பஞ்சாப் (பாலன் – புதுக்குளம்) அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…