இலங்கைக்கான கடன் நிவாரண நடவடிக்கையை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக, பரிஸ் கிளப் (Paris Club) அறிக்கை மூலம் அறிவித்துள்ளது. இலங்கைக்கான நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பரிஸ் கிளப் அல்லாத இருதரப்பு கடன் வழங்குநர்களை பரிஸ் கிளப் ஒருங்கிணைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகள், பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம், சுகாதார சேவைகள் ஆகியன இன்றுமுதல் (03) அமலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் நாடு திரும்பிய சந்தர்ப்பத்தின் புகைப்படங்கள் ஊடகங்களுக்கு வௌியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (02) இரவு நாடு திரும்பினார். முன்னாள் ஜனாதிபதி நேற்று இரவு 11.45 மணியளவில் சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானம் மூலம் வந்தடைந்தார்.
கையடக்க தொலைபேசி, நிலையான தொலைபேசி, இணையம், தொலைக்காட்சி ஆகியவற்றுக்கான சேவைக் கட்டணங்கள் அனைத்தையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த சேவைக் கட்டண திருத்தங்கள் செப்டம்பர் 5 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கையடக்க தொலைபேசி, நிலையான தொலைபேசி, இணைய சேவைக் கட்டணங்கள் 20% அதிகரிக்கப்படும்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இலங்கையின் தற்போதைய சிரமங்களை சமாளிக்கவும், கடன் சுமையை குறைக்கவும், நிலையான வளர்ச்சியை அடையவும் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவை வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நடாத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2018 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. அதன் காலம் 2022 ஆம் ஆண்டு முடிவடைய இருந்தது. அமைச்சருக்கு உள்ள அதிகாரத்த்டதிற்கமைய அதன் காலம் 2023 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது.