முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்க அரசியலில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற பெயரில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கு பரிச்சயமான பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா, இன்று (10) இதுகுறித்து ஊகம் வெளியிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை தன்னால் கணிக்க முடியாது எனவும் ஆனால் விமுக்தியை அரசியலுக்கு வருவதற்கான எந்தவொரு கலந்துரையாடலும் தற்போது நடைபெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது மகன் அரசியலுக்கு வருவதை முன்னர் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.