கிளிநொச்சி வட்டக்கச்சியைச் சேர்ந்த தோழர் சோ (குணசிங்கம் சிறீஸ்கந்தராஜா – சிறீ) அவர்கள் சுகயீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்றிரவு இயற்கை எய்தினார். இவர் ஆரம்ப காலங்களில், கழகத்தின் தொலைத்தொடர்பு மற்றும் ஒலிபரப்பு துறைகளின் முக்கியஸ்தராக பணியாற்றியவர். Read more
14.09.2014இல் மட்டக்களப்பில் மரணித்த தோழர் ராமையா (செல்லத்துரை தங்கராசா) அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று..
இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை 38ஆக அதிகரித்திருப்பது, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கும் உதவிக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து உதவிகளைப் பெறுவதில் உள்ள தடைகளை போக்குவதில் அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை எனவும் கூறினார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பிலான புதிய பிரேரணை வரைபு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜெர்மனி, மசிடோனியா மற்றும் மலாவி ஆகிய நாடுகளின் இணை அனுசரணையில் இந்த பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆக வரையறுப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை அமல்படுத்தும் சுற்றறிக்கை, பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சினால், இன்று (14) வௌியிடப்பட்டது.
இலங்கையின் சுற்றுலாத் துறையின் அபிவிருத்தி மற்றும் பல்கலைக்கழக கல்வி வாய்ப்புகளை வழங்குவது தொடர்பில் நேபாளத்திற்கும் இலங்கைக்கும் இடையில் இருதரப்பு உடன்படிக்கையை எட்டுவதற்கான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் இன்று (14) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.
ஜனநாயகம், மனித உரிமைகள், சட்டம், நல்லாட்சி, வெளிப்படைத்தன்மைக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie J.Chung) தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பிரச்சினைகள் குறித்து முன்வைக்கப்படும் வெளியக பொறிமுறையானது, இலங்கைக்கும் அரசியலமைப்புக்கும் முரணான விடயமாகும் என தெரிவித்த அரசாங்கத்தின் பதில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஸ் பத்திரண, தேசிய பொறிமுறை ஊடாக இலங்கையின் அரசியலமைப்புக்கு பொருத்தமான ஏற்ற பொறிமுறை ஊடாக இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளும் நிலைப்பாட்டில் தான் அரசாங்கமும் ஜனாதிபதியும் இருக்கின்றார்.