கையடக்க தொலைபேசி, நிலையான தொலைபேசி, இணையம், தொலைக்காட்சி ஆகியவற்றுக்கான சேவைக் கட்டணங்கள் அனைத்தையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த சேவைக் கட்டண திருத்தங்கள் செப்டம்பர் 5 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கையடக்க தொலைபேசி, நிலையான தொலைபேசி, இணைய சேவைக் கட்டணங்கள் 20% அதிகரிக்கப்படும். Read more
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இலங்கையின் தற்போதைய சிரமங்களை சமாளிக்கவும், கடன் சுமையை குறைக்கவும், நிலையான வளர்ச்சியை அடையவும் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவை வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நடாத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2018 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. அதன் காலம் 2022 ஆம் ஆண்டு முடிவடைய இருந்தது. அமைச்சருக்கு உள்ள அதிகாரத்த்டதிற்கமைய அதன் காலம் 2023 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது.
இலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (02.09.2022) வெள்ளிக்கிழமை காலை 07.00 மணியளவில் யாழ். தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபிக்கு அருகாமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நினைவுச்சுடர் ஏற்றல், மௌன அஞ்சலி மற்றும் மலரஞ்சலி இடம்பெற்றது.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முன்னாள் உபதலைவரும், இராணுவத் தளபதியுமான அமரர் தோழர் மாணிக்கம் ராஜன் (மாணிக்கதாசன்) மற்றும் மறைந்த தோழர்கள் தர்மலிங்கம் தேவராஜா(இளங்கோ), முருகேசு குணரட்ணம்(வினோ) ஆகியோரின் 23ஆவது நினைவு தினத்தையிட்டு
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முன்னாள் உபதலைவரும், இராணுவத் தளபதியுமான தோழர் மாணிக்கதாசன் (நாகலிங்கம் மாணிக்கம் ராஜன் – யாழ்ப்பாணம்) மற்றும் தோழர்கள் இளங்கோ (தர்மலிங்கம்,தேவராஜா-புளியங்குளம்), வினோ (முருகேசு குணரத்தினம்- மட்டக்களப்பு) ஆகியோரின் 23ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
இவர் 1980களில் திருகோணமலை மாவட்டத்தில் காந்தீயத்தின் முக்கிய செயற்பாட்டாளராகவும், மூதூர் பகுதி காந்தீய பொறுப்பாளராகவும், திருமலை மாவட்டத்தில் புளொட்டின் ஆரம்பகால உறுப்பினராகவும், மூதூர்ப் பகுதி அமைப்பாளராகவும் செயற்பட்டவர்.