![]()
![]()
![]()
கட்சியின் மன்னார் மாவட்ட நிர்வாகத் தெரிவுக் கூட்டம் கட்சியின் தலைவர் த. சித்தார்த்தன் அவர்களின் தலைமையில், செயலாளர் தோழர். இரட்ணலிங்கம், தேசிய அமைப்பாளர் தோழர் ஆ. சிறீஸ்கந்தராஜா, நிர்வாகப் பொறுப்பாளர் தோழர் ம. பத்மநாதன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் 18.09.2022 அன்று முருங்கன் கமம் கிராமத்தில் நடைபெற்றது. Read more
வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் குமுழமுனை கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவரும் காணி அபகரிப்புக்கு எதிரான போராட்ட குழுவின் தலைவருமான இரத்தினராசா மயூரன் ஆகியோர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றினால் இன்று (22) பிணையில் செல்ல அனுமதிக்கப்ட்டுள்ளனர்.
வறுமைக் காரணமாக மாணவத் தலைவி ஒருவர் மதிய உணவுக்கு தேங்காய்த் துண்டுகளை பாடசாலைக்கு எடுத்து வந்ததாக தேசிய பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது. இதனையடுத்து குறித்த செய்தி தொடர்பில் தகவல்களைப் பெற ஜனாதிபதி அலுவலகம் நடவடிக்கை எடுத்தது.
அரச உத்தியோகத்தர்கள் அலுவலகத்திற்கு வரும் போது பொருத்தமான அலுவலக உடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றறிக்கையை வெளியிட பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது. 
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632 ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் இன்றையதினம் (21) குருந்தூர்மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 
21.09.1988இல் நீர்கொழும்பில் மரணித்த தோழர்கள் சுரேஸ் (இ.சுந்தரேசன்), கருணா (அச்சுவேலி) ஆகியோரின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நிர்வாகத் தெரிவுக் கூட்டம் கட்சியின் தலைவர் த. சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் 16.09.2022 அன்று சுண்ணாகத்தில் நடைபெற்றது.
இலங்கைக்கு இந்தியாவிடம் இருந்து மேலதிக உதவிகள் கிடைக்காது என்று வெளியாகிய செய்தி அறிக்கைகளை இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், இன்று (20) விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.