Header image alt text

ரயில் மார்க்கங்களின் பராமரிப்புக்கு தேவையான உதிரிபாகங்கள் உடனடியாகக் கிடைக்காவிட்டால், எதிர்காலத்தில் ஏற்படும் கோளாறுகள் காரணமாக மேலும் பல ரயில்கள் தடம் புரளும் என்று இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read more

தற்போதுள்ள நெருக்கடிக்களை வெற்றிகொண்டு, வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என பிரித்தானிய வாழ் இலங்கையர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புலம்பெயர் அலுவலகப் பணிகள் உள்ளிட்ட இலங்கையில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். Read more

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் கழகத் தோழர் கீர்த்தி அவர்களின் நிதிப்பங்களிப்பில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக கட்சியின் இரு கிராம மகளிர் அமைப்புகளுக்கு தலா ரூ 50,000.00 வீதம் வழங்கப்பட்டுள்ளன. Read more

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாகத் தெரிவுக் கூட்டம் கட்சியின் பொருளாளர் க. சிவநேசன் (பவன்) அவர்களின் தலைமையில், 17.09.2022 சனிக்கிழமை நடைபெற்றிருந்தது. Read more

19.09.2005இல் வவுனியாவில் மரணித்த தோழர் சித்தப்பா (செ.யோகானந்தராசா – கணேசபுரம்) அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இனத்துவ நிலத் தொடர்ச்சியை துண்டிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். Read more

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவு மற்றும் யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, குருநாகல் மற்றும் மாத்தறை பிராந்திய அலுவலகங்களில் ஏற்பட்ட சான்றளிப்பு மற்றும் சரிபார்ப்புப் பிரிவின் கணினி அமைப்பிலான செயலிழப்புக் கோளாறுகள் சீரமைக்கப்பட்டு, குறித்த சான்றளிப்பு மற்றும் சரிபார்ப்பு சேவைகள் 2022 செப்டம்பர் 20 (நாளை) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது என்பதை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பொது மக்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றது. Read more

இந்த ஆண்டின் கடந்த நான்கு மாதங்களில் இலங்கைக்கு 968 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் நிதியை பெற்றுக்கொடுத்துள்ள இந்தியா, சீனாவை விஞ்சிய வகையில், இலங்கைக்கு அதிக கடன்களை வழங்கிய இருதரப்பு நாடாக மாறியுள்ளதாக சர்வதேச அமைப்புகளின் அவதானிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

தேசிய இன விடுதலைப் போராட்டத்தை இடதுசாரிக் கோட்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்க அயராது உழைத்தவர்,

தமிழ் இளைஞர் பேரவையின் உறுப்பினர்,

காந்தீயம் அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர், Read more

18.09.1998ல் வவுனியாவில் மரணித்த தோழர்கள் யோகன் ( பூபாலப்பிள்ளை யோகநாதன்), ஜெகன் (ஜெகநாதன் ஜெயக்குமார்) ஆகியோரின் 24ம் ஆண்டு நினைவுநாள் இன்று…