மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பிரதேசத்தில் முன்னாள் விடுதலைப் புலிகளின் முகாமான ஜீவன் முகாம் அமைந்துள்ள பகுதியிலிருந்து பெரும் திரளான வெடிபொருட்களை இன்று (16) வெள்ளிக்கிழமை   விசேட அதிரடிப்படையினர் வாழைச்சேனை நீதிமன்ற மேலதிக நீதவான் ரி.கருணாகரன் முன்னிலையில் மீட்டுள்ளனர் என வாகரை பொலிஸார் தெரிவித்தனர். Read more
		    
சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயற்சித்த 26 பேர் யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணியில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவும் இன்று அதிகாலையும் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்தது.
வெளிநாட்டு தூதுவர்கள் இருவர் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை இன்று (16) கையளித்தனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான 2 வெளிநாட்டு தூதுவர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர். 
இலங்கையில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், நாட்டில் தற்போது  அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுடன் ஒத்துப்போவதில்லை. இந்தநிலையில் வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்லும் இலங்கையர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமகால அடிமைத்தனம் பற்றிய ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் டொமோயா ஒபோகாடா முன்வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,  ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையில் நன்மைகள் இலங்கையில் தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை எனவும்  அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
இலங்கையிலுள்ள சிறுவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களைத் தொடர்புபடுத்தி சிறுவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உருவாக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் எதிர்வரும் 21ஆம் திகதி கூடவுள்ளது. 
ஏப்ரல்  தாக்குதல் தொடர்பான தனிப்பட்ட மனு தொடர்பில் ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அத்துடன், குறித்த தனியார் மனுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தேக நபராக பெயரிட நீதவான் திலின கமகே  
ஜெனிவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 51 ஆவது கூட்டத்தொடரில், அதன் இறுதித் தீர்மான அறிக்கையில் இலங்கையின் வட மாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகள் மற்றும் அபிலாஷைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு யாழ்ப்பாணத்திலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.  
2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதிவாதிகள் அறுவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில், இன்று (15) அதிகுற்றப்பத்திரம் பகிரப்பட்டது. 
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 13 கைதிகள் கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒருவர் சுகவீனமுற்று சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  
கொரோனாவின் எதிர்கால வைரஸ் திரிபுகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் விழிப்புணர்வைத் தக்க வைத்துக் கொள்ளுமாறும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் உலக நாடுகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.