Header image alt text

மன்னார் உயிர்த்தராசன்குளத்தில் கூட்டமைப்பு வேட்பாளர் கலந்துரையாடல்-

Mannar PLOTE Candidate iruthayanathan Charlesமன்னார் பிரதேச சபைக்குட்பட்ட உயிர்த்தராசன்குளம் கிராமத்திற்கு நேற்றையதினம் விஜயம் செய்திருந்த மன்னார் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் இலக்கம் 03இல் போட்டியிடும் புளொட் வேட்பாளர் இருதயநாதன் சார்ள்ஸ் அவர்கள் கிராம மக்களையும் கிராம மட்டத்திலான அமைப்புக்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்துகொண்ட வேட்பாளர் சார்ள்ஸ் வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்ய வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறியதுடன் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளிக்காட்டி நிற்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். வேட்பாளர் சார்ள்ஸூடன்; கூட்டமைப்பின் வேட்பாளர்கள் குணசீலன், சிவகரன், விமலசேகரம் மற்றும் ஆதரவாளர்களும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர். இதேவேளை வேட்பாளர் இருதயநாதன் சார்ள்ஸ் அவர்களுக்கு மன்னார் அடம்பன் பிரதேசத்தில் நேற்று முன்தினம் கிளை அலுவலகமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது இவ்விதமிருக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட புளொட் வேட்பாளர் இருதயநாதன் சார்ள்ஸ் மற்றும் ஆதரவாளர்கள் தலைமன்னார் பியர் கிராமங்களுக்கு கடந்த 13ஆம் திகதி விஜயம் செய்து அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர்

adampan thalaimannar piyar  (2) uyirtharasankulam  (7)

News

Posted by plotenewseditor on 16 August 2013
Posted in செய்திகள் 

மன்னார் உயிர்த்தராசன்குளத்தில் கூட்டமைப்பு வேட்பாளர் கலந்துரையாடல்-

Mannar PLOTE Candidate iruthayanathan Charlesமன்னார் பிரதேச சபைக்குட்பட்ட உயிர்த்தராசன்குளம் கிராமத்திற்கு நேற்றையதினம் விஜயம் செய்திருந்த மன்னார் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் இலக்கம் 03இல் போட்டியிடும் புளொட் வேட்பாளர் இருதயநாதன் சார்ள்ஸ் அவர்கள் கிராம மக்களையும் கிராம மட்டத்திலான அமைப்புக்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்துகொண்ட வேட்பாளர் சார்ள்ஸ் வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்ய வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறியதுடன் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளிக்காட்டி நிற்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். வேட்பாளர் சார்ள்ஸூடன்; கூட்டமைப்பின் வேட்பாளர்கள் குணசீலன், சிவகரன், விமலசேகரம் மற்றும் ஆதரவாளர்களும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர். இதேவேளை வேட்பாளர் இருதயநாதன் சார்ள்ஸ் அவர்களுக்கு மன்னார் அடம்பன் பிரதேசத்தில் நேற்று முன்தினம் கிளை அலுவலகமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது இவ்விதமிருக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட புளொட் வேட்பாளர் இருதயநாதன் சார்ள்ஸ் மற்றும் ஆதரவாளர்கள் தலைமன்னார் பியர் கிராமங்களுக்கு கடந்த 13ஆம் திகதி விஜயம் செய்து அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர்

இந்திய சிறைகளிலுள்ள இலங்கையர்களை அழைத்துவர ஏற்பாடு

இந்தியாவின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருப்பதாகஇ சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி இந்திய சிறைகளில் உள்ள இலங்கையர்கள் குறித்த விபரங்களை சேகரிக்கப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் பீ.பீ.குலதுங்க குறிப்பிட்டுள்ளார். தெற்காசிய பிராந்திய நாடுகளுக்கு இடையிலான உடன்படிக்கையின் கீழ் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கைதி பரிமாற்றங்கள் இடம்பெறுகின்றன. இதன்படி இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 9 கைதிகள் இந்தியாவுக்கு மாற்றப்படவுள்ளனர். அவர்களில் நான்கு பேர் ஏற்கனவே தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில்இ எஞ்சியவர்களை விரைவில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சி –  சுண்ணாகம் புதிய மின் விநியோக கட்டமைப்பு

கிளிநொச்சியில் இருந்து சு ண்ணாகம் வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதியுயர் மின் விநியோக கட்டமைப்பின் ஊடாக இன்றுமுதல் மின்சாரம் விநியோகிக்கப்படவுள்ளது. இந்த மின்சார விநியோக கட்டமைப்பு அதிக அழுத்த மின்கம்பிகளைக் கொண்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக யாழ் மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. இதற்கமைய ஏற்கனவே முன்னெடுக்கப்படுகின்ற மின்சார விநியோகம்இ ஒரு இலட்சம் 32 ஆயிரம் வோல்ட்களைக் கொண்ட அதியுயர் மின் அழுத்த கட்டமைப்பிற்கு இன்று மாற்றப்படவுள்ளது. ஒருமாத காலத்திற்கு பரீட்சார்தமாக இந்த மின்விநியோகம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.   கச்சதீவில் இந்திய கொடியை ஏற்றச் சென்றவர்கள் கைது- கச்சதீவில் இந்திய தேசியக் கொடியை ஏற்றுவதற்குச் சென்ற தேவர் தேசியப் பேரவையைச் சேர்ந்த 69பேரை இந்திய பொலீசார் கைது செய்துள்ளனர். கச்சத்தீவை மீட்கக் கோரியும்இ அங்கு இந்திய தேசியக் கொடியை ஏற்றப்போவதாகவும் தேவர் தேசியப் பேரவையினர் அறிவித்திருந்தனர். இதையடுத்து பேரவையின் தலைவர் கே.சி.திருமாறன் தலைமையில் அரசரடியில் உள்ள மூக்கையாத் தேவர் சிலை முன்பு நேற்று கூடியள்ளனர். சிலைக்கு மாலை அணிவித்த அவர்கள் கச்சத்தீவுக்குச் செல்வதாகக் கூறி புறப்பட்டுள்ளனர். தகவலறிந்த பொலீசார் அங்கு விரைந்துஇ கே.சி.திருமாறன் உள்ளிட்ட 69 பேரையும் கைது செய்துள்ளனர். விசாரணையின் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.   நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம்- உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு விஜயம் செய்வார் என அவரது அலுவலகம் அறிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று இங்குவரும் நவநீதம்பிள்ளை ஓகஸ்ட் 25ஆம் திகதிமுதல் 31ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பார் என அவரது ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இலங்கையில் நவநீதம்பிள்ளை நீதித்துறை சிரேஷ்ட அதிகாரிகளை சந்திக்கவுள்ளார். அத்துடன்இ ஜனாதிபதி மகிந்த ராஜபக்சஇ பாதுகாப்பு செயலர்இ அமைச்சர்கள்இ அதிகாரிகள்இ அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரையும் சந்தித்துக் கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

பொதுநலவாய ஏற்பாட்டுக்குழு இலங்கைக்கு விஜயம்-

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் ஏற்பாடுகளை அவதானிப்பதற்காகஇ 15 நாடுகளின் 70 பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர். அவர்கள் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு இலங்கையில் தங்கி இருப்பார்கள் என்றுஇ பொதுநலவாய நாடுகளின் செயற்குழு தெரிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பங்கேற்கவென இலங்கை வருகின்ற அரச தலைவர்களுக்கான ஏற்பாடுகளை அவதானிப்பதே இவர்களின் நோக்கம் என்று தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் நவம்பர் மாதம் 15ம் திகதி முதல் 17ம் திகதி வரையில் இந்த மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.   கண்டியில் ஏழு அரேபியர்கள் கைது- இஸ்லாமிய மார்க்கம் சம்பந்தப்பட்ட துண்டுப் பிரசுரங்களை கண்டி நகரில் விநியோகித்துக் கொண்டிருந்ததாக கூறப்படும் அரேபிய நாட்டைச் சேர்ந்த ஏழு பேரை கண்டி பொலீசார் கைது செய்துள்ளனர். கண்டி நகரில் பொதுமக்கள் மத்தியில் மேற்படி துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்படுவதாக பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட அரேபியர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது தாம் இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான துண்டுப் பிரசுரம் விநியோகித்ததாக ஒப்புக்கொண்டதையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.

உணவுப் பொருட்கள் சந்தையிலிருநது அகற்றல்- 

  கடந்த 48 மணித்தியாலங்களுள்இ வே புரோட்டின் கலக்கப்பட்ட 99 ஆயிரத்து 641 உணவுப் பொருட்கள் நாட்டின் சந்தையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன. இலங்கை பொதுஜன சுகாதார பரிசோதகர்களின் சங்கம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. பால்மாஇ சொக்கலேட்கள்இ சீஸ் மற்றும் சீஸ் உள்ளடக்கப்பட்ட உணவுப் பொருட்கள் என்பனவே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளன.

Untitled Post

Posted by plotenewseditor on 15 August 2013
Posted in செய்திகள் 

தேர்தலை நீதியாக நடத்துமாறு இந்தியா வலியுறுத்தல்-

வடக்கு மாகாணசபைத் தேர்தல் நீதியாகவும்இ நியாயமாகவும்இ நம்பகமான முறையிலும் நடத்தப்பட வேண்டும் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.  இந்தியாவின் 67 ஆவது சுதந்திர தினத்தையொட்டிஇ கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் யஸ்வர்த்தன் குமார் சின்ஹா வெளியிட்டுள்ள செய்தியிலேயே  மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில்இ யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாரிய மனிதநேய உதவிகளை இந்திய வழங்கி வந்துள்ளது. அதேவேளைஇ பயங்கரவாத சக்திகளுக்கு எதிராக பகைமையில் பெரும்பாலும் தமிழ்மக்களின் உரிமைகள் சேமநலன்களை அலட்சியப்படுத்திவிடக் கூடாது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதன் மூலம் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டியது அவசியமாகும். 13 ஆவது திருத்தத்தை வலுப்படுத்துவதற்கான அரசியல் யோசனைகள் தொடர்பாக நம்பகரமான பேச்சுவார்த்தைகள் இனப்பிரச்சினை தீர்வுக்கு ஆக்கபூர்வமாக வழிவகுக்கும். நிலையான அரசியல் தீர்வு ஒன்று காண்பதாகஇ இந்தியாவுக்கும்இ அனைத்துலக சமூகத்துக்கும் அளித்த வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் காப்பாற்ற வேண்டும். சமத்துவம்இ நீதிஇ கௌரவம்இ சுயமரியாதையுடன் கூடிய அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை உறுதிப்படுத்துவதன் மூலமேஇ இலங்கையில் உள்ள தமிழர்கள் உள்ளிட்ட எல்லா குடிமக்களும் சம பங்காளராக வாழ முடியும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் சிறு வயது திருமணங்கள் அதிகரிப்பு-  

2009ஆம் ஆண்டளவில் இலங்கையில் சிறு வயது திருமணங்கள் 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பின்தங்கிய கிராமப் பிரதேசங்களிலேயே இவ்வாறான சிறுவயது திருமணங்கள் இடம்பெற்றுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. இது தவிரஇ 20 வயதுக்கு குறைவான இளம் பெண்கள் தாய்மையுறும் நிலைமையும் 18 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. நகரப் பிரதேசங்களில் சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்;படும் நிலையும் அதிகரித்துள்ளது. எனவேஇ சிறுவயது பெண்கள் இவ்வாறு வன்புணர்வுக்கு உட்படுகின்றமை தொடர்பில் தெளிவூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் முனைப்புக் காட்டவேண்டும். ஆசிய வலயத்தில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை பெரிதும் பாதிப்பற்ற நிலையில் உள்ளது என யுனிசப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் இலங்கை வர தீர்மானம் இல்லை-

நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்யும் திட்டத்தில் இல்லையென இலங்கைக்கான நியூசிலாந்து கொன்சொல் அலுவலகம் தெரிவித்துள்ளது. நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் இலங்கை வர இதுவரை தீர்மானிக்கவில்லை என இலங்கை கொன்சொல் சேனக சில்வா கூறியுள்ளார். நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் மரே மெக்கலி இந்த வாரத்தில் இலங்கைக்கு வருகைரவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அந்த செய்திகளில் உண்மை இல்லை என சேனக சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தாய்மார் வெளிநாடு செல்வதை தடுக்கும் சட்டம்-

5 வயதுக்குக் குறைந்த பிள்ளைகளின் தாய்மார்கள் தொழில் வாய்ப்பிற்காக வெளிநாடு செல்வதை தடைசெய்யும் சட்டத்தை உடன் அமுலுக்கு கொண்டுவரவுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் 18 வயதுக்குக் குறைந்த பிள்ளைகளையுடைய தாய்மார்கள் தொழில் வாய்ப்பிற்காக வெளிநாடு செல்வதை தடைசெய்வதற்கு பேச்சுவார்தைகள் நடத்தப்பட்டிருந்ததாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்துள்ளார். எனினும்இ அந்த யோசனையை நடைமுறைப்படுத்தாது 5வயதுக்குக் குறைந்த பிள்ளைகள் உள்ள தாய்மார்களுக்கு அந்த தடையை விதிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

வாக்காளர் அட்டை விநியோகம்-

வடக்குஇ மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தலின் வாக்காளர் அட்டை விநியோகத்தை எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பிக்க தேர்தல்கள் செயலகம் தீர்மானித்துள்ளது. வாக்குச் சீட்டுகளையும் அதேநாளில் தபாலில் சேகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. செப்டெம்பர் 8ஆம் திகதி விசேட விநியோக தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் கூறுகின்றது. வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கைகள் செப்டெம்பர் 13ஆம் திகதியுடன் நிறைவடையும் என தேர்தல்கள் செயலக ஆலோசகர் டபிள்யூ.பீ.சுமனசிறி தெரிவித்துள்ளார். இம்முறை மாகாண சபைத் தேர்தலின் பொருட்டு 43 இலட்சத்து 58 ஆயிரத்து 263 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

யாழ். மாநகர சபையின் ஆட்சி காலம் நீடிப்பு-

யாழ். மாநகர சபையின் ஆட்சி காலம் மேலும் ஒரு வருடாகாலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது என உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு  அறிவித்துள்ளது. மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின்  10ஆம் பிரிவின் 2ஆம் உப பிரிவின் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரின் அதிகாரத்தின் கீழ் இந்த காலநீடிப்புச் செய்யப்பட்டுள்ளது எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. யாழ். மாநகர சபை உறுப்பினர்களின் பதவி காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையிலேயே எதிர்வரும் 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31ஆம் திகதிவரை உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் கடந்த ஜூலை 29ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் கூறியுள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பாதுகாப்பு செயலர் சந்திப்பு-

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ சந்தித்து பேச்சு நடத்துவார் என பிரதம பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் ஜகத் ஜெயசூரிய அறிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது நாட்டின் பாதுகாப்பு நிலமை மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்கள் தொடர்பில் நவநீதம்பிள்ளைக்கு பாதுகாப்பு செயலாளர் தெளிவுபடுத்துவார் எனவும் பிரதம பாதுகாப்பு அதிகாரி குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை முறியடிப்பதற்கு நாம் கவனமாக செயற்பட வேண்டும் என ஜெனரல் ஜெயசூரிய குறிப்பிட்டுள்ளார்.


News

Posted by plotenewseditor on 14 August 2013
Posted in செய்திகள் 

இலங்கை – இந்திய கைதிகள் பரிமாற்றம்-

தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ளும் வகையில்இ 2010இல் இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாகஇ கொழும்புஇ வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட நான்கு இந்தியக் கைதிகள் தமிழ்நாட்டின் திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இலங்கைக்கு விஜயம் செய்த தமிழ்நாடு பொலிஸ் குழுவொன்று இவர்களை விமானம்மூலம் நேற்றுக்காலை திருச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளது. இவர்கள் திருச்சி மத்திய சிறையிலும் பெண்கள் சிறையிலும் அடைக்கப்படவுள்ளனர். இவர்களில் மூவர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றவர்கள். அவர்களில் ஒருவர் 10 ஆண்டுகளையும்இ இரு பெண்களில் ஒருவர் ஆறு ஆண்டுகளையும்இ மற்றவர் ஐந்து ஆண்டுகளையும் சிறையில் கழித்துள்ளனர். 11 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஆண் கைதி வெலிக்கடையில் 10 ஆண்டுகளை கழித்துள்ளார். எஞ்சிய தண்டனைக் காலத்தை இவர்கள் இந்திய சிறையில் அனுபவிக்கவுள்ளார். மேலும் இரண்டு கைதிகள் இன்றும்இ மூன்று கைதிகள் நாளையும் கொழும்பில் இருந்து திருச்சிக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பற்ற ரயில் கடவைகளுக்கு பாதுகாப்பு-

நாட்டில் உள்ள 621 பாதுகாப்பற்ற ரயில் கடவைகளுள் 598ற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். அண்மைய நாட்களில் அதிகரித்த பாதுகாப்பற்ற ரயில் கடவை விபத்துக்களை அடுத்து பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் உள்ள இடங்களில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும்படி கடந்த ஜூலை 2ம் திகதி ஜனாதிபதி பணிப்புரை ஒன்றை விடுத்துள்ளார். இந்த பணிப்புரை விடுக்கப்பட்டது தொடக்கம் இதுவரையில் 598 பாதுகாப்பற்ற ரயில் கடவைகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். சிவில் பாதுகாப்பு படையினர்இ பொலிஸார் மற்றும் கிராம சேவகர்களின் உதவியுடன் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பக்கச்சார்பற்ற விசாரணைக்கு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்-

கம்பஹாவின் வெலிவேரிய மற்றும் கொழும்பின் கிரான்ட்பாஸ் வன்முறைச் சம்பவங்கள் குறித்து உரிய விசாரணை நடாத்தப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இவ்விரு சம்பவங்கள் குறித்தும் கூடிய கவனம் செலுத்தி வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. அனைத்து இலங்கை பிரஜைகளினதும் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யக்கூடிய வகையில் பக்கச்சார்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆகஸ்ட் 1ம் திகதி வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன்இ பலர் காயமடைந்திருந்தனர். ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி கிரான்ட்பாஸ் பகுதியில் பள்ளிவாசல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிலர் காயமடைந்திருந்தனர். அமைதியான முறையில் மக்கள் ஒன்று கூடுதல்இ சுதந்திரமாக மத வழிபாடுகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.

தபால் மூலம் வாக்களிக்க 100இ000க்கு மேற்பட்டோர் விண்ணப்பம்-

செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணபித்துள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதில் அதிகமான 45இ969 விண்ணப்பங்கள் குருநாகல் மாவட்டத்திலேயே கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளைஇ சுமார் 39இ000 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் கண்டி மாவட்டத்திலும் 11இ000 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நுவரெலியா மாவட்டத்திலும் கிடைக்கப் பெற்றுள்ளன. 12இ000 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் யாழ். மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளன. தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதியானவர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதி நிறைவடையவுள்ளது. மாகாண சபை தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பு எதிர்வரும் செப்டெம்பர் 09ஆம் மற்றும் 10ஆம் திகதிகதிகளில் நடைபெறவுள்ளது என தேர்தல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஆட்கடத்தல் தொடர்பில் கைதானவர்களில் கடற்படை வீரர்களும் உள்ளடக்கம்-

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு ஆட்கடத்தலில் ஈடுபட்டமை தொடர்பில் கைதானவர்களில்இ கடற்படையின் 03 வீரர்களும்இ கடற்படையில் பணியாற்றும் மேலும் சிலரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்இ பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க சிறிவர்தன குறிப்பி;ட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர்களால் இந்த ஆட்கடத்தல் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும்இ அவுஸ்திரேலியாவிற்கு ஒருவரை அனுப்புவதற்கு 8 இலட்சம் ரூபா பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு ஆட்கடத்தலில் ஈடுபடுகின்றமையுடன் தொடர்புடையதாகத் தெரிவித்துஇ 14 பேர் நேற்று மாத்தறை குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரை கைதுசெய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

வலிகாமம் வடக்கில் மக்களுக்கு தெரியாமல் காணி சுவீகரிப்பு-

யாழ். வலிகாமம் வடக்கில். கடல் வளம் மிகுந்த காணிகளை இராணுவ தேவைக்காக சுவீகரிப்பது அப்பிரதேச மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவித்துள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தற்போது வாழ்வாதாரங்கள் மற்றும் வாழ்விடங்களை இழந்து அனாதைகளாக உள்ள நிலையில் காணிகள் சுவீகரிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். சுதந்திரத்திற்கான அரங்கம் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில்  உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரதேசத்தில் மக்கள் குடியேறவில்லைஇ அங்கு மக்கள் மீளச் செல்லமுடியாத நிலைமையில் அந்த பிரதேசங்களை மக்களுக்கு தெரியாமல் இராணுவம் சுவீகரிக்கின்றது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அரச அதிகாரிகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இவ்வாறான நடவடிக்கையின்போது அரச அதிகாரிகளும் அச்சத்துடனேயே தங்களுடைய கடமைகளை முன்னெடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

annar and kajatheepan

News

Posted by plotenewseditor on 13 August 2013
Posted in செய்திகள் 

13.08.2013.
ஆஸி செல்ல முற்பட்டவர்கள் தடுத்து வைப்பு-
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முற்பட்ட 111 புகலிடக் கோரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டு காலி துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். களுத்துறை மாவட்டம் பேருவளையிலிருந்து கடந்த 7 ஆம் திகதி ருவன்புத்தா என்ற படகுமூலம் சென்ற இந்தப் புகலிடக் கோரிக்கையாளர்கள் கடந்த 10ஆம் திகதியன்று காலி கடற்படை முகாம் பகுதியிலிருந்து 250 மைல் தொலைவில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காலி துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் ஆணையாளர் கலந்துரையாடல்-

 வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கான தேர்தல்கள் தொடர்பில், தேர்தல் இடம்பெறவுள்ள மாவட்டங்களின் உதவி தேர்தல் ஆணையாளர்களுடன், தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மகிந்த தேசப்பிரிய கலந்துரையாடவுள்ளார். நாளை மறுதினம் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேபோல் எதிர்வரும் 16ம் திகதி தேர்தல்கள் ஆணையாளருக்கும், மாவட்ட உதவி ஆணையாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளது. இதேவேளை, மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் தொடர்பிலான முறைபாடுகளும் அதிகரித்து வருகின்றன. இதுவரையில் இவ்வாறான 87 முறைபாடுகள், கொழும்பு தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டுப் பிரிவுக்கு கிடைத்துள்ளன.

இந்தியா இலங்கையிடம் இருந்து ஆயுதம் கொள்வனவு –

இந்தியா கடந்த மூன்று வருடங்களாக இலங்கையிடம் இருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி இதனைத் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் பதில் வழங்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தியா கடந்த மூன்று வருடங்களில் 235 ஆயிரம் கோடி இந்திய ரூபாய்களுக்கு வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளது. ரஷ்யா, இஸ்ரேல், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் இருந்து இவை கொள்வனவு செய்யப்பட்டுள்ளன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை அவசியம் –
சொல்ஹெய்ம்- இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என நோர்வேயின் முன்னாள் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான விசேட தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இலங்கை வாழ் தமிழ் அரசியல் தலைவர்களின் ஒத்துழைப்புடன் புலம்பெயர் தமிழர்கள் அஹிம்சை வழியில் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர் தமிழர்கள் சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், ஜனநாயகத்தையும் பொருளாதார உரிமைகளையும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர். உள்ளக ரீதியில் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணை நடத்தப்படாவிட்டால் சர்வதேச சமூகம் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணைகளை நடத்த வேண்டும். யுத்தம் நிறைவடைந்து நான்காண்டுகள் கடந்துள்ளன. ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் தாமதம் ஏற்படுவதனை தொடர்ந்தும் நியாயப்படுத்த அனுமதிக்க முடியாது. இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை, குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை குறித்து இலங்கைக்கு வலுவான செய்தியொன்றை வழங்க வேண்டும் என நோர்வே முன்னாள் அமைச்சர் எரிக் சோல்ஹெய்ம் மேலும் கூறியுள்ளார்.

 

 ஐ.நாவின் 24ஆவது கூட்டத்தொடரில் நவநீதம்பிள்ளை விசேட உரை-
ஐக்கிய நாடுகளின் 24ஆவது கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை தொடர்பில் விசேட உரையாற்றவுள்ளார். இந்த 24அவது கூட்டத்தொடர் எதி;ர்வரும் செப்டம்பர் 9ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 27ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் மனித உரிமை விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளது. 47 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்று உரையாற்றவுள்ளனர். அத்துடன் சில நாடுகளுக்கு எதிரான பிரேரணைகளும் இதன்போது தாக்கல் செய்யப்படவுள்ளன. இந்நிலையில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் 25ஆம் திகதிமுதல் 31ஆம் திகதிவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்

வவுனியாவில் கூட்டமைப்பின் புளொட் வேட்பாளர்கள் பங்கேற்ற நிகழ்வும், கலந்துரையாடலும்-

10

வவுனியா திருநாவற்குளம் ஐயனார் முன்பள்ளி பாடசாலையின் 2013ம் ஆண்டுக்கான வருடாந்த விளையாட்டுப் போட்டி 11.08.2013 அன்று பிற்பகல் 2.00 மணியளவில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இந் நிகழ்விற்கு திருமதி.ஜி.மரியா ரோஸ் அவர்கள் தலைமை தாங்கியதுடன் பிரதம விருந்தினர்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர்களான ஜி.ரி லிங்கநாதன் (விசு), க.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
இவ்விழா நிறைவடைந்த பின்னர் கூட்டமைப்பின் புளொட் வேட்பாளர்கள் ஜி.ரி லிங்கநாதன் (விசு), க.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோர் அப்பகுதி மக்களையும், ஆதரவாளர்களையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

வவுனியா பெரியார்குளத்தில் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்-

IMG_4135IMG_4131IMG_4129IMG_4125IMG_4158

வவுனியாபெரியார்குளத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று இன்று நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட வேட்பாளர்களான ஜி.ரி லிங்கநாதன் (வி சு), கே.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோரை ஆதரித்து ஊர்ப்பிரமுகர் வேலாயுதப்பிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் இரா.சுப்பிரமணியம், புளொட் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், கவிஞர் ஜெகன், கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட வேட்பாளர்களான ஜி.ரி லிங்கநாதன் (விசு), கே. சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோர் உரையாற்றினர். Read more

news

Posted by plotenewseditor on 12 August 2013
Posted in செய்திகள் 

தபால் மூல வாக்களிப்பு-

எதிர்வரும் வடக்கு, வட மேற்கு மற்றும் மத்திய மாகாண சபை தேர்தல்களின்போது தபால் மூலம் வாக்களிக்க ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் விண்ணப்பித்துள்ளனர். தேர்தல்கள் திணைக்களம் இதுவரை கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டங்களில் தபால்மூலம் வாக்களிக்க 12 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது தவிர குருநாகல் மாவட்டத்திற்காக 45 ஆயிரத்து 964 விண்ணப்பங்களும், கண்டி மாவட்டத்திற்காக 30 ஆயிரம் விண்ணப்பங்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தபால் மூலம் வாக்களிப்பவர்கள் குறித்த இறுதி தீர்மானம் எதிர்வரும் 15ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என தேர்தல்கள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தபால் மூலமான வாக்களிப்புக்கள் எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடுகள்-

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய வீடமைப்பு தொகுதி அமைக்கப்படவுள்ளது இதற்கான அனுமதி விரைவில் அமைச்சரவையினால் கிடைக்கப்பெறும் என்று அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்பட்டுள்ள வீடமைப்பு தொகுதியில் வசதிகள் இல்லாமை காரணமாகவே புதிய வீடமைப்புக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமரதுங்க குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் கடமையில் சுமார் 40 ஆயிரம் அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களிலேயே அதிகளவிலான அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் கூறியுள்ளார். இதேவேளை, வாக்களிப்பு நிலையங்களில் விசேட பாதுகாப்பு திட்டமொன்றை செயற்படுத்தவுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் கூறியுள்ளது.

தேர்தல் கடமையில் 40ஆயிரம் அரச ஊழியர்களை ஈடுபடுத்த நடவடிக்கை-

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் கடமையில் சுமார் 40 ஆயிரம் அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களிலேயே அதிகளவிலான அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் கூறியுள்ளார். இதேவேளை, வாக்களிப்பு நிலையங்களில் விசேட பாதுகாப்பு திட்டமொன்றை செயற்படுத்தவுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
வட மாகாண மக்களின் பிறப்பு, இறப்பு அத்தாட்சிப்பத்திரங்கள் கணனியில் பதிவேற்றம்- வடமாகாண மக்களின் பிறப்பு மற்றும் இறப்பு அத்தாட்சிப்பத்திரங்களை கணனியில் பதிவேற்றம் செய்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மாகாணத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் பிறப்பு மற்றும் இறப்பு அத்தாட்சிப் பத்திரங்களின் பிரதிகளை பெற்றுக்கொள்ள முடியும் என பதிவாளர் நாயகம் ஈ.எம்.குணசேகர குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கையால், காணாமற்போன அல்லது அழிவடைந்த பிறப்பு மற்றும் இறப்பு அத்தாட்சி பத்திரங்களின் பிரதிகளை பெற்றுக்கொள்வதில் வடமாகாண மக்களுக்கு எவ்வித அசௌகரியமும் ஏற்படாது என சுட்டிகாட்டப்பட்டுள்ளது. பிறப்பு பதிவு செய்யப்படாத எவரேனும் இருந்தால் உடனடியாக உரிய பிரதேச செயலகத்திற்கு சென்று அதற்கான தீர்வைப் பெற்றுக்கொள்ளுமாறு பதிவாளர் நாயகம் ஆலோசனை வழங்கியுள்ளது.

தேர்தல் வன்முறைகளை தடுக்க விசேட செயற்றிட்டம்-

தேர்தல் வன்முறைகளை தடுப்பதற்காக விசேட செயற்றிட்டமொன்றை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். புலனாய்வுப் பிரிவினரை பயன்படுத்தி தேர்தல் வன்முறைகள் இடம்பெறுவதற்கு முன்னரே அவற்றைத் தடுப்பதற்கான ஒழுங்குகளை செய்துள்ளதாக தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் காமினி நவரத்ன அறிவித்துள்ளார். தேர்தல் நடைபெறவுள்ள மாவட்டங்களிலுள்ள பிரதிநிதிகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களின் ஒத்துழைப்பும் இதற்காக பெறப்பட்டுள்ளது.  தேர்தல் சட்டம் மீறப்பட்டமை தொடர்பில் இதுவரை 10 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு  கிடைத்துள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் காமினி நவரத்ன குறிப்பிட்டுள்ளார். குருநாகல் மாவட்டத்தில் 5 முறைப்பாடுகளும், யாழ் மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு முறைப்பாடுகளும், கண்டியில் ஒரு முறைப்பாடும் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

கிராண்ட்பாஸ் தாக்குதல்; குறித்து அமெரிக்கா கவலை-

கொழும்பு,கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துக்கு அமெரிக்கா தனது கவலையை வெளியிட்டுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கொழும்பிலுள்ள அமெரிக்க உயர்ஸ்தானிகராலயம், மதஸ்தலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இவ்வாறான தாக்குதல் சம்பவங்களின்போது அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு அமைதியான முறையில் பிரச்சினைக்கு தீர்வுகாண முன்வர வேண்டும் என்றும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில், முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சம்பவங்களை கிராண்பாஸ் தாக்குதல் சம்பவம் வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு அதன்மூலம், மதஸ்தலங்கள் மீதான தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளியிடப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் (வீட்டுச்சின்னத்தில்) புளொட் வேட்பாளர்கள்.

Card copy

Mulllai

GT

Mohan