வவுனியா ஐக்கிய நட்சத்திர விளையாட்டுக் கழகத்திற்கு நிதியுதவி-

aikkiya natsaththira (1) aikkiya natsaththira (3) aikkiya natsaththira (5)வவுனியா ஐக்கிய நட்சத்திர விளையாட்டுக் கழகத்தின் மைதான புனரமைப்பு மற்றும் ஐக்கிய நட்சத்திர விளையாட்டுக் கழக நடவடிக்கைகளுக்காக புளொட் முக்கியஸ்தரும், வவுனியாவின் முன்னாள் உப நகரபிதாவும், கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமாகிய திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களால் ஐக்கிய நட்சத்திர விளையாட்டு கழகத்தின் தலைவரிடம் ரூபா 35,000 பெறுமதியான காசோலை நேற்று அன்பளிப்பு செய்யபட்டது. இந் நிகழ்வு நேற்றுமாலை கோவில்குளம் இளைஞர் கழக அலுவலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் புளொட் முக்கியஸ்தரும், முன்னாள் வவுனியா உப நகரபிதாவும், கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர் திரு.சேகர், கோவில்குளம் இளைஞர் கழகத்தைச் சேர்ந்த எம்.கண்ணதாசன், ஜனார்த்தனன், காண்டீபன், சதீஸ், நிகேதன் செல்வம், அகிலன், சசி, பாலா, நவநீதன், சுகந்தன் ஆகியோரும், ரொக்கற் விளையாட்டு கழகத்தின் தலைவர் செல்வம், செயலாளர் மோகன், ஐக்கிய நட்சத்திர விளையாட்டு கழகத் தலைவர் பிரசாத் உட்பட கழகத்தைச் சேர்ந்த பிரகாஷ் ஜோன்சன், தயாபரன், டிலச்சன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

சாந்தசோலை கலைவாணி முன்பள்ளிக்கு புத்தகப் பைகள் அன்பளிப்பு-

kalaivani munpalli (5)kalaivani munpalli (6)kalaivani munpalli (3)kalaivani munpalli (4)மாணவர்களின் கல்வி அபிவிருத்தி செயற்பாடுகளில் அதீத அக்கறையுடன் செயல்படும் கோவில்குளம் இளைஞர் கழகத்தின் மற்றுமொரு செயற்திட்டமாக கோயில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகர் திரு. க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் நெறிப்படுத்தலின்கீழ் வவுனியா சாந்தசோலை கலைவாணி முன்பள்ளிக்கு ஒருதொகை புத்தகப் பைகள் கடந்த 28.03.2014 வெள்ளிக்கிழமை அன்று அன்பளிப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரும், மத்திய குழு உறுப்பினருமான திரு.கந்தையா சிவநேசன் (பவன்) அவர்கள், ஆரம்ப கல்வியின் மூலமே சிறந்த கல்விமான்களாக உருவாக முடியும். எனவே மாணவர்களும், மாணவர்களின் ஆரம்பக் கல்வியில் பெற்றோர்களும் அக்கறையுடன் செயல்பட வேண்டும். எமது வன்னி பிரதேசத்தில் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவேண்டும் எனும் நோக்கில் செயல்பட்டுவரும் கோவில்குளம் இளைஞர் கழகம் தொடர்ந்தும் அதன் செயற்பாடுகளை விஸ்தரிப்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்றார். இந்நிகழ்வில் புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரும், மத்திய குழு உறுப்பினருமான திரு.கந்தையா சிவநேசன் (பவன்), புளொட் முக்கியஸ்தரும், வவுனியாவின் முன்னாள் உப நகரபிதாவும், கோயில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்), கோயில்குளம் இளைஞர் கழகத்தைச் சேர்ந்த கண்ணதாசன், காண்டீபன், சதீஸ் மற்றும் நிகேதன், சாந்தசோலை மாதர் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவி எஸ்.பவனாதேவி, முன்பள்ளி ஆசிரியை என்.குமுதினி மற்றும் பொதுமக்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

பிரேரணையை நிறைவேற்ற இலங்கை முழு அளவில் ஒத்துழைக்க வேண்டும்-

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டுவரப்பட்டமை சரியானதே என பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரேரணை முன்வைக்கப்பட்டமை குறித்து பிரித்தானிய பாராளுமன்றிக்கு அறிக்கை ஒன்றை சமர்பித்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் செயலர் வில்லியம் ஹேக் இதனைத் தெரிவித்துள்ளார். சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்குமென நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர், மனித உரிமைப் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்த சர்வதேச சமூகத்திற்கு இலங்கை ஆதரவளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். தீர்மானம் உரிய முறையில் நிறைவேற்றப்படுவதனை உறுதிசெய்யும் நோக்கில் சர்வதேச நாடுகளுடன் இணைந்து தொடர்ந்தும் பிரித்தானியா நடவடிக்கை எடுக்கும். தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள் சுயாதீன கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளமை உறுதியாகியுள்ளது. மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன்மூலம் இலங்கைக்கு மிக வலுவான செய்தி சொல்லப்பட்டுள்ளது. இலங்கையில் அனைத்து இன மக்களினதும் நியாயமான தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் இந்த தீர்மானம் அமைந்துள்ளது என வில்லியம் ஹக் மேலும் கூறியுள்ளார்.

இலங்கை, அமெரிக்கா இடையே இராணுவ பயிற்சி செயலமர்வு-

usnslஇலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையே ஒன்றிணைந்த இராணுவ பயிற்சி செயலமர்வு இன்று கொழும்பில் ஆரம்பமானது. 9 நாட்கள் இடம்பெறவுள்ள இந்த கூட்டு இராணுவப் பயிற்சி செயலமர்வை, அமெரிக்காவின் பசுபிக் வலயத்திற்கான கட்டளைத் தலைமையகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு என்பன இணைந்து முன்னெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார். பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தலைமையில் இந்தப் பயிற்சி செயலமர்வு முன்னெடுக்கப்படவுள்ளது. இப் பயிற்சி செயலமர்வில் முப்படையைச் சேர்ந்த 23 உறுப்பினர்களும், அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரசசார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 21பேரும் கலந்துகொள்ளவுள்ளனர். இவர்களைத் தவிர, அமெரிக்க உத்தியோகத்தர்கள் 21 பேரும், மேலும் 15 நாடுகளைச் சேர்ந்த 26பேரும் இதில் பங்கேற்பரென இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார்.

கோபி உள்ளிட்ட குழுவை கைதுசெய்ய விசேட குழு-

gopiபுலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் கோபி உள்ளிட்டவர்களை கைதுசெய்ய மேலதிக பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். மேலதிக பொலிஸ் குழு தனது தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், குறித்த நபர்கள் தொடர்பில் தகவல் அறிந்தால் தெரிவிக்கும்படி பொலிஸார் பொதுமக்களிடம் கோரி வருகின்றனர். அரச விரோத துண்டுப்பிரசுரம் விநியோகம் தொடர்பில் கோபிமீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. புலிகள் அமைப்பை மீள கட்டியெழுப்பி அதற்கு தலைமை வகிப்பதற்கு கோபி உள்ளிட்ட குழுவினர் முனைவதாக அரசாங்கம் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பொலிஸாருக்கு எதிராக 815 முறைப்பாடுகள் பதிவு-

கடந்த டிசம்பர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் பொலிஸாருக்கு எதிரான 815 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது, இவற்றுள் பொதுமக்கள் சமர்ப்பித்த 557 முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்காமை தொடர்பிலும் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் டீ.எம்.பீ தென்னக்கோன் தெரிவித்துள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழு கடந்த டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்திய 0710361010 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பொலிஸாரினால் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி தொடர்பில் முறையிடுவதற்காகவே, இந்தத் தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் குறித்த காலப்பகுதியில் பொலிஸாருக்கு எதிராக 206 எழுத்துமூல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த முறைப்பாடுகள் தொடர்பிலான விரிவான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் டி.எம்.பீ தென்னக்கோன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு அவுஸ்திரேலிய கடற்படை படகுகள் வழங்கிவைப்பு-

australaia boatஇலங்கையின் ஊடாக இடம்பெறும் சட்டவிரோத குடியேறிகளை தடுக்கும் வகையில் அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால் இரண்டு கடற்படைப் படகுகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த கப்பல்களில் ஒன்று அண்மையில் அவுஸ்ரேலிய தூதரக அதிகாரியினால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அவுஸ்ரேலிய கடற்பாதுகாப்பு திணைக்கள அதிகாரி, இலங்கை கடற்படைத் தளபதி ஜயந்த கொலம்பகே மற்றும் இலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர். கொழும்பில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின்போது அவுஸ்ரேலிய பிரதமர் டோனி அபர்ட் இலங்கை அரசாங்கத்திற்கு அளித்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே இந்த கப்பல் வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சமன் சிகாரா உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக நியமனம்-

யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகாரா உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக நியமனம் பெற்றுள்ளார். சட்டம் மற்றும் ஒழுங்கமைச்சினால் இலங்கையில் 99பேர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். அதில் ஒருவராக சமன் சிகேரா உள்ளமை குறிப்பிடத்தக்கது. அதன்படி ஜனவரி 01ம் திகதி முதல் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நேற்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் உட்பட 15 அமைப்புக்களுக்கு தடை-

புலிகளுடன் தொடர்புடையதாக நம்பப்படும் 15 பங்கரவாத இயக்கங்களை தடைசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கடந்த வாரம் கொண்டுவந்த பிரேணை வெற்றிபெற்ற நிலையில் அரசாங்கம் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அத்துடன் ஐ.நா பாதுகாப்பு சபைக்கு அமெரிக்காவினால் 28.9.2001ல் கொண்டுவரப்பட்ட பிரேரணை எண் 1373மூலமாக இந்நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரட்டை கோபுர தாக்குதலையடுத்து ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா சமர்ப்பித்த இந்ந பிரேரணைக்கு வெளிநாடுகளிலிருந்து தீவிரவாத அமைப்புக்களை தடைசெய்யும் அதிகாரம் வழங்கப்பட்டது. இதனடிப்படையில் இலங்கை அரசாங்கமானது அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, நோர்வே, இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இயங்கும் புலிகள் ஆதரவு இயக்கங்களை தடைசெய்யவுள்ளதாக அறிவித்தது. இதில் நியூயோர்க்கிலிருந்து செயல்படும் இடைக்கால தமிழீழ அரசாங்கம்;, கத்தோலிக்க குரு. அருட்தந்தை. இமானுவேலின் அகில உலக தமிழ் முன்னணி, நெடியவனின் விடுதலைப் புலிகள் அமைப்பு, விநாயகமூர்த்தியின் புலிகள் ஆதரவு இயக்கம் ஆகியவை உள்ளடங்குகின்றன. மேலும் புலிகள் இயக்கத்துடன் 15 மேலதிக இயக்கங்களும் தடைசெய்யப்படவுள்ளன அவையாவன Read more