Header image alt text

வலி மேற்கு பிரதேச சபைத்தவிசாளரால் பஜனைப்பாடசாலைத்திட்டம்

untitled3untitledவலிமேற்கு பிரதேச சபைத்தவிசாளரால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 100 பஜனைப்பாடசாலைத்திட்டம் நேற்றய தினம்  30.05.2014 அன்று பொன்னகலை பிள்ளையார் கோவில் மற்றும் சுழிபுரம் குடாக்கனை பேச்சியம்மன் கோவில் ஆகிய வற்றில் வலிமேற்கு பிரதேச சபைத்தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டு பஜனைப்பாடசலை நிகழ்வினை சிறப்பித்தனர்

வலிமேற்கு பிரதேச சபை மண்டபத்தில் நெல்சிப் மதிப்பீட்டுக் குழு

untitled130.05.2014 அன்று வலிமேற்கு பிரதேச சபை மண்டபத்தில் நெல்சிப் மதிப்பீட்டுக் குழு ஏற்கனவே நiபெற்ற  வேலைத்திட்ங்கள் தொடர்பான மதிப்பீட்டை மேற்கொண்டது. இதன் போது ஒவ்வோர் வேலைத்திட்டத்திலும் பங்கேற்றுக் கொண்ட சமூக கண்காணிப்பு குழு உறுப்பினர்களும் பங்கேற்று தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்

மக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டத்தில் பேசும் போது மாவை மயங்கிவிட்டார்.

mavai_mp_002ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் வடக்கு-கிழக்கு தமிழ் மக்களுக்கு விளக்கமளிக்கும் வேலைத்திட்டமொன்றை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் முன்னெடுத்துள்ளனர். இன்னும் ஓரிரு வாரங்களில் ஐ நா வின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் படி விசாரணைகள் தொடங்கும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும், அது குறித்து மக்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தவும், அவரகள் சாட்சியங்கள் அளிக்கும்போது கடைபிடிக்க வேண்டிய முறைகளை எடுத்துக் கூறுவதும் இதன் நோக்கம்- ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு மாதங்களாகின்ற நிலையில் இந்தத் தீர்மானம் தொடர்பில் மக்கள் மத்தியில் நிலவும் சந்தேகங்களையும் சிலரால் ஏற்படுத்தப்படும் குழப்பங்களையும் நீக்குவதே தமது நோக்கம் எனவும்,  விசாரணை தொடர்பாக மக்கள் மத்தியில் நம்பிக்கை வர வேண்டும், விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்றும் அப்படி நம்பிக்கை வந்தால் தான் அவர்களும் அதில் பங்கு பற்ற முன் வருவார்கள், இல்லையேல் அது அர்த்தமற்றது என ஓதுங்கி கொள்வார்கள் என்று த.தே.கூ பா.உ சுமந்திரன் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

nocreditmavai_mp_004இன்று மட்டக்களப்பு, கல்லடி துளசி மண்டபத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா ‘அனைத்துல சமூகமும் தமிழ் தேசிய அரசியலும் – ஒரு சமகால பார்வை’ எனும் கருத்தரங்கில் உரையாற்றிக் கொண்டிருந்த போது மயங்கி விட்டார். மாவை சேனாதிராஜா மயங்கி வீழ்ந்த நிலைமையானது அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  சிறிது நேரத்தின் பின்னர் அவர் பழைய நிலைக்கு திரும்பிய பின்னார் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், பொன். செல்வராசா , பா. அரியநேத்திரன் மற்றும் சீ. யோகேஸ்வரன் ஆகியோரும் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் இந்தச் சந்திப்புகளில் கலந்து கொண்டானர்.

இலங்கையில் புகைபிடிப்போரின் எண்ணிக்கை வீழ்ச்சிகண்டுள்ளது வட-கிழக்கில் அதிகரித்துள்ளது.

_smokingஇலங்கையில் கடந்த 10 ஆண்டுகளில் புகைபிடிப்போரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக ஆய்வொன்று கூறுகின்றது. ஆனால், வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் முன்னைய காலங்களைவிட புகைப்போரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் ஆய்வை நடத்திய அடிக் என்ற மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான தொண்டுநிறுவனம் கூறுகின்றது.

நாடளாவிய ரீதியில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களிடம் நடத்திய ஆய்வில் 2003 முதல் 2013-ம் ஆண்டுவரையான காலப்பகுதியில் புகைபிடிப்போரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும்.  இதேவேளை, தேசிய அபாயகர ஒளடத கட்டுப்பாட்டுச் சபையின் புள்ளிவிபரங்களின்படி, கடந்த 10 ஆண்டு காலத்தில் சிகெரட் விற்பனையும் வீழ்ச்சி கண்டுள்ளதையும்  வடகிழக்கு தவிர்ந்த ஏனைய இடங்களில் சிகரெட் பாவனை வீழ்ச்சியடைவதற்கு சிகரெட் கம்பனிகளின் உத்திகள் பற்றியும் சிகரெட் பாவனையினால் ஏற்படுகின்ற சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புகள் பற்றியும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சியே காரணம் என்றும்.

பொதுவாக இலங்கையில் சிகரெட் பாவனையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் ஒரு புது சந்தை உருவாகியிருப்பதனால் அவர்கள் வடக்கு கிழக்கை பிரதான இலக்காகக் கொள்கிறார்கள், சிகரெட் கம்பனிகளின் வியாபார உத்திகள் காரணமாக சிகரெட் பாவனை வீதம் அங்கே அதிகரித்துள்ளதாகவும். புதிய தகவல்களின்படி, இலங்கையில் புகைத்தல் காரணமாக சராசரியாக ஒரு நாளைக்கு 72 பேர் உயிரிழப்பதாகவும்;, நாள் ஒன்றுக்கு சுமார் 24 கோடி ரூபாவை சிகரெட்டுக்காக மக்கள் செலவிடுவதாகவும் ஏ.சி. ரஹீம் சுட்டிக்காட்டினார். இதே நேரம் சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கைப் படங்களை கட்டாயப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக சிகரெட் கம்பனி வழக்கு தொடர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இலங்கையில் அதிகரிக்கும் பொருள்விலைகளுக்கு ஏற்ப சிகரெட்டுக்களின் விலைகள் அதிகரிப்பதில்லை என்றும் இதனால் அரசாங்கத்திற்கு பெருமளவு வரிவருமானம் இழக்கப்படுவதாகவும் அந் நிறுவனம் மேலும் கூறியுள்ளது. உலகில் புகைத்தல் காரணமாக ஒவ்வொரு 6 செக்கென்டுகளுக்கும் ஒருவர் உயிரிழப்பதாகக் கூறியுள்ள உலக சுகாதார ஸ்தாபனம் புகைபொருட்கள் மீதான வரியை பெருமளவில் அதிகரிக்க வேண்டும் என்று நாடுகளைக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்.

kili_meet_008KilinochchiWatertank_CIகிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின் இரண்டாம் நாள் இன்று இணைத்தலைமைகளான வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா தலைமையில் காலை 9மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது நேற்று நடந்த இந்தக் கூட்டத்தில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தை கற்றல் செயற்பாடுகள் செயற்பாடுகளுக்கு இடையூறாக இராணுவம் மற்றும் வெளியார் பயன்படுத்துவதை தடுக்க வேண்டுமென வடமாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை விடுத்த வேண்டுகோளை அடுத்து. கிளிநொச்சி மத்திய கல்லூரியின் விளையாட்டு மைதானத்தை இராணுவத் தேவைகளுக்காக பயன்படுத்த, இனிமேல் அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு அனுமதி கோரப்பட்டால் ‘எனது கவனத்திற்குக் கொண்டு வாருங்கள்.’ – எனவும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உத்தரவு பிறப்பித்து உள்ளார். நான் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை ஒரு நல்ல காரியம் நடக்க ஒத்துழைக்க வேணடும்’ டக்ளஸ்:- கிளிநொச்சியில் காக்கா கடைச்சந்திக்கு அண்மையாக ஏ-9 வீதியோரம் இருந்த பெரிய நீர்தாங்கி 2009 போரின் போது குண்டுவவைத்து தகர்க்கப்பட்டது. வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கியை சுற்றி மதில் கட்டிய இலங்கை இராணுவம் அந்த நீர்தாங்கியை தென்னிலங்கையில் இருந்துவரும் மக்களை ஏமாற்றுவதற்கும் தமது வீரப்பிரதாபங்களை சொல்லவும் இந்த உடைந்து வீழ்ந்த நீர்த்தாங்கியை காட்சிப் பொருளாக்கியுள்ளனர். கிளிநொச்சியில் வடுவாக இருக்கும் அந்த நீர்த்தாங்கியை அகற்றுமாறு வடமாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை கோரியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த நீர்த்தாங்கிக்காணி நீர்ப்பாசன திணைக்களத்துக்கு சொந்தமானது. இந்தக்காணியை இராணுவம் கைப்பற்றி வைத்திருக்கின்றது. இதன் காரணமாக அங்கு அமைக்கப்படவேண்டிய புதிய கிளிநொச்சிக்கான புதிய நீர்தாங்கியை இரத்தினபுரம் வீதியில் ஒரு பள்ளக்காணியில் பாடசாலைக்கு சொந்தான நிலத்தில் அமைக்கப்படுகின்றது. அக்காணியில் ஒரு மாவட்ட நூலகம் அமைப்பதற்கான ஆலோசனை முதலில் முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்படியான கூட்டங்களில் எடுப்பட்ட முடிவுகள் பல நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக இராணுவத்தோடு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுவிதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய கூட்டத்தில் கிளிநொச்சி நகரின் மத்தியில் உடைந்து கிடக்கும் நீர்த்தாங்கியை போர்ச்சின்னமாக காட்சிப்பொருளாக மாற்றி இருக்கும் நிலையை தவிர்த்து அதை வேற அபிவிருத்தி தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டுமென ஈ.பி.டி.பி பா.உறுப்பினர் சந்திரகுமார் மற்றும் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா ஆகியோரும் வலியுறுத்தியதையும் அவரும் சுட்டிக்காட்டியுள்ளார்.

த.தே.கூவிலிருந்து கௌரிகாந்தன் நீக்கம்.

11(1157)யாழ்.மானிப்பாய் பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் கே.கௌரிகாந்தினைக் கட்சியிலிருந்து நீக்குவதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா கடிதம் அனுப்பியுள்ளார். மானிப்பாய் பிரதேச சபையின் வரவு – செலவுத்திட்டம் இரண்டு முறை தோற்கடிப்பதற்கு காரணமாக இருந்தமை, பிரதேச சபைத் தவிசாளர் பதவி விலகக் காரணமாக இருந்தமை மற்றும் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் நடவடிக்கைகளை பிரதேச சபைக்குள் கொண்டு வந்தமை உள்ளிட்ட விடயங்களைக் காரணம் காட்டி கட்சியின் கொள்கைகள் கோட்பாடுகளுக்கு எதிராகச் செயற்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டே இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதுடன், பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்குவது தொடர்பாக தேர்தல் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சிவஞானம் மேலும் தெரிவித்தார்.

இலங்கை பெண் பொலிஸாருக்கு புதிய சீருடை .

untitledபொலிஸ் சேவையில் ஈடபட்டுள்ள பெண்களுக்கென மற்றுமொரு சீருடையை அறிமுகப்படுத்த பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது. தற்போதுள்ள சீருடைக்கு மேலதிகமாகவே இந்த புதிய சீருடை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இலங்கை பொலிஸ் சேவையில் ஈடுபடும் பெண்கள் இதுவரை காலமும் காக்கி நிறத்திலான குட்டைப் பாவாடையும் சேர்ட்டுமே சீருடையாக அணிந்து வருகின்றனர். இந்த புதிய சீருடையும் காக்கி நிறத்திலேயே நிர்மாணிக்கப்படவுள்ளது. பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் பெண் பொலிஸ் சிப்பாய்களுக்கு முழுக் காற்சட்டையும் சேர்ட்டும் வழங்கப்படவுள்ளன. அத்துடன், பெண் பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பெண் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு முழுக் காற்சட்டை, சேர்ட் மற்றும் பூட்ஸ் கோட்டும் வழங்கப்படவுள்ளது. அலுவலக வேலைகள் மற்றும் ஏனைய விடயங்களைக் கருத்திற் கொண்டே அவர்களுக்காக இந்த புதிய சீருடை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, பொலிஸ் சேவையில் ஈடுபட்டுள்ள கர்ப்பிணிகளுக்கென்றும் புதிய ஆடையொன்றை அறிமுகப்படுத்த பாதுகாப்பு செயலாளர் அனுமதி வழங்கியுள்ளார் என பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்தது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர்களின் பாரபட்சத்தால் நோயாளிகள் பாதிப்பு.

ulaga sensiluvai thinamமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நோயாளிகள் மீது வைத்தியர்கள் பாரபட்சம் காட்டுவதாகவும் இது உயிரிழப்புகள் ஏற்படும் அளவுக்கு சென்றுள்ளதாகவும் அரசாங்க அதிபர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தசாலைக்கு வரும் நோயாளிகளிடம் வைத்தியர்கள் பாரபட்சம்  காட்டுவதாகவும் இவர் எனது நோயாளி இல்லை என ஒரு வைத்தியரும் இவர் எனது நோயாளி இல்லை என மற்றைய வைத்தியரும் நோயாளிகளை பார்க்காமல் செல்வதால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாதுள்ளதுடன் இந்தப் பாகுபாட்டினால் நோயாளிகள் இறந்தும் உள்ளனர்.
இது குறித்து பொது மக்களிடமிருந்து தனக்குப் பல முறைப்பாட்டுப் கடிதங்கள் வந்துள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் எம்.எஸ்.இப்ராஹிம் லெப்பையிடம் சுட்டிக்காட்டியதுடன் தனது அதிருப்தியையும் தெரிவித்தார் அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்;.
இதேவேளை மேலும் பல குறைபாடுகள் இடம்பெறுவதாகவும் அண்மையில் ஒரு நோயாளியின் நோயாளர் அட்டையில் ஒரு மாதம் முந்தி திகதியினை இட்டதால் அந்த நோயாளியை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு மாற்றம் செய்த போது அவரை கொழும்பு வைத்தியசாலை பாரமேற்க மறுத்துள்ளது. இதனால் அவர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிட்டதாகவும் அரச அதிபர்  தெரிவித்தார்.
வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் ஒரு நோயாளி நான்கு ஐந்து மணித்தியாலங்கள் காத்திருக்க வேண்டி ஏற்படுவதாகவும் சில நேரம் அவ்வாறு இருந்தும் மருந்து எடுக்காமல் திரும்பிச் செல்லும் நிலை உள்ளதாகவும்.
கண் வைத்திய விடுதியில் இருந்து வயோதிபர் ஒருவர் தவறி வீழ்ந்து இறந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதால் கண் வைத்திய விடுதியை கீழ் பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை விவகாரங்களுக்காக சிறப்பு பிரதிநிதியை நியமிக்க மோடி முடிவு .

NARENDRAMODIஇலங்கை விவகாரங்களைக் கவனிப்பதற்கென தனது நேரடி கண்காணிப்பின் கீழ் சிறப்புப் பிரதிநிதி ஒருவரை நியமிக்க இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்திருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, தமது ஆட்சிக் காலத்தில் இலங்கை விவகாரங்களுக்காக மட்டும் ஜி. பார்த்தசாரதியை சிறப்பு பிரதிநிதியாக நியமித்திருந்தார். அதேபோல் இலங்கை விவகாரங்களை தமது சார்பில் நேரடியாக கையாளக் கூடிய சிறப்பு பிரதிநிதியை நியமிப்பது குறித்து பிரதமர் மோடி ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. அப்படி நியமிக்கப்படும் சிறப்பு பிரதிநிதியானவர் வெளிவிவகார அமைச்சர், அவ்வமைச்சின் செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கும் மேலான அதிகாரங்களைக் கொண்டு செயற்படக்கூடியவராக இருப்பார் என்றும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய பிரதமரின் பதவியேற்பு நிகழ்வுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அழைத்தமைக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியாவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பிரதமர் மோடியை வரும் ஜுன் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா சந்திக்கிறார்.

Modi_JayaPTI_231-3002டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை வரும் ஜுன் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா சந்திக்கிறார். அப்போது தமிழகத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து பிரதமரிடம் மனு அளிக்கிறார். தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசிடம் ஜெயலலிதா வலியுறுத்தவுள்ளார். மோடி பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஜெயலலிதா அவரை சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வ இல்லத்தில் குடியேறினார்.

RCR_file_pic_360-5220பிரதமர் நரேந்திர மோடி இன்று ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் குடியேறினார்.சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் 5 பங்களாக்களை கொண்ட பிரதமருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் நரேந்திர மோடி தனி நபராக குடியேறும் முதல் பிரதமர் ஆகிறார். இதுவரை இங்கு குடியேறிய 14 பிரதமர்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் தான் குடியேறினர். வழக்கமாக முன்னாள் பிரதமர் காலிசெய்துவிட்டு போனபின்னர், புதிதாக அங்கு வரும் பிரதமரின் குடும்பத்தை சேர்ந்தவர்களே, வீட்டில் பலமாற்றங்களை செய்யுமாறு கூறுவதும் வழக்கம் ஆனால் மோடி அதுபோன்ற எதுவும் செய்யுமாறு கோரவில்லை. புதிதாக பெயிண்ட் மட்டுமே அடிக்கப்பட்டதாகவும் அவற்றை சுத்தப்படுத்த மட்டுமே செய்ததாகவும் கூறினார். Read more

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பியனுப்ப தடை-

ilankai pugalida korikiayaalarஅரசியல் புகலிடம் கோரியுள்ள இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுவிட்ஸர்லாந்து அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அரசியல் புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களை நிராகரித்தல் மற்றும் இலங்கைக்கு திரும்பியனுப்புதல் போன்ற செயற்பாடுகளுக்கு சுவிட்ஸர்லாந்தில் இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. சுவிட்ஸர்லாந்தில் இருந்து இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நடவடிக்கைகள் தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் உடனடியாக இலங்கைக்கு திரும்பி அனுப்பப்படுவார்கள் என்ற கருத்து தவறானது என சுவிட்ஸர்லாந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவரை மேற்கோட்காட்டி பீ.பீ.சி செய்தி வெளியிட்டுள்ளது.

மலேசியா போல செயற்பட்டால் உலக பயங்கரவாதத்தை அழித்து விடலாம்-இராணுவப் பேச்சாளர்-

malaysia pola seyatpattaalபயங்கரவாதத்தை இல்லாதொழிக்க மலேசியா போன்று ஏனைய உலக நாடுகளும் செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்பட்டால் மாத்திரமே இந்த உலகத்தில் உள்ள பயங்கரவாதத்தையே இல்லாதொழிக்க முடியும் என இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். மலேசியாவில் செயற்பட்டு வந்த மூன்று புலி உறுப்பினர்களை கைதுசெய்ய துணையாக இருந்த மலேசிய அரசுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையிலேயே இராணுவப் பேச்சாளர் இதனைக் கூறியுள்ளார். பயங்கரவாதத்தை ஒழிக்க மலேசியா ஆரம்பத்தில் இருந்தே உதவி செய்து வருகின்றது. குறிப்பாக புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் குமரன் பத்மநாதனை (கே.பி.) கைதுசெய்ய மலேசியா ஒத்துழைப்பு வழங்கியது. இந்நிலையில் தற்போது மூன்று புலி உறுப்பினர்களையும் கைதுசெய்ய உதவியுள்ளது. இதற்காக நாம் மலேசியாவுக்கு எமது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவிக்கிறோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் செய்தியாளர்களுக்கு வடக்கு முதலமைச்சர் அறிக்கை-

yaal seithiyaalarkalukuவடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தளம் மற்றும் உயர் இராஜதந்திரிகளின் சந்திப்புகள் குறித்து யாழ் செய்தியாளர்களுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தால் அறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் வாசஸ்தளத்தின் இடப்பற்றாக்குறை காரணமாக, செய்தியாளர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் முகமாக இனிவரும் காலங்களில், முக்கியஸ்த்தர்களின் சந்திப்புகளின் செய்திகளை சேகரிக்க செய்தியாளர்கள் அழைக்கப்படமாட்டார்கள். அத்துடன் நேரடியான செவ்விகளும் வழங்கப்படமாட்டாது. அதற்கு பதிலாக சந்திப்புகள் இடம்பெற்ற ஒரு மணித்தியாலத்துக்குள் அந்த சந்திப்பு தொடர்பான அறிக்கை ஒன்று ஊடக நிறுவனங்களுக்கும், ஊடக செய்தியளர்களுக்கும் அனுப்பிவைக்கப்படும். இதன்போது ஏற்படும் அசௌகரியங்கள் குறித்து தாம் வருந்துவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்கள் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வருக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடிதம்-

1719856666tna3தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரி, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தன் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். வடக்கில் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும்பான்மை வெற்றியை பதிவு செய்திருந்தது. அதேபோன்று தமிழகத்தில் 39 ஆசனங்களில் 37 ஆசனங்களை வெற்றிபெற்ற ஜெயலலிதாவின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், இந்தியாவின் மூன்றாம் பலமாக மாறியுள்ளமைக்கு இரா. சம்பந்தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையில் தமிழ் மக்களுக்கான பிரச்சினைகள் தொடர்பில் தீர்வினை ஏற்படுத்துவது குறித்து, இந்தியாவின் புதிய பிரதமருக்கு ஏற்கனவே தமிழ் தேசியு கூட்டமைப்பினால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த கடிதத்தை மேற்கோள்காட்டியுள்ள இரா. சம்பந்தன், அரசியல் தீர்வுக்கான இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு, தமிழக அரசின் ஒத்துழைப்பும் மிக அவசியமானது என்றும், இயன்றளவில் விரைவில் தங்களைச் சந்திக்க எதிர்பார்த்திருக்கிறோம். அத்தகைய வாய்ப்பை எமக்கு வழங்குமாறு ஆர்வத்துடன் வேண்டுகிறோம் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் பிரத்தியேக வகுப்புக்களுக்குத் தடை-

kilakku makana padasalaikalukuதிருகோணமலை நகர எல்லைக்குள் செயற்படும் தனியார் கல்வி நிலையங்கள் மாலை 6 மணிக்குப் பின்னர் பிரத்தியேக வகுப்புக்களை நடத்தக் கூடாதென நகர சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற நகர சபைக் கூட்டத்தில் நகர சபை உறுப்பினர் சத்தியசீலராஜா இந்தப் பிரேரணையை கொண்டுவந்துள்ளார். மாணவர்களின் நலன்கருதி இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை மீறும் கல்வி நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரங்களை இரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருமலை நகர சபை அறிவித்துள்ளது.

சுஸ்மா சுவராஜூக்கு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் வரவேற்பு-

susma suvarajkkuநரேந்திர மோடியின் தலைமையிலான இந்தியாவின் புதிய அரசாங்கத்தின் கீழ், இந்திய இலங்கை உறவு மேலும் வலுப்பெறும் என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவின் புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சுஸ்மா ஸ்வராஜிக்கு, அவர் அனுப்பியுள்ள வாழ்த்து மடலில் இதனைத் தெரிவித்துள்ளார். சுஸ்மா ஸ்வராஜின் நியமனம், இலங்கை இந்திய உறவுக்கு புத்துயிரை வழங்கி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக தொடர்புகளும் மேலும் விருத்தி அடையும் என்றும் வெளிவிவகார அமைச்சர் ஜிஎல் பீரிஸ் நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்

சார்ஜா கொலை தொடர்பில் இலங்கை பெண்கள்மீது விசாரணை-

sharjaa kolaiசார்ஜாவில் வெளிநாட்டு முகவர் ஒருவரின் மரணம் தொடர்பில் நான்கு இலங்கை பெண்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. த நெசனல் போஸ்ட் இணையத்தளம் இதனைத் தெரிவித்துள்ளது. குறித்த முகவர் சார்ஜாவின் அல் நஹ்டா பகுதியில் உள்ள 22 மாடி கட்டிடம் ஒன்றிலிருந்து வீழ்ந்த நிலையில் கடந்த தினம் ஒன்றில் உயிரிழந்தார். இந்த நிலையில் அவருடன் தங்கி இருந்த குறித்த நான்கு இலங்கை பெண்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த கட்டிடத்தின் முகாமையாளர் மற்றும் பாதுகாவளர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆரம்ப கட்டவிசாரணைகளில் குறித்த நான்கு இலங்கை பெண்களும், தொழில் தருணர்களால் ஏமாற்றப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

கொழும்பு பிரகடனத்தை ஐ.நாவிடம் கையளிக்க நடவடிக்கை-

colombo pirakadanamஉலக இளைஞர் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ‘கொழும்பு பிரகடனத்தை’ ஐக்கிய நாடுகளின் சபைக்கு எதிர்வரும் வாரம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு இதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றது. தேசிய இளைஞர் சேவை சபையின் தலைவர் லலித் பியூம் பெரேரா இதனை தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பும் ‘கொழும்பு பிரகடனத்தை’ உத்தியோகபூர்வமாக கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 15வது உலக இளைஞர் மாநாடு இலங்கையில் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் வடக்கு முதல்வர் சந்திப்பு-

வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் ரொபின் மூடியுடனான சந்திப்பு ஒன்றை நேற்று மேற்கொண்டிருந்தார். ரொபின் மூடி தலைமையிலான அவுஸ்திரேலிய குழு நேற்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த போது இந்த சந்திப்பு இடம்பெற்றள்ளது. இதன்போது வடக்கின் நிகழ்கால அரசியல் சூழ்நிலைகள் தொடர்பில் பேசப்பட்டுள்ளது. அத்துடன் வடமாகாண சபையின் சுயாதீன இயக்கம் தொடர்பிலும் அவுஸ்திரேலிய குழு முதலமைச்சரிடம் கேட்டறிந்துகொண்டதாக கூறப்படுகின்றது.

யாழ். மாநகர சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குத் தடை-

yaal maanakara sabaiyil (2)யாழ். மாநகர சபையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இன்று அனுஷ்டிக்க முற்பட்டவேளை, மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா அதற்கு தடைவிதித்ததாக கூறப்படுகிறது. யாழ்.மாநகர சபையின் மாதாந்தக் கூட்டத் தொடர் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் இன்று மாநகர சபை கேட்போர் கூடத்தில் ஆரம்பித்தவேளை, கூட்டமைப்பு உறுப்பினர்கள் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப் போவதாகக்கூறி எழுந்தபோது, அதனை முதல்வர் மறுத்ததுடன், அவ்வாறு அஞ்சலி செலுத்துவதாயின் மறைந்த அல்பிரேட் துரையப்பா (முன்னாய் மாநகர சபை முதல்வர்) முதல் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதன்போது ஏற்பட்ட வாதப் பிரதிவாதங்களைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

காணாமற்போனோர் தொடர்பான விசாரணைக்கு விசேட குழு-

kaanamat ponorயுத்த காலப்பகுதியில் காணமாற்போனோர் தொடர்பான விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழு நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. காணாமற்போனோர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் அறிக்கை சட்ட மாஅதிபர் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலர் எச்.டபிள்யூ.குணதாச குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொள்வதற்கான குழுவை நியமிக்க வேண்டும் என சட்ட மாஅதிபர் திணைக்களத்தினூடாக அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமைக்கு அமைய இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. காணாமற்போனோர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை சட்ட மாஅதிபர் திணைக்களம் பரிசீலனை செய்துவரும் அதேவேளை, இது தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்கான குழுவை நியமிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. யுத்த காலத்தில் காணாமற்போனோர் தொடர்பில் இதுவரை 18,580 முறைப்பாடுகள் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் பதிவாகியுள்ளது என குணதாச கூறியுள்ளார்.

கியூபா உயர்ஸ்தானிகர் மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களிடையே சந்திப்பு-

cuba uyar sthaanikarகொழும்பு தனியார் விடுதியொன்றில் கடந்த 25.05.2014 ஞாயிற்;றுக்கிழமை அன்று இலங்கைக்கான கியூபா நாட்டின் உயர்ஸ்தானிகர் டொக்டர் (திருமதி) இந்திரா லோபஸ் அர்குவல்ஸ் மற்றும் இலங்கை கியூபா நட்புறவுச் சங்கத்தின் செயலாளர் திரு. நாகேந்திரா ஆகியோரை வட மாகாணசபை உறுப்பினர்களான புளொட்டின் மத்தியகுழு உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன், கலாநிதி க.சர்வேஸ்வரன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது கியூபாவுக்கும் இலங்கைத் தமிழ் தரப்புக்களுக்கும் இடையிலான முன்னைய உறவுகள், தொடர்புகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டதுடன், அடுத்த மாதமளவில் வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு விஜயம் செய்து பொதுமக்களைச் சந்தித்து உண்மை நிலவரங்களை அறிந்து கொள்ளுமாறு உயர்ஸ்தானிகர் டொக்டர் இந்தியா லோபஸ் அர்குவல்ஸ் மற்றும் திரு நாகேந்திரா ஆகியோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நவிப்பிள்ளையின் அலுவலகம் இலங்கைமீது தீவிர அவதானம்-

navipillai aluvalagamஇலங்கையின் கடந்தகால, தற்கால மனித உரிமை மீறல்கள், நீதிக்குப் புறம்பான தண்டனை, பொறுப்புக்கூறல், மீள் நல்லிணக்கப்பாடு ஆகியவை குறித்து தொடர்ந்தும் கண்காணிக்கப்படும் என ஐ.நா. மனித உரிமைகள் சபை கூறியுள்ளது. கடந்த ஏழு வருடங்களாக இலங்கையின் போர் விவகாரம் தொடர்பான விடயங்களை ஆய்வுக்கு உட்படுத்திவரும் ஐ.நா. செயலகம், சர்வதேச சமூகத்தோடும் ஐ.நா. மனித உரிமைகள் சபையோடும் இணைந்து தொடர்ந்தும் இக்கண்காணிப்பை மேற்கொள்ளும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் 2002முதல் 2009ஆம் ஆண்டுவரையான போரின்போது இழைக்கப்பட்ட பெரும் மனித உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை மேற்கொள்ளுமாறு இவ்வருட மார்ச் அமர்வில் அமெரிக்கா தீர்மானமொன்றின்மூலம் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு ஆணை வழங்கியுள்ளது. இரு வாரங்களில் நவநீதம்பிள்ளையின் அலுவலகம் விசாரணையை ஆரம்பிக்கவுள்ளது. பல விடயங்களில் இலங்கை அர்த்தபுஷ்டியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. பொறுப்புக்கூறல் கடப்பாடு, வடபகுதியில் அதிகளவில் இராணுவக்குவிப்பு, தொடருமட் மனித உரிமை மீறல்கள், மதரீதியான வன்முறைகள், சுயாதீன நீதித்துறைக்கு குந்தகமான நடவடிக்கை ஆகியவற்றை நவநீதம்பிள்ளை அறிக்கையில் முன்வைத்துள்ளார். மனித உரிமைகள் பேரவையின் 2013ஆம் வருட அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்ட பல அம்சங்கள், 2014 மார்ச் அமர்வுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். எனினும் எதுவும் நடக்கவில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயர்தர மாணவனை காணவில்லையென பொலிஸில் முறைப்பாடு-

missing studentவவுனியா, கல்மடு பிரதேச பாடசாலையொன்றில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி பயிலும் 17 வயதுடைய மாணவனொருவரை காணவில்லை என அம்மாணவனின் பெற்றோரால் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா, தரணிக்குளம், சாஸ்திரி கூழாங்குளத்தைச் சேர்ந்த மகாலிங்கம் றஜீவன் என்ற மாணவனே, நேற்றுமுதல் காணாமல் போயுள்ளார். தனது வீட்டிலிருந்து நேற்று அதிகாலை 5மணிக்கு, 10 கிலோ பயிற்றங்காய்களுடன் புறப்பட்டுச் சென்ற அம்மாணவன், அவற்றை வவுனியா நகரப்பகுதியிலுள்ள தினசரி சந்தை வியாபாரியொருவரிடம் கொடுத்துள்ளார். பின்னர், தான் பயணித்த மிதிவண்டியை குறித்த வியாபாரியின் மரக்கறி விற்பனை நிலையத்துக்கு முன்பாக நிறுத்தி விட்டு எதிர்ப்பக்கமாகவுள்ள பாடசாலை உபகரண விற்பனை நிலையத்துக்கு சென்று வருவதாகக் கூறிவிட்டு சென்ற மாணவன், இதுவரையில் வீடு திரும்பவில்லை என குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், குறித்த மாணவனுடைய பெற்றோர் வவுனியா பொலிஸ் நிலையத்திலும், தரணிக்குளம் பொலிஸ் நிலையத்திலும், மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமும் முறைப்பாடு செய்துள்ளனர்.

யுத்த நிறைவின் நோக்கம் உலகிற்கு வியாபிக்கப்படவில்லை-இராணுவத் தளபதி-

yuththa niraivin nokkamயுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்தமைக்கான நோக்கம் மற்றும் அதனை செயற்படுத்திய விதம் என்பன உரிய வகையில் உலகிற்கு வியாபிக்கப்படவில்லை என்பதுடன் அதை உரிய வகையில வெளிப்படுத்தவுமில்லை என்பதே உண்மை என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இராணுவவீரர்கள் மற்றும் உயர்நிலை அதிகாரிகளுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள அடிப்படை ஊடகம் தொடர்பான கற்கை நெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அரச தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில், இராணுவத் தளபதி தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. அவர் மேலும் கூறுகையில், யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்தமைக்கான நோக்கத்தை உரிய வகையில வெளிப்படுத்தியிருந்தால் சர்வதேச நாடுகள் முன்னிலையில் இலங்கையை மேற்குலக நாடுகள் இழிவுபடுத்த முயற்சித்திருக்க மாட்டார்கள் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணி சுவீகரிப்பிற்கு எதிராக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்-

kaani suveekarippu ethiraka...kaani suveekarippukku ethiraakakaani suveekarippu ethiraaka..இராணுவத்தினரால் பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம், இன்றுகாலை, கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றது. காணி அபகரிப்பினைக் கண்டித்தும் இராணுவத்திடமுள்ள வீடுகள் நிலங்கள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும், இடம்பெயர்ந்த மக்கள் அவர்களது சொந்த வீடுகளில் மீளக்குடியமர உடன் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவஞானம் சிறிதரன், வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசன், வட மாகாணசபை உறுப்பினர்கள், ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச் செயலாளர் சி.பாஸ்கரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். இப் போராட்டத்தினை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தங்கவேல் ஜெகதீஸ்வரன், பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கடந்த 23ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

அரசுக்கெதிரான இணையங்கள் தொடர்பில் புலனாய்வுக்குழு விசாரணை-

kanamal ponor ariya inaiyamஅரசாங்கத்திற்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்கும் இணையத்தளங்கள் தொடர்பில் ஆராய பாதுகாப்பு பிரிவின் புலனாய்வு அதிகாரிகளை கொண்ட தனியான புலனாய்வுப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. செய்தி இணையத்தளங்கள் ஊடாக அரசாங்கத்தின் செயற்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்படுவதை தடுக்கவும், அதற்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆராயும் இந்த புலனாய்வுப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக சகல செய்தி இணையத்தளங்களில் வெளியாகும் செய்திகளை பகுப்பாய்வு செய்வது, இணையத்தளங்களின் ஊடகவியலாளர்கள், அவற்றின் உரிமையாளர்கள், அந்த இணையத்தளங்கள் பெறும் தொழிற்துட்ப வசதிகள் தொடர்பாக இந்த புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தவுள்ளது. அத்துடன் குறிப்பிட்ட சில இணையத்தளங்கள் பற்றி விசேட விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த இணையத்தளங்களுக்கு இணையான பெயருள்ள இணையத்தளங்கள் பற்றியும் விசாரிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கு துரித தீர்வு வேண்டுமென இந்தியப் பிரதமர் வலியுறுத்தல்-

modi mahinda meet (1)ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து மக்களுக்கும் சம உரிமை, சம நீதி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் நேற்றையதினம் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியதாக த ஹிந்து நாளிதழ் செய்தி வெளிட்டுள்ளது. ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க துரித வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று இந்திய பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகளின் மீளுருவாக்கம் தொடர்பில் 77பேர் கைது-

pulikalin meeluruvaakkamபுலிகள் மீளுருவாக்கம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை நடவடிக்கைகளில் இதுவரை 77பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 6ம் திகதி தொடக்கம் இதுவரையான காலத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் 47 சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. அதில் 6 பெண்களும் அடங்குகின்றனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

நாடுகடத்தப்பட்டோரின் பாதுகாப்பை உறுதிசெய்ய வலியுறுத்தல்-

puli uruppinarkal nadu kadaththalமலேசியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. புலிகள் இயக்கத்தின் சந்தேகநபர்கள் என கூறப்பட்டு அண்மையில் மலேசியாவிலிருந்து மூன்று இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டிருந்தனர். இவர்கள் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் என இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. எவ்வாறெனினும், நாடு கடத்தப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் எனவும், துன்புறுத்தப்படக் கூடாது எனவும் மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது. நாடு கடத்தப்பட்டவர்களுள் இருவருக்கு ஐ.நாவின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் அகதி அந்தஸ்து வழங்கியுள்ளதுடன் மற்றையவருக்கு அகதி அந்தஸ்து வழங்குவது தொடர்பிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த தருணத்தில் இவர்கள் கைதாகி நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

புலிகள் இயக்க சந்தேகநபர்கள் இலங்கைக்கு நாடு கடத்தல்-

puli uruppinarkal nadu kadaththalமலேஷியாவில் கைது செய்யப்பட்ட புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் என கூறப்படும் மூன்று சந்தேகநபர்களும் நேற்றிரவு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் சிவப்பு அறிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். சந்தேகநபர்கள் மூவரும் கடந்த 15ஆம் திகதி மலேஷியாவில் கைது செய்யப்ட்டனர். புலிகள் அமைப்பினால் முல்லைச்செல்வன் எனக் குறிப்பிடப்படும் மீசாலை பகுதியை சேர்ந்த அமிர்தலிங்கராஜா துஷாந்தன், புலிகளின் கலைத்துறையைச் சேர்ந்த மகாதேவன் கிருபாகரன் மற்றும் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த செல்லதுறை கிருபானந்தன் ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இவர்களுக்கு எதிரான விசாரணைகளை பயங்கரவாத புலயனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.

மாத்தளை புதைகுழி எலும்புகளில் சித்திரவதைக்கான அடையாளம்-

modi mahinda meet (4)மாத்தளை மனிதப் புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளை ஆராய்ந்ததில் இறந்தவர்கள் மரணமடைவதற்கு முன் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட எலும்புகளை பரிசோதனை செய்த குருநாகலை சட்ட வைத்திய அதிகாரி மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் இதனைத் தெரிவித்துள்ளதாக காணாமல்போனோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுனில் வடகள தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட புதைகுழியிலிருந்து 153 மண்டையோடுகள் கண்டெடுக்கப்பட்டிருந்தது. அவற்றில் சிலவற்றின் உள்ளே இரும்பு ஆணிகள் இருந்தது. விரல்களும் உடம்பின் வேறு பல பாகங்களிலும் கூர்மையான ஆயுதம் கொண்டு தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் தெரிகின்றன என சட்ட வைத்திய நிபுணரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என அவர் கூறினார். சட்ட வைத்திய நிபுணரின் அறிக்கையில் சித்திரவதைக்கான அடையாளங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்த மரணங்களை கொலைக் குற்றச்சாட்டாக கருதி வழக்கு நடத்த வேண்டுமென நீதிவான் பரிந்துரைக்க வேண்டும் என்று தாம் கோரியதாகவும் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். மாத்தளை புதைகுழி சடலங்கள் 1988-89 காலப்பகுதியில் இலங்கையில் நடந்த கலவரங்களின்போது காணாமல்போனவர்களாக இருக்கலாமென சந்தேகம் தெரிவித்துள்ள அவர்களின் உறவினர்கள், இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டுமென நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் 20ஆயிரம் இலங்கையர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பு-

kuwaithil 20 aayiram ilankaiyarகுவைத் நாட்டில் சட்டவிரோதமாக 20,000ற்கும் அதிகமான இலங்கை பணியாளர்கள் தங்கியிருப்பதாக, குவைத்தின் இலங்கைக்கான தூதுவராலம் தெரிவித்துள்ளது. குவைத்தில் பல்வேறு துறைகளில் தொழில் புரிவோரே சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக இலங்கைக்கான தூதுவர் சீ.ஏஎச்.எம்.விஜேரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை திரும்பும் எதிர்ப்பார்ப்புடன் பெருந்திரளானவர்கள் நாளாந்தம் தூதுவராலயத்தின் ஒத்துழைப்பை நாடி வருவதாகவும், எனினும் குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் கைது செய்யப்படும் சந்தர்பங்களில் விசேட ஏற்பாடுகள் மூலம் அவர்கள் விடுவிக்கப்படுவதாகவும் இலங்கைக்கான தூதுவர் சீ.ஏஎச்.எம்.விஜேரத்ன மேலும் சுட்டிக்காட்டிள்ளார்.

இந்தியப் பிரதமர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சந்திப்பு-

modi mahinda meet (1)இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை மற்றும் இரு நாட்டு மீனவர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் தொடர்பாக, இந்தியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர். இன்றுமுற்பகல் இருவருக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இவ்விரு விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சந்திப்பினை அடுத்து, இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்துப் பேசியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சார்க் வலயத்தின் ஏனைய தலைவர்களுடனும் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தைகளை இன்றைய தினம் முன்னெடுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

மாலைதீவுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விஜயம்-

malaitheevukku janathipathi vijayamமாலைதீவுக்கு மிக விரைவில் விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்காக இந்தியாவுக்குச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கையும் ஆகியோர் நேற்று சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது, மாலைதீவுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இலங்கை ஜனாதிபதிக்கு மாலைதீவு ஜனாதிபதி விசேட அழைப்பு விடுத்துள்ளார். இவரது அழைப்பை ஏற்றுக்கொண்ட இலங்கை ஜனாதிபதி, மிக விரைவில் மாலைதீவுக்கு விஜயம் மேற்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு ஆதரவாக ஜெனீவாவில் மாலைதீவு அதிகாரிகள் செயற்பட்டதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி மஹிந்த ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கைக்கு ஆதரவளித்தமைக்கும் நன்றி கூறியுள்ளார்.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இராஜினாமா, இனியபாரதி நியமனம்-

iniyabarathi niyamikkapadalaamகிழக்கு மாகாண சபை ஐக்கிய மக்கள் சுதந்தி முன்னணியின் உறுப்பினர் துரையப்பா நவரெட்ணராஜா தனது மாகாண சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர்இராஜினாமா கடிதத்தை கிழக்கு மாகாண பேரவை செயலருக்கு அனுப்பியுள்ளார். இவரது இராஜினாமாவையடுத்து கிழக்கு மாகாண சபையில் வெற்றிடமொன்று தோன்றியுள்ளதாக கிழக்கு மாகாண பேரவைச் செயலாளர் எம்.சீ.எம்.சரீப் தேர்தல் ஆணையாளருக்கும் தெரிவித்துள்ளார். கடந்த கிழக்கு மாகாண சபையில் இவர் விவசாய கால் நடை அபிவிருத்தி அமைச்சராக செயல்பட்டு வந்துள்ளதுடன் கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்;டமைப்பில் போட்டியிட்டு தோல்விடைந்திருந்தார். ஐக்கிய மக்கள் சுதந்தி கூட்டமைப்புக்கு கிடைத்த போனஸ் ஆசன மூலம் இவர் மீண்டும் கிழக்கு மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். இந்நிலையில் இவரது வெற்றிடத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் இனியபாரதி கிழக்கு மாகாண சபை உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிழக்கு மாகாண சபையில் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டிப்பு-

kilakku makana sabaiyilகிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் இன்று முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று ஆரம்பித்த வேளையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தண்டாயுதபாணி தலைமையில் மேற்படி அஞ்சலி நிகழ்வை நிகழ்த்தியுள்ளனர். இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் கறுப்புத் துண்டுகள் தோளில் சால்வையாக அணிந்த வண்ணம் சபைக்கு பிரசன்னமாகியிருந்தனர்.

வவுனியா குளத்திலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு-

vavuniya kulaththilirunthu sadalamவவுனியா குடியிருப்பு குளத்திலிருந்து இன்றுகாலை இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குளத்தின் செடிகள் நிறைந்த பகுதியில் இருந்து சடலம் மீட்கப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சடலம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பு-

Tamil_Daily_News_83483523131modi_0இந்தியாவின் 15 ஆவது பிரதமராக பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த நரேந்திர மோடி இன்று பதவியேற்றார். புதுடில்லியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முன்னிலையில் நரேந்திர மோடி இன்றுமாலை சத்தியப் பிரமாணஞ் செய்து கொண்டுள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட சார்க் அமைப்பு நாடுகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வுக்கு சுமார் 3,000 பிரமுகர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். நரேந்திர மோடியுடன் புதிய மந்திரிகளும் பொறுப்பேற்றனர். கேபினட் மந்திரிகளாக ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, வெங்கையா நாயுடு, சதானந்த கவுடா, உமாபாரதி, நஜ்மா ஹெப்துல்லா, கோபிநாத் முண்டே, ராம் விலாஸ் பஸ்வான், கல்ராஜ் மிஸ்ரா, மேனகா காந்தி, ஆனந்த் குமார், ரவிசங்கர் பிரசாத், அசோக் கஜபதி ராஜு, ஆனந்த் கீதே, ஹர்சிம்ரத் கவுர், நரேந்தர் சிங் தோமர், ஜூவல் ஓரம், ராதா மோகன் சிங், தவார் சந்த் கெலாட், ஸ்மிருதி இரானி, டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் பதவியேற்றனர். தவிர தனிப்பொறுப்புடன் கூடிய இணை மந்திரிகளாக வி.கே.சிங், ரவோ இந்தர்ஜித் சிங், ஸ்ரீமத் நாயக், சந்தோஷ் கங்வார், தர்மேந்திர பிரதான், சர்பானந்த சோனாவல், பிரகாஷ் ஜவடேகர், பியூஷ் கோயல், ஜிதேந்திர சிங், நிர்மலா சீதாராமன் ஆகியோர் பொறுப்பேற்றனர். இவர்கள் தவிர இணை மந்திரிகளாக ஜி.எம்.சித்தேஸ்வரா, மனோஜ் சின்கா, நிகல் சந்த், உபேந்திரா குஷ்வாஹ், பொன் ராதாகிருஷ்ணன், கிரண் ரிஜிஜு, கிரிஷன் பால் குஜ்ஜார், சஞ்சீவ் குமார் பாலியான், மன்சுக்பாய் வாசவா, ராவ்சாகிப் தன்வீ, விஷ்ணுதேவ் சாய், சுதர்சன் பகத் ஆகியோர் பதவியேற்றனர். அவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்து வாழ்த்தினார். 

முல்லைத்தீவில் வானூர்தி பாகங்கள் மீட்பு-

mullitiveil vaanoorthi paakankalமுல்லைத்தீவு சாளை கடற்பிராந்தியத்தில் இருந்து உலங்கு வானூர்தி ஒன்றின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடற்படையின் சுழியோடி பிரிவினரால் குறித்த உலங்கு வானூர்தியின் பாகங்கள் கண்டுப்பிடிப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். இவ்வாறு கண்டுப்பிடிக்கப்பட்டவை, யுத்த உலங்கு வானூர்தியின் பகுதிகள் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை கண்டுபிடிக்கப்பட்டுள்ள விமானத்தின் பாகங்கள் காங்கேசன்துறை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தினருடன் இணைந்து சம்பவம் இது தொடர்பிலான மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் புலி உறுப்பினர் கைது-

imagesCA5PZGM2புலிகள் இயக்க புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் ஒருவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேகநபர் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும், சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். சந்தேகநபர் வவுனியா வைத்தியசாலையில் கடந்த 2006ம் ஆண்டுமுதல் 2008ம் ஆண்டுவரை சேவையாற்றியுள்ளார். யுத்தம் நிறைவடைந்த பின்னரும், புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கும் முயற்சியில் இவர் ஈடுபட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். புலிகள் அமைப்புக்கு புத்துயிரளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக கருதப்படும் சுமார் 50பேர் இதுவரை சந்தேகத்தின்பேரில் கைதாகியுள்ளதாக கூறப்படுகிறது.

மாகாணசபை முறையில் குறைபாடுகள்-வடக்கு முதல்வர்-

wigneswaran_1654672gமாகாண சபை முறைமைகளில் காணப்படும் குறைப்பாடுகள் தொடர்பில் இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடிக்கு தெளிவுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் ஊடகச் செவ்வியில் இவ்வாறு கூறியுள்ளார். தற்போதுள்ள மாகாண சபை முறைமைகளில் காணப்படும் குறைப்பாடுகள் காரணமாக தாம் உள்ளிட்ட வட மாகாண சபை பெரிதும் அசௌகரியத்திற்கு உள்ளாவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வலி மேற்கு பிரதேச சபை தவிசாளரின் 100 பஜனைப் பாடசாலை திட்டம்-

vali metku pradesa thavisalar (2)vali metku pradesa thavisalar (1)யாழ். வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது 100 பஜனைப் பாடசாலைத்திட்டம் வலி மேற்கு பிரதேசத்தின் சுழிபுரம் பாண்டுவட்டைப் பகுதியில் உள்ள அம்பாள் ஆலயம், ழூளாய் முருகன் ஆலயம் மற்றும் தொல்புரம் ஆதிமுத்துரியம்மன் ஆலயம் ஆகியவற்றில் கடந்த 23.05.2014 வெள்ளிக்கிழமை அன்று தவிசாளரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் நிகழ்வுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து தமது பிள்ளைகளை இவ் பஜனை நிகழ்வுகளில் பங்குபற்றச் செய்தனர். மேற்படி நிகழ்வானது வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் அவர்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை அதிபரை நீக்குமாறு கோரி எதிர்ப்பு நடவடிக்கை-

அம்பாறை, நாவிதன்வெளியலுள்ள பாடசாலை ஒன்றின் அதிபரை நீக்குமாறு கோரி மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இன்றுகாலை 7 மணி தொடக்கம் இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. பாடசாலை அதிபரின் செயற்பாடுகளால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டனர். இந்நிலையில் குறித்த அதிபர் தொடர்பில் தமக்கு முறைப்பாடு வந்துள்ளதாகவும், வலயக் கல்வி பணிப்பாளர் இது பற்றி ஆராய்வதாகவும் மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.டீ.ஏ நிசாம் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி குழுவினர் இந்தியாவிற்கு விஜயம்-

janathipathi kulu india vijayamநரேந்திர மோடியின் பதவியேற்பிற்கு ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் புதுடில்லியை அடைந்துள்ளனர். இந்தியாவின் 15 ஆவது பிரதமராக தெரிவாகியுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வு இன்றுமாலை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, வெளியுறவு அமைச்சின் செயலர் சேனுக்கா செனவிரட்ன, நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி ஆகியோர் ஜனாதிபதியுடன் சென்ற குழுவில் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய வைகோ கைது-

janathipathikku ethiraka aarpattam vaikoஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வருகையை கண்டித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திய வைகோ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜந்தர் மந்தரில் கறுப்புக் கொடி போராட்டம் நடத்திய ம.தி.மு.க. தொண்டர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்பதற்கு கண்டனம் தெரிவித்து ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ உட்பட 150 ம.தி.மு.க.வினரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வாகனங்களில் ஏற்றி அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடலில் தத்தளித்தமீனவர்கள் மீட்பு-

unnamed10விபத்துக்கு உள்ளான படகில் இருந்து 9 மீனவர்கள் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். காலியில் இருந்து மீன்பிடி தொழிலுக்குச் சென்ற குறித்த பகுதியைச் சேர்ந்த படகொன்று விபத்துக்கு உள்ளானதாக கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து விரைந்து செயற்பட்ட கடற்படையினர் இன்று 9 மீனவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்துள்ளனர்.

நரேந்திர மோடியை புறக்கணித்த 5 மாநில முதலமைச்சர்கள்-

modiya purakaniththa muthalvarkalநரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவை ஐந்து மாநில முதலமைச்சர்கள் புறக்கணிப்பதாக தெரியவருகிறது. பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க சார்க் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதனை ஏற்று சார்க் நாட்டு தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இது தவிர வெளிநாட்டு தூதர்கள், மாநில கவர்னர்கள், முதல் மந்திரிகள், கட்சி தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் திரையுலகினர் என 4ஆயிரம் பேர் அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால்மோடி பதவி ஏற்பு விழாவை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய 5 மாநில முதலமைச்சர்கள் புறக்கணிக்கிறார்கள். மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க இலங்கை ஜனாதிபதி அழைக்கப்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கேரள மாநில முதல்வர் உம் மன்சாண்டியும், கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் முன்கூட்டி திட்டமிட்ட நிகழ்ச்சியிருப்பதாக கூறி விழாவில் பங்கேற்கவில்லை. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் ஒடிசா நிதி மந்திரி பிரதீப் அம்த பங்கேற்கிறார். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் இதில் பங்கேற்கவில்லையென தெரியவருகிறது.

ஐ.நா விசாரணைக்கான தலைவராக கோபி அனானை நியமிக்க நடவடிக்கை-

ainaa visaaranaikkaanaஇலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்காக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் அமைக்கப்படவுள்ள விசாரணைக் குழுவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் கோபி அனான் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சமாதானத்துக்கான நோபல் பரிசு வென்றவர் கோபி அனான். இலங்கையில் நல்லிணக்கத்தையும் அமைதியையும் உருவாக்கும் நோக்குடனேயே போர்க் குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஐ.நா. தீர்மானம் வலியுறுத்துவதால் கோபி அனானே அந்தக் குழுவின் தலைவராக இருப்பதற்குச் சிறந்தவர் என தற்போதைய மனித உரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளை ஆலோசிக்கிறார் என்றும் அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அனைத்து இந்திய மீனவர்களையும் விடுவிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு-

modi pathaviyetpuஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கவுள்ள நிலையில், நல்லெண்ண அடிப்படையில் அவர்களை விடுவிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இதற்கிடையில், இந்தியாவின் புதிய பிரதமராக பதவி ஏற்கவுள்ள நரேந்திரமோடிக்கும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நாளை மறுதினம் நடைபெறவுள்ளதாக இந்திய தகவல்கள் கூறுகின்றன. நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட பல்நாட்டுத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்நிகழ்வில் பங்கேற்கும் அரச தலைவர்களை, நரேந்திரமோடி தனித்தனியாக சந்திக்கவிருப்பதாக தெரியவருகிறது. இதேவேளை, இந்தியா செல்லும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக த டைம்ஸ் ஒப் இந்தியா கூறியுள்ளது.

யாழில் கடற்றொழில் திணைக்களம் சுற்றிவளைப்பு-

meenpidiயாழ். குடாநாட்டை சூழவுள்ள தீவுப் பகுதிகளில் கடற்றொழில் திணைக்களத்தினால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீவு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள உத்தியோகஸ்தர்களால் இன்று அதிகாலை முதல் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக திணைக்கள பணிப்பாளர் ந.கணேஷமூர்த்தி தெரிவித்துள்ளார். தடைவிதிக்கப்பட்ட வலைகளை பயன்படுத்தி மாவட்டத்திலுள்ள மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபடுகின்றனர். சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத வலைகளுடன் கைது செய்யப்படுபவர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பணிப்பாளர் ந.கணேஷமூர்த்தி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

காணிப் பிரச்சினை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் அறிக்கை-

kaani pirachanai thodarpaakaஐக்கிய நாடுகளின் 26வது மனித உரிமைகள் மாநாட்டின்போது, இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் காணப்படுகின்ற காணிப்பிரச்சினை குறித்த அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் அளவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நாவின் உள்நாட்டு இடப்பெயர்வுகளுக்கு ஆளானவர்களின் மனித உரிமைகள் தொடர்பான விசேட அறிக்கையாளர் சாலோகா பெயானி இந்த அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 2ம் திகதி முதல் இலங்கையில் தங்கி இருந்த பெயானி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற மாவட்டங்களுக்கு விஜயம் செய்து, இடம்பெயர்ந்த மக்களை சந்தித்திருந்தார். அவர் தமது இலங்கை விஜயம் தொடர்பில் தயாரித்துள்ள அறிக்கையே அடுத்த மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் முன்வைக்கப்படவுள்ளது.

மலேசியாவில் மூன்று தமிழ் இளைஞர்கள் கைது-

imagesCA5PZGM2மலேசியாவில் மூன்று தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் புலிகளை மீள உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததாக, மலேசியா பொலீஸ் மா அதிபர் காலிட் அபு பாகர்; தெரிவித்துள்ளார். மலேசியாவின் செலான்கூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த மூன்று பேரும் கடந்த 2004ம் ஆண்டு முதல் அங்கு தங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் மூன்று பேரும் மலேசியாவை தளமாக கொண்டு நிதியை திரட்டியும், புலிகளின் கொள்கைகளை பரப்பியும் அந்த இயக்கத்தை மீளுருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

13ம் திருத்தத்தின்படி அதிகார பகிர்வு பற்றிய பேச்சுவார்த்தை-

13m thiruththathin athikara pakirvu13ம் திருத்தச் சட்டத்தின்படி அதிகாரப் பகிர்வினை முறையாக அமுலாக்குமாறு பாரதீயே ஜனதா கட்சி அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதீயே ஜனதா கட்சியின் பேச்சாளர் நிர்மலா சீத்தாராமன் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். அயல் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை பாரதீயே ஜனதா கட்சி முக்கிய கொள்கையாக கொண்டுள்ளது. இலங்கை குறித்த விடயங்களுக்கு பாரதீயே ஜனதா கட்சி முக்கியத்துவம் வழங்கும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இணைய முடக்கல் தொடர்பாக மனித உரிமைக்குழு அறிக்கை கோரல்-

kanamal ponor ariya inaiyamஇணையத்தளங்கள் முடக்கப்பட்டமை தொடர்பில், பொதுஜன ஊடக அமைச்சு மற்றும் தொலைத்தொடர்பு ஆணைக்குழு ஆகியவற்றின் அறிக்கையை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரியுள்ளது. அதன் செயலாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்துள்ளார். இணையத்தளங்களின் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து இவ்வாறான தடை குறித்து முறைப்பாடுகள் வழங்கப்பட்டிருந்தன. இதனடிப்படையில் இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிரந்தர தீர்வினை இந்தியாவால் பெற்றுக்கொடுக்க முடியும்-இரா.சம்பந்தன்-

sampanthanஇலங்கை இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கான பிரதான பங்கை இந்தியாவால் வகிக்க முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தன் எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் புதிய பிரதமராக மோடி திங்கட்கிழமை பதவியேற்கவுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வாழ்த்துச் செய்தியாகவே சம்பந்தன் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். ஒரு அரசியற் தீர்வை வழங்குவேன் என இந்தியாவிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதியை மதித்து இலங்கை அரசாங்கம் நடக்கவில்லை. கடும்போக்கான ஓர் நிகழ்ச்சித் திட்டத்தை இலங்கை அரசு முனைப்பாக முன்னெடுத்து வருகின்றது. நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் நீங்கள் பெற்ற பிரமாண்டமான வெற்றிக்காகவும், பாரத தேசத்தின் பிரதமர் என்ற உயர் பொறுப்புக்காக நீங்கள் பெறுகின்ற நியமனத்திற்காகவும், இலங்கைத் தமிழ் மக்களின் சார்பில் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள். 2009 யுத்தம் முடிவுற்றபின் நிரந்தரத் தீர்வு ஒன்றை தேசிய இனப்பிரச்சினைக்குக் காண்பதற்கான வாய்ப்புக்கள் உருவாகின. அரசியற் தீர்வை வழங்குவேன் என்ற வாக்குறுதியை போர் நிகழ்ந்த காலத்திலும், போரின் முடிவிற்குப் பின்னாலும் இந்தியாவிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை வழங்கியிருந்தது. ஆனாலும், தனது அந்த வாக்குறுதிகளை மதித்து இலங்கை அரசாங்கம் நடக்கவில்லை. இலங்கை அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகள், நல்லிணக்க முயற்சிகளையும் நிரந்தர அமைதி ஏற்படும் சூழலையும் மேலும் பலவீனப்படுத்துவது மட்டுமன்றி எதிர்ப்புணர்வுகளையே உருவெடுத்து வளரச் செய்யும். இத்தகைய ஒரு நிலைமையைத் தமிழ் மக்கள் நிச்சயமாக விரும்பவில்லை. இலங்கை அரசாங்கத்தின் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒர் அரசியல் தீர்வை உருவாக்கி எடுப்பதில் அது விசுவாசமாக இல்லை என்பதையே தெளிவாக காட்டுகின்றன என்பதையும் நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். நாங்கள் அப்படி கருதுவது ஏனென்றால் நீதியினதும் சமத்துவத்தினதும் அடிப்படையிலான கௌரவமான ஓர் சமாதானம் எங்கள் நாட்டில் உருவாகும் என்ற நாங்கள் நம்புவதாலும் பாரத தேசம் வகிக்கின்ற பாத்திரம் அதனை உறுதிப்படுத்தும் என்பதனாலும் ஆகும். உங்களையும் உங்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஏனையவர்களையும் சந்திப்பதற்கான ஒரு வாய்ப்பை உங்களால் முடிந்த அளவுக்கு விரைவாக எமக்கு வழங்குமாறும் நாம் வேண்டுகின்றோம் என இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளார்.

போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை தேவை-அவுஸ்திரேலியா-

australiaநல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தவும், பயனுள்ளதும் வெளிப்படையானதுமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பங்குடனான சமாதான திட்டத்தை முன்னெடுக்கவும் அவுஸ்திரேலியா இலங்கையை ஊக்குவிக்கும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சின் நாடாளுமன்ற செயலரும் செனட்டருமான பிரட் மேசன் தெரிவித்துள்ளார். அவர் அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸூக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இதனைக் கூறியுள்ளார். மோதல்களின் போது இரு தப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட கடுமையான குற்றங்கள் தொடர்பில் வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணைகளை முன்னெடுக்குமாறு அவுஸ்திரேலியா இலங்கையை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை சில வெளிநாட்டு புலம்பெயர் அமைப்புகளை தடைசெய்தாலும் அந்த அமைப்புகள் அவுஸ்திரேலியா சட்டத்திற்கு அமைய செயற்படும் சுதந்திரத்தை அவுஸ்திரேலியா கட்டுப்படுத்தாது. அவுஸ்திரேலியா உரிமைகளுக்கான சுதந்திரத்தை வலுவாக ஆதரித்து வருகிறது. அத்துடன் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் இலக்கு வைக்கப்பட்டதை நல்லிணக்கத்திற்கான உகந்த செயலாக அவுஸ்திரேலியா கருதவில்லை என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் நாடாளுமன்ற செலர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நவநீதம்பிள்ளை பழிதீர்க்க அவசரப்படுவதாக ஜாதிக ஹெல உறுமய குற்றச்சாட்டு-

Jathika Hela Urumayaபுலிகளை கொன்றமைக்கு பழி தீர்க்கவே நவநீதம்பிள்ளை அவசரப்படுகின்றார் ஜாதிக ஹெல உறுமய கட்சி உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நவநீதம்பிள்ளை முதற்கொண்டு ஜெயலலிதா வரையிலும் இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனைவரும் புலிகளினால் வழிநடத்தப்பட்டு வருபவர்களின் கைப்பொம்மைகள். இலங்கையில் போர்க்கால சூழலில் சர்வதேச நாடுகளின் ஆதரவும் உதவிகளும் எமக்குக் கிடைத்தது. அப்போது சர்வதேசத்திற்கு புலிகள் அமைப்பு பயங்கரவாதிகளாகவே இருந்தனர். அனைத்து நாடுகளிலும் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாகவும் சர்வதேச அளவில் தேடப்படும் இயக்கமாகவும் காணப்பட்டது. எனினும், யுத்தத்தின் பின்னர் புலிகள் இயக்கம் நல்லதொரு இயக்கமாகவும் அவர்களின் ஆயுதப் போராட்டம் நியாயமான ஒன்றெனவும் வலியுறுத்த ஆரம்பித்து விட்டனர். இன்று இலங்கைக்கு எதிராக விசாரணையினை கொண்டுவர முயற்சிக்கும் அனைவரும் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்களென்பது உண்மை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மோடி தமிழர்களுக்கு துரோகம் செய்யமாட்டார்-பாரதீய ஜனதா கட்சி-

bjpஇந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி தமிழ் மக்களுக்கு ஒருபோதும் துரோகம் இழைக்க மாட்டார் என பாரதீய ஜனதா கட்சி அறிவித்துள்ளது. தேவையற்ற பிரச்சினைகளை எழுப்பி அதன்மூலம் குழப்பங்களை ஏற்படுத்த தமிழகத்தின் சில கட்சிகள் முயற்சித்து வருவதாக பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் பொன்.இராதகிருஸ்ணன் குற்றம் சுமத்தியுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான முன்னாள் இந்திய மத்திய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது எனினும், புதிய பாரதீய ஜனதா கட்சி ஆட்சியானது இலங்கை வாழ் தமிழர்களின் நலன்களையும் பாதுகாக்கும் எனவும், தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மோடியின் பதவிப் பிரமான நிகழ்வுகளில் ஜெயலலிதா பங்கேற்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பி.பீ. ஜயசுந்தரவை பதவி நீக்கம் செய்யத் தீர்மானம்-

imagesCAAFRW6Nபொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தரவை பதவி நீக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் நிஹால் ஜயதிலக்கவும் பதவி நீக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய பெருந்தோட்டத்துறை அமைச்சின் செயலாளர் சுதர்மா கருணாரத்ன சுகாதார அமைச்சின் செயலாளராக மாற்றம் பெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தர, பொருளாதார அபிவிருத்தி அமைச்சை அழிவை நோக்கி கொண்டு செல்வதாக அமைச்சர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில் பி.பீ. ஜயசுந்தரவை அப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என விமல் வீரவன்ச தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் தகவல் தொலைத்தொடர்பு விழிப்புணர்வு பயிற்சி-

kilinochchiyil thakaval thodarpuகிளிநொச்சி இன்றையதினம் சர்வதேச தொலைத்தொடர்பு தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி கல்வி வலயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தகவல் தொலைத்தொடர்பு விழிப்புணர்வு ஒரு நாள் பயிற்சி நடைபெற்றுள்ளது. கிளிநொச்சி இரணைமடுவிலுள்ள இராணுவத்தின் கேட்போர் கூடத்தில் இந்த ஒரு நாள் பயிற்சி நிகழ்வு இன்றுகாலை 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. கிளிநொச்சி கல்வி வலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட 600பேர் பங்கேற்றிருந்தனர்.

பாரிய மக்கள் பேரணிக்கு ஐ.தே.கட்சி ஏற்பாடு-

UNPஇந்த வருடத்தில் மீண்டும் ஒரு பாரிய மக்கள் பேரணி ஒன்றை நடத்தவிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தல்களின் வெற்றியை நோக்கி ஐக்கிய தேசிய கட்சி பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக இந்த மாபெரும் பேரணி அமையும் என்று கயந்த கருணாதிலக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.