Header image alt text

வலிமேற்கில் உள்ளுராட்சிமன்ற துணைவிதிகள் தயாரிக்கும் செயற்திட்டம்-

vali metkil ulluratshi thunaivithikal thayarippu (1)உள்ளுராட்சி மன்ற துணைவிதிகள் தயாரிக்கும் செயற்திட்டம் கடந்த 29.04.2014, 30.04.2014 ஆகிய இரு நாட்கள் வலிமேற்கு பிரதேச சபையில் இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் தலமைதாங்கி உரையாற்றியபோது, உள்ளுராட்சி நிர்வாகம் என்பது மிக நீண்ட வரலாற்றை கொண்டுள்ளது. ஆரம்பகால வரலாற்றில் ஓவ்வோர் கிராமங்களும் கம்சபா என அழைக்கப்படும் கிராம சபையால் நிர்வகிக்கப்பட்டுள்ளது இக்கம்சபாக்களில் காணப்பட்ட தலைவர்கள் கமிக்க அல்லது காமினி என அழைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கிராம மட்டத்தில் நல் ஆட்சி நடாத்தியவர்கள் பிற்காலத்தில் நாட்டையும் ஆட்சி செய்துள்ளனர். சிறப்பான ஆட்சிக்கு கிராம மட்ட நிர்வாகமே உதவியுள்ளது. குறிப்பாக இந்த நாட்டில் நல் ஆட்சி 44 ஆண்டுகள் நடாத்திய மன்னன் எல்லாளன் இக்கிராம மட்ட ஆட்சியின் வாயிலாக சிறந்த நிர்வாகத்தினையும் நீதி தவறாத ஆட்சியினையும் நடாத்தியதாக கூறப்படுகின்றது. இதே நிர்வாக கட்டமைப்பின் நடவடிக்கையை ஆங்கிலேய ஆட்சியின் போதும் ஆட்சியாளர்கள் பயன்படுத்தியுள்ளனர். இன்று இக்கட்டமைப்பானது உள்ளுராட்சி அமைப்பாக மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. இவ் உள்ளுராட்சி அமைப்பால் நடாத்தப்படும் நிர்வாகம் சிறப்பானதாகவும் நியாயமானதாகவும் அமைய வேண்டுமானால் அங்குள்ள துணைச்சட்டங்கள் மிக முக்கியமானதாக அமையும் இத்துணைச் சட்டங்கள் பற்றிய விழிப்புனர்வு மக்கள் மத்தியில் சரியானதக சென்றடைய வேண்டும் Read more

சட்டவிரோதமாக ஆஸி செல்ல முயற்சித்த 64பேர் கைது-

sattavirotha aasi payanamகடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 54 பேர் முல்லைத்தீவு கடற்பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்றுஅதிகாலை 5.30 மணியளவில் கடற்படையினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய கூறியுள்ளார். இவர்கள் திருகோணமலை துறைமுகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்வதற்கு முற்பட்ட பலர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். எனினும், சமீப காலங்களாக எவரும் இவ்வாறு கைதுசெய்யப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

வடக்கு ரயில் சேவை வழமைக்குத் திரும்பியது-

Vadapakuthi trainகுருநாகல், பொதுஹர ரயில் விபத்தின் பின்னர் வடக்கு மார்க்கத்தில் இன்றுகாலை முதல் அலுவலக ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்பிரகாரம் மஹவ, குருநாகல் மற்றும் பொல்கஹவெல ரயில் நிலையங்களிலிருந்து மூன்று அலுவலக ரயில்கள் பயணத்தை ஆரம்பித்ததாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் சுட்டிக்காட்டுகின்றது. இந்த அலுவலக ரயில் சேவைகள் தற்காலிகமாக இரண்டாம் மார்க்கத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நிலையம் கூறுகின்றது. பளை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பகுதிகளிலிருந்து பயணத்தை ஆரம்பித்துள்ள இரவுநேர தபால் ரயில்களும் கொழும்பை நெருங்கியுள்ளன.. பளை நோக்கி பயணிக்கும் யாழ்தேவி ரயில் அதிகாலை 5.45க்கு கொழும்பிலிருந்து புறப்பட்டது என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் கூறியுள்ளது.

தேசிய வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு நிர்மாணம்-

colombo hospitalகொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிற்கான பத்து மாடிகளைக் கொண்ட புதிய கட்டடமொன்றை நிர்மாணிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டு சீன அரசாங்கம், 13,400 மில்லியன் ரூபாவை நிதியுதவியாக வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தேசிய வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு தற்போது சிறிய கட்டடமொன்றிலேயே இயங்கி வருவதால், அப் பிரிவை நாடுகின்ற நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்ட பின்னர், மக்களுக்கு செயற்திறனுடன் கூடிய தரமான வைத்திய சேவைகளை வழங்க முடியும் என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மன்னாரிலிருந்து இந்தியா செல்லவிருந்த நால்வர் கைது-

unnamed2மன்னாரில் இருந்து படகு மூலம் சட்ட விரோதமாக இந்தியா செல்லவிருந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் வவுனியாவின் பம்பைமடு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. மன்னார் கடற்கரையில் இருந்து தங்களின் பயணித்துக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தபோது, கடற்படையினர் அவர்களை கைதுசெய்து பொலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படவுள்ளதாக தெரியவருகிறது.

யாழ். பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்-

jaffna campus pathukappu uththiyokatharயாழ்.பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு உத்யோகத்தர்கள் இன்றுகாலை 8 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பல்கலைக்கழக மாணவர்களால் தாக்கப்பட்டதாகக் கூறியே இந்த ஆர்ப்பாட்டத்தை அவர்கள் முன்னெடுத்திருந்தனர். இதனை முற்றுமுழுதாக மறுத்த மாணவர்கள் சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஆங்காங்கே தொங்கவிடப்பட்டு தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

புலிகளுக்கு உதவிய தபால் ஊழியர் கைது-

imagesCA5PZGM2புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் உயிர்கொடுக்கும் நோக்கில் செயற்பட்டு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட அப்பன் என்றழைக்கப்படும் நவநீதனுக்கு உதவியதாக கூறி தபால் ஊழியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பன் என்ற புலி உறுப்பினர், அநுராதபுரத்தில் தங்கியிருந்த போது மேற்படி தபால் ஊழியர் அவருக்கு உதவியதாக பொலிஸார் கூறியுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர், தபால் ஊழியராகச் செயற்பட்ட அதேவேளை, திறப்புக்களை வெட்டும் தொழிலையும் செய்து வந்துள்ளார் என பொலீஸார் கூறியுள்ளனர்.

ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நஷ்டஈடு-

pothuheraகுருநாகல் – பொத்துஹெர ரயில் விபத்தில் காயமடைந்த நபர்களுக்கு, 25,000 ரூபா நஸ்டஈடு வழங்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இதன்படி ரயில்வே திணைக்களத்தின் ஊடாக குறித்த நிதி வழங்கப்படவுள்ளதாக ரயில்வே வர்த்தக அதிகாரி ஜீ.டப்ளியூ.எஸ்.சிசிரகுமார குறிப்பிட்டுள்ளார். கடந்த 30ம் திகதி (ஏப்ரல் 30) குருநாகல் பொத்துஹெர பிரதேசத்தில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அர்த்தமுள்ள நடவடிக்கை மேற்கொள்ளாமை ஏமாற்றமே-அமெரிக்கா-

Pisvalபொறுப்புடைமை மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் கடந்த நான்கு வருடங்களில் இலங்கை போதுமான மற்றும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை ஏமாற்றமளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் தொடர்பான உதவிச் செயலாளர் நிஷா தேஷாய் பிஸ்வால் இன்றையதினம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், நாட்டை இன்னும் நீடித்த அமைதி நோக்கி எடுத்துச் செல்லவும், இலங்கை அரசுடனும் மக்களுடனும் அமெரிக்கா இணைந்து செயற்பட உறுதியளித்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 5,646 விதவைகள்-

kilinochchi vithavaikalகிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தினால் கணவன் இழந்து விதவைகளாக 5,646 பெண்கள் காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன் இன்று தெரிவித்துள்ளார். அத்துடன், 1,888 பெண்கள் கணவனால் கைவிடப்பட்ட நிலையில் உள்ளனர். இவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்கில் கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களிலும், ஆடைத் தொழிற்சாலை நிறுவனங்களிலும், தொழிற்பயிற்சி நிறுவனங்களிலும் வேலைக்காகச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அத்துடன், தன்னார்வு நிறுவனங்களினால் வழங்கப்பட்ட சுயதொழில் உதவிகள் கடன்கள் மூலம் சுயதொழில்களையும் இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள 1 இலட்சத்து 32 ஆயிரத்து 513 பேரில் 12 ஆயிரத்து 756 பேர் முதியவர்களாகக் காணப்படுகின்றனர்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சூரிச் மாநிலத்தில் புளொட்டின் மே தின ஊர்வலம்-

May Day 2014சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில்; சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் இணைந்து இன்று நடத்திய மேதின (தொழிலாளர்தின) ஊர்வலத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சுவிஸ் கிளையினரும் கலந்து சிறப்பித்திருந்தனர். இந்த நிகழ்வின்போது தமிழ் இனத்தின்; பிரச்சினைக்கு உரிய அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், மறுக்கப்பட்டு வரும் இடம்பெயர்ந்துள்ள மற்றும் மீள்குடியேறிய மக்களின் அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அனைத்து அதிகாரங்களும் உழைக்கும் மக்களுக்கே, அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம், போன்ற கோஷங்களும் எழுப்பப்பட்டன.

காலை 10 மணியளவில் சூரிச் பிரதான புகையிரத நிலையத்துக்கு அண்மையில் உள்ள (சீல் போஸ்டுக்கு) LAGER Strasse எனும் இடத்தில் இன்றைய மேதின ஊர்வலம் ஆரம்பமாகி பிற்பகல் 1மணியளவில் BüRKLI Platz என்ற இடத்தில் நிறைவடைந்தது. இம் மேதின ஊர்வலத்தில் புளொட் அமைப்பின சுவிஸ்கிளை தோழர்கள், ஆதரவாளர்கள், மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர். இம் மேதின ஊர்வலத்தில் ஜெர்மனியிலிருந்து கலந்துகொண்ட தோழர் ஜூட் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், பல்வேறு நெருக்கடிகள், சிரமங்களுக்கு மத்தியிலும் வருடாவருடம் புளொட் அமைப்பின் சுவிஸ் கிளையினர் இந்த மேதின ஊர்வலத்தை நடத்தி வருவதும், இநநிகழ்வில் பெருமளவானோர் பங்கேற்று உரிமைக்குரல் கொடுப்பதும் மிகவும் மகிழ்ச்சிக்குரியதும், சிறப்பான விடயமும் ஆகும் அத்துடன், இம்முறை அரசியல் தீர்வு தொடர்பில் கோசங்கள் எழுப்பப்பட்டது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும் என்று குறிப்பிட்டார்.

அத்துடன், சுவிஸ் கிளையினரின் பங்கேற்புடன் சூரிச்சில் வருடா வருடம் நடாத்தப்படும் மேதின ஊர்வலம் மற்றும் அவற்றில் பெருவளவானோர் பங்கேற்பது தொடர்பிலும் இன்றைய மேதின ஊர்வலம் பற்றியும் பல ஊடகவியலாளர்கள் இன்றைய மேதின ஊர்வலத்தினைத் தொடர்ந்து புளொட் அமைப்பு சார்பில் பங்கேற்றிருந்தவர்களிடம் கேள்விகளை கேட்டபொழுது, புளொட்டின் சுவிஸ் கிளையைச் சேர்ந்த சுவிஸ் ரஞ்சன் அவர்கள், அவற்றிற்கான பதில்களை விரிவான விளக்கங்களுடன் வழங்கினார். இதனைத் தொடர்ந்து இன்றைய மேதின ஊர்வலத்தில் பங்கேற்ற அனைவருக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சார்பில் சுவிஸ்கிளையினர் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

swiss may day 2014 (8)swiss may day 2014 (7)swiss may day 2014 (6)swiss may day 2014 (4)

swiss may day 2014 (3)swiss may day 2014 (1)

வடக்கு கிழக்கில் மேதின நிகழ்வுகள்-

TNA chavakachery (2)சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று ஊர்வலங்களும், பேரணிகளும் மேதினக் கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதன்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வு யாழ். சாவகச்சேரி தென்மராட்சி கலைமன்ற கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. சாவகச்சேரி நகரிலிருந்து தென்மராட்சி கலைமன்ற கலாசார மண்டபம் வரை ஊர்வலமாக சென்று அங்கு மே தினக் கூட்டம் நடைபெற்றது. வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன், மாவை சேனாதிராஜா, உள்ளிட்ட கூட்டமைப்பின் பாராளுமனற உறுப்பினர்களும், மாகாணசபை மற்றும் பிரதேச சபை அங்கத்தவர்கள் என பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். அத்துடன் கிளிநொச்சி ஸ்கந்தபுரத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேதின நிகழ்வு இடம்பெற்றது. ஸ்கந்தபுரம் சந்தியில் ஆரம்பமான மேதின பேரணி பொதுமண்டபத்தில் நிறைவடைந்ததுடன் அங்கு மேதினக் கூட்டமும் நடைபெற்றது. மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மற்றுமொரு மே தின நிகழ்வு மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு நகரிலுள்ள மகாத்மா காந்தி சதுக்கத்திலிருந்து ஆரம்பமான மேதின ஊர்வலம் சாள்ஸ் மண்டபம்வரை சென்று அங்கு மேதினக்கூட்டம் நடைபெற்றது. இதேவேளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரசும் இணைந்து நடாத்திய மே தின ஊர்வலமும், பொதுக்கூட்டமும் கரவெட்டி ஞானவைரர் ஆலய முன்றலில் நடைபெற்றது. இதேவேளை வவுனியாவில் ஐக்கியப்பட்ட தொழிலாளர்களின் புரட்சிகர மேதின பேரணியும் மாபெரும் பொதுக்கூட்டமும் நடைபெற்றுள்ளது, வவுனியா நகர இலங்கை போக்குவரத்து சபை தரிப்பிடத்திலிருந்து பேரணி ஆரம்பமாகி நகரசபை மண்டபத்தை அடைந்தது.

vavuniya_may_005vavuniyaVavuniya May Day (1)TNA kilinochchiTNA chavakachery (3)TNA chavakachery (1)TNA batticaloa3TNA batticaloa (2)TNA batticaloa (1)TNA batticalao4tamil thesiya makkal munnani (2)tamil thesiya makkal munnani (1)Tholilalar thesiya sangam

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொழிலாளர் தின நிகழ்வுகள்-

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின ஊர்வலம், கொழும்பு தாமரைத் தடாகம் அரங்கிற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டு கெம்பல் மைதானத்தில் மேதினக் கூட்டம் இடம்பெற்றுது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் மே தின ஊர்வலம் ராஜகிரிய ஆயுர்வேத சுற்றுவட்டததில்; ஆரம்பிக்கப்பட்டு பொரளையை வந்தடைந்து நடைபெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின ஊர்வலமும் கூட்டமும் அம்பாறையில் இடம்பெற்றது. மற்றும் தேசிய சுதந்திர முன்னனியின் மேதின ஊர்வலம் தெமட்டகொட புனித ஜோனஸ் கல்லூரிக்கு அருகில் ஆரம்பிக்கபட்டு தெமட்டகொட பீ.டீ. சிறிசேன விளையாட்டரங்கில் பொதுக்கூட்டம் இடம்பெற்றது. மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) மேதின பேரணி தெஹிவளை எஸ்.டீ.எஸ் ஜயசிங்க மைதானத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டு ஹெவலோக் நகர் பீ.ஆர்.சீ. விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இதேவேளை ஜனநாயக கட்சியின் மேதின ஊர்வலம் கொழும்பு கோட்டை சந்தியில் ஆரம்பிக்கப்பட்டு பெலவத்தை புத்ததாச மைதானத்தில் கூட்டம் இடம்பெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டம் பண்டாரவளை நகரில் இடம்பெற்றதுடன் மலைய மக்கள் முன்னணியின் மே தினக் கூட்டம் தலவாக்கலை நகர சபை மைதானத்தில் நடைபெற்றது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தினக் கூட்டம் ஹட்டன் நகரில் நடைபெற்றது. இதேவேளை அனைத்து விதமான அடக்கமுறைகளுக்கும் எதிரான ஐக்கிய தொழிலாளர் மேதினப் பேரணி என்ற தொனிப் பொருளில் பல்வேறு தொழிற் சங்கங்களும் சிவில் அமைப்புக்களும் இணைந்து நடத்திய மேதின பேரணி கட்டுநாயக்கவில் இடம்பெற்றது.

aaalum katshi aalum katchi aikkiya tholilaalar... aikkiya tholilaalar ilankai tholilalar congres ilankai tholilalar congress... ilankai tholilalar congress makkal viduthalai munnai.. makkal viduthalai munnani malaiyaka makkal munnani.... malaiyaka makkal munnani

unpsunp

வெளியுறவுக் கொள்கைதான் தலையீடுகளுக்கு காரணமென்பதை உணர வேண்டும்-மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி லிங்கநாதன் சுட்டிக்காட்டு-

visu30.04.2014 அன்று திருகோணமலை நகராண்மைக்கழக பொது மண்டபத்தில் வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாணசபை உறுப்பினர் ஒருங்கிணைப்புக் கூட்டம் இடம்பெற்றபோது வடமாகாணசபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் குறிப்பிட்டதாவது.  மதிப்புக்குரிய எமது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் கௌரவ இரா.சம்பந்தன் ஜயா அவர்களே, செயலாளர் கௌரவ மாவை. சோ.சேனாதிராசா ஜயா அவர்களே, வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் ஜயா அவர்களே, கௌரவ சுரேஸ் பிரேமச்சந்திரன், கௌரவ செல்வம் அடைக்கலநாதன், கௌரவ வடமாகாணசபை அவைத்தலைவர் சிவஞானம், கிழக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ தண்டாயுதபாணி அவர்களே, பாராளுமன்ற உறுப்பினர்களே, மாகாணசபை உறுப்பினர்களே அனைவருக்கும் முதற்கண் வணக்கம். ஜ.நா. மனித உரிமைப் பேரவைத் தீர்மானமும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாடுகளும் சம்பந்தமாக நான் ஒரு முக்கியமான விடயத்தை தங்கள் மேலான கவனத்துக்கு கொண்டு வரலாம் என நினைக்கின்றேன். அமெரிக்கா தலமையிலான நாடுகளினால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட இலங்கைக்கான தீர்மானத்தின் வெற்றிக்காக தமிழ் தேசியக் கூட்டமைபின்; தலைவர் கௌரவ இரா.சம்பந்தன் மற்றும் கௌரவ மாவை.சோ.சேனாதிராசா, கௌரவ Read more

கூட்டமைப்பை பதிவு செய்யும் நடவடிக்கையை முன்னெடுக்க ஐவர் கொண்ட குழு-

1719856666tna3தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவுசெய்வதற்குரிய நடவடிக்கைளை முன்னெடப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் அதன் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் திருமலை நகரசபை மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (29.04.2014) நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பாக இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், எஸ் சிறீதரன், ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், கே. கருணாகரம்(ஜனா), ஹென்றி மகேந்திரன், புளொட் சார்பாக செயலாளர் சு.சதானந்தம், கந்தையா சிவநேசன்(பவன்), ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், இரா.துரைரெட்ணம் ஆகியோர் பங்கேற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் புலிகள்மீதான தடை நீடிப்பு-

americaபுலிகள் இயக்கம் சர்வதேச ரீதியாக தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர்ந்த மக்கள், புலிகளுக்கான ஆயுதங்கள் மற்றும் தொடர்பாடல் சாதனங்களைப் பெற்றுக்கொள்வதற்கான நிதி திரட்டப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள வருடாந்த தீவிரவாதம் சம்பந்தமான அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009ல் புலிகள் இலங்கையில் தோற்கடிக்கப்பட்டாலும், 2013முதல்; அந்த இயக்கம் மீண்டும் இலங்கையில் மீளுருவாகுவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக பயங்கரவாத தடைச்சட்டம் போன்றவற்றை அரசாங்கம் பயன்படுத்துவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த சட்டம் சில தருணங்களில் முறைக்கு புறம்பாக பயன்படுத்தப்படுவதாகவும் அமெரிக்காவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை வெளிநாட்டு தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலிகளையும் அமெரிக்கா உள்ளடக்கி இருக்கிறது. இதன்மூலம் புலிகளுக்கு எதிரான அமெரிக்காவின் தடை தொடர்;கின்றது.

புலி உறுப்பினர்களை சுட்டுக்கொன்ற இராணுவ அதிகாரிகள் கௌரவிப்பு-

Iranuva athikaarikaluku paarattuவவுனியா நெடுங்கேணி பிரசேத்தில் ஏப்ரல் 11ஆம் திகதி புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்பட்ட கோபிதாஸ், அப்பன் மற்றும் தேவியன் ஆகிய மூவரையும் சுட்டுக் கொன்றதுடன் திறமையாக செயற்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத் தலைமையகத்தில் நேற்று நடந்த இந்நிகழ்வில் வன்னிப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, சிறப்புப் படைப்பிரிவின் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஆர்.எம்.வை.ஜே.ரத்நாயக்க, இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் கேணல் ரி.எஸ்.சாலி, 2வது சிறப்புப்படைப் பிரிவின் கட்டளை அதிகாரி லெப்.கேணல் எம்.பி.கே.எல்.அமரசிங்க, லெப். டி.எம்.திசநாயக்க, கோப்ரல் தினேஸ்குமார, கோப்ரல் ஜெயசிங்க, கோப்ரல் கமகே ஆகிய எண்மரே கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மத்திய ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு, ஒருவர் பலி-

sennai sennai1 sennai4தமிழ்நாடு, சென்னை மத்திய ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்றுகாலை குண்டு வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 12பேர் காயமடைந்துள்ளனர். பெங்களூரில் இருந்து புறப்பட்ட கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் இன்றுகாலை 7.30 மணியளவில் சென்னை மத்திய ரயில் நிலையத்திற்கு வந்தது. 9ஆவது நடைமேடைக்கு ரயில் வந்து சேர்ந்த சில நிமிடங்களில் ரயிலில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. இதில் எஸ்-4, எஸ்-5 பெட்டிகள் சேதமடைந்தன. குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 24வயதான இளம் யுவதி பலியானார். அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு கீழ் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்கள் அனைவரும் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

புலம்பெயர் அமைப்புகளுக்கு எதிரான தடை, கனடா புறக்கணிப்பு-

canadaஇலங்கை அரசாங்கத்தினால் 16 புலம்பெயர்ந்த அமைப்புகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையை, தாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என கனடா தெரிவித்துள்ளது. கனடாவின் வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் இதனைத் தெரிவித்துள்ளார். 16 புலம்யெர்ந்த அமைப்புகள் மற்றும் 424 தனி நபர்களுக்கு எதிராக அண்மையில் அரசாங்கம் தடை விதித்திருந்தது. எனினும் இந்த அமைப்புகள் 16ம் ஏனைய தனி நபர்களும் கனடாவில் சுயாதீனமாக இயங்க முடியும் என்று அமைச்சர் ஜோன் பெயார்ட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

காணாமற்போன மூதூர் மாணவிகள் கண்டுப்பிடிப்பு-

muthur missingதிருகோணமலை மூதூர், சம்பூர் – சேனையூர் மகா வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் முதல் காணாமல்போன பாடசலை மாணவிகள் மூவர் நேற்றுமாலை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் காணாமல் போயுள்ளதாக நேற்று முன்தினம் சம்பூர் பொலீஸ் நிலையத்தில், அவர்களின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று மட்டக்களப்பு – ஏறாவூர் கிராம அதிகாரியினால் ஏறாவூர் பொலீஸ் நிலையத்தில் குறித்த மாணவிகள் மூவரும் ஒப்படைக்கப்பட்டனர். குறித்த மாணவிகளில் ஒருவரது மாமியின் வீட்டில் அவர்கள் தங்கியுள்ளனர் என கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து கிராம சேவையாளரினால் பொலீசாரிடம் கொண்டு வந்து மாணவிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தடை செய்யப்பட்டுள்ள அமைப்புகள் பற்றி தெளிவுபடுத்தல்-

srilankaஇலங்கையினால் தடை செய்யப்பட்டுள்ள அமைப்புகள் தொடர்பில் சர்வதேச நாடுகளுக்கு தெளிவுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாடுகளில் இருந்து கொண்டு இலங்கையில் மாற்று அரசாங்கம் ஒன்றை உருவாக்க பிரித்தானிய தமிழர் அமைப்பு, உலக தமிழர் அமைப்பு உள்ளிட்ட புலிகளிளுடன் தொடர்புடைய 16 அமைப்புகளை தடை செய்ய இலங்கை அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டது. அதுபோல் நெடியவன் உள்ளிட்ட 430 விடுதலை புலி செயற்பாட்டாளர்களை கைது செய்யுமாறு அரசாங்கம் சர்வதேச காவல்துறையிடம் அறிவித்துள்ளது. அத்துடன் நெடியவன் உள்ளிட்டவர்களுக்கு எதிராக சிவப்பு அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

வடக்கு மார்க்க ரயில் சேவையில் பாதிப்பு-

pothuhera 05வடக்கு ரயில் மார்க்கத்தின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்கான ரயில் போக்குவரத்து தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளது. இந்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பொல்கஹவெல வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவிக்கின்றது. குருநாகல் – பொத்துஹெர ரயில் நிலையத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தினால் சேதமடைந்த ரயில் மார்க்கத்தை புனரமைத்தல் மற்றும் விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளை அகற்றும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் இன்று முற்பகல் பயணிக்கவிருந்த தூரசேவை ரயில்களின் போக்குவரத்து இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் நிலையம் கூறுகிறது. இதன்படி யாழ்தேவி, உட்பட மூன்று ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதேவேளை பொதுஹெரவில்இடம்பெற்ற ரயில் விபத்தினைத் தொடர்ந்து கொழும்பு – கோட்டையில் இருந்து பளை வரை சென்ற ‘தேசத்தின்மகுடம்’ கடுகதி ரயிலின் சாரதி, உதவியாளர் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், பொத்துஹெர ரயில்நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சமிஞ்சை வழங்குனர் ஆகியோரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அரச தாதி உத்தியோகஸ்தர்களின் பணிப்புறக்கணிப்பு-

thaathiyar panipurakanippu (2)thaathiyar panipurakanippu (1)நாடாளாவிய ரீதியில் நடைபெற்றுவரும் அரச தாதியர் உத்தியோகஸ்தர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமுகமாக யாழ். போதனா வைத்தியசாலை தாதிய கிளைச்சங்கமும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையின் தாதிய கிளைச்சங்கத்தை சேர்ந்த தாதியர்கள் இன்றுகாலை 7 மணிமுதல் வைத்தியசாலையின் புதிய கட்டடத்தொகுதிக்கு முன்பாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் தொடர்பாக அரச தாதிய உத்தியோகத்தர் சங்கத்தின் உபதலைவர் சிவயோகம் கருத்து தெரிவிக்கும்போது, தாதிய மாணவர்களுக்கு மருத்துவ மாது பயிற்சி நெறியினை மகப்பேற்று வைத்திய நிபுணர்கள் வழங்க மறுக்கின்றனர். அதேவேளை மகப்பேற்று விடுதிக்கு தாதியர்கள் சென்றால் வைத்திய நிபுணர்கள் வெளிநடப்பு செய்கின்றனர். தாதியர்களுக்கான மகப்பேற்று மருத்துவ மாது பயிற்சி நெறியினை வழங்க சுகாதார அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அப் பயிற்சி நெறியினை மகப்பேற்று வைத்திய நிபுணர்கள் தாதியர்களுக்கு வழங்க மறுக்கின்றனர். இப்பயிற்சி நெறியானது மூன்று வருடங்கள் பணியாற்றியவர்களுக்கு தேர்வு அடிப்படையில் வழங்கப்படும். Read more