Header image alt text

குப்பிளான் தெற்கு ஞானகலா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப் போட்டி-(படங்கள் இணைப்பு)-

DSC_9855 (3)யாழ். குப்பிளான் தெற்கு ஞானகலா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா-2015 நிகழ்வு நேற்றுமாலை (06.06.2015) முன்பள்ளியின் தலைவர் திரு. சதீஸ்குமார் அவர்களது தலைமையில் நடைபெற்றது, இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். இந்நிகழ்வில் ஏழாலை சிறீமுருகன் வித்தியாசாலையின் அதிபர் திரு. சந்திரகுமார், பனை, தென்னை அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் திரு. தவராசா, கிராம சேவையாளர் மயூரதன், சமூக ஆர்வலர் அபராசுதன் ஆகியோரும் விசேட அதிதிகளாக கலந்து கொண்டிருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து மங்களல விளக்கேற்றல் இடம்பெற்றது. தொடர்ந்து முன்பள்ளிச் சிறார்களின் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றன. அவற்றில் முன்பள்ளிச் சிறார்களின் இசையும் அசைவும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. இவ்விழாவில் பெருந்தொகையான ஊர்மக்களும் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

மக்களின் காணிகளை மீளளிக்க வேண்டும்- இரா.சம்பந்தன்-

sampanthanஇலங்கையில் உண்மையான நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாக இருந்தால், பொது மக்கள் தங்களின் சொந்த காணிகளில் குடியேற்ற அனுதிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் வைத்தே அவர் இதனைக் கூறியுள்ளார். மக்கள் தங்களின் காணிகளில் குடியேற்றப்படுவது கட்டாயமாகும். இதன் ஊடாகவே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். இதற்கான நடவடிக்கைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டு வருகிறது என்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பான அறிக்கை ஆகஸ்ட் 15ல் கையளிப்பு-

missingகாணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார். அது செப்டம்பர் மாதம் நடைபெறும் ஜெனீவா மனித உரிமைகள் மாநாடு ஆரம்பமாவதற்கு முன்னதாக வெளியிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். 1990 ஆண்டு ஜுன் 10ம் திகதிமுதல் 2009ம் ஆண்டு மே 19ம் திகதி வரையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் இந்த குழு விசாரணை நடத்திவந்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்-

tna (4)தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் எதிர்வரும் 10ம் திகதி நடைபெறவுள்ளது. கூட்டமைப்பின் உள்ளடங்கியிருக்கும் கட்சிகளான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை, தமிழர் விடுதலை இயக்கம் மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்பன இணைந்து, இந்த கூட்டத்தை கூட்டுமாறு, கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தன. இதனடிப்படையிலேயே இந்த கூட்டம் நடத்தப்படவுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இதன்போது தேர்தலில் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான விசேட குழு ஒன்றை உருவாக்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

11 வீதமான மாணவர்கள் போதைப் பொருள் பாவனை-

world healthஇலங்கையின் பாடசாலை மாணவர்களில் 11 வீதமானவர்கள் புகையிலை சார்ந்த போதைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளமை ஆய்வில் தெரியவந்துள்ளது. 13வயதுக்கும் 15வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்களே இந்த பழக்கத்திற்கு உள்ளாகியிருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையின் இளம் பருவத்தினர் மத்தியில் காணப்படும் புகையிலை சார்ந்த போதைப்பொருள் பாவனை தொடர்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்மூலம் கண்டறியப்பட்டுள்ள விடயங்கள் பாரதூரமானவை என அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அபாயத்திலிருந்து பாடசாலை மாணவர்களை விடுவிப்பதற்கு விரிவான செயற்றிட்டமொன்றைத் தயாரிக்க வேண்டும் என டொக்டர் நிலங்க சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் உளநலம் பாதிக்கப்படுவோர் அதிகரிப்பு-

ertrrகிளிநொச்சி மாவட்டம் உட்பட வன்னிப்பகுதிகளில் கடந்த யுத்தத்தின் பின்னர் உளநலம் பாதிக்கப்பட்டோரின் தொகை வெகுவாக அதிகரித்து காணப்படுகின்றது. இவ்வாறு உளநோய்க்கு உள்ளானோரில் பலர் தற்கொலை செய்து கொள்வதை காணமுடிகின்றது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் உள்ள மலையாளபுரம் கிராம சேவையாளர் பிரிவில் மட்டும் கடந்த சில மாதங்களுக்குள் ஐந்து பேர்வரை உளநலம் பாதிப்பால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதேவேளை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் பரந்தனில் உள்ள கிளிநொச்சி மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை ஆகியவற்றில் உளவள சிகிச்சைப்பிரிவுகள் இயங்கி வருகின்றன. இங்கு சிகிச்சை பெறவரும் மனநோயாளர்களின் தொகையும் அதிகரித்து காணப்படுகிறது.

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி கையெழுத்துவேட்டை-

signமன்னார் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சர்ச்சையினை அடுத்து தடைப்பட்டுள்ள வட மாகாண அகதி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி 2 இலட்சம் கையெழுத்துக்களைச் சேகரிக்கும் நடவடிக்கை இன்று முற்பகல் 10மணிக்கு, மன்னார், முசலி பிரதேச சபைக்குட்பட்ட மறிச்சுக்கட்டி கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில், கைத்தொழில் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வட மாகாணசபை உறுப்பினர் ரிபாகான் பதியுதீன், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். வடபகுதி முஸ்லிம் அகதிகளின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி ஆதரவுக் கையெழுத்து பெறும் மற்றுமொரு நடவடிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜும்-ஆ தொழுகையைத் தொடர்ந்து நாடு முழுவதிலுமுள்ள பள்ளிவாசல்களில் இடம்பெறவுள்ளது.

வேகத் துப்பாக்கிகளை பயன்படுத்த முடிவு-

fddநாட்டில் உள்ள பிரதான வீதிகளில் 86 வீதிகளில் வேகத் துப்பாக்கிகளை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது. சாரதிகள் தங்களுடைய வாகனங்களின் வேகத்தில் கட்டுப்பாட்டினை மீறி செலுத்துவதனால் பல விபத்துக்கள் இடம்பெறுகின்றன. அவற்றை தடுக்கும் வகையிலேயே இந்த நடிவக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்மானத்துக்கு அமையவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவிருக்கின்றது என்றும் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

விபத்தில் குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு, 10பேர் காயம்-

accidentஅநுராதபுரம் – குருநாகல் பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 1வயதினையுடைய குழந்தையொன்று உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன், 10பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 12 பேருடன் பயணித்துக் கொண்டிருந்த இந்த உழவு இயந்திரத்துடன் பௌசர் வண்டியொன்று மோதி விபத்துக்குள்ளாகியது. இதன்போது காயமடைந்தவர்கள் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, பௌசர் வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் விபத்தில் பலியானவர்களில் 331 பேரின் சடலங்கள் மீட்பு-

china shipயாங்ஸி நதியில் மூழ்கிய சீனக்கப்பலில் பயணித்தவர்களுள் 331 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த திங்கட்கிழமை குறித்த கப்பல் புயலில் சிக்கி யாங்ஸி நதியில் மூழ்கியது. இனிமேல் எவரையும் உயிருடன் மீட்பது சாத்தியமற்றது என மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர் குறித்த கப்பலில் பயணித்த 456 பேரில் 14 பேரே இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதோடு நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடரந்தும் காணாமற்போயுள்ளதாக கூறப்படுகின்றது.

தியாகி பொன்.சிவகுமாரனின் 41ம்வருட நினைவுதினம்-

siva[1]தியாகி உரும்பிராய் பொன்.சிவகுமாரனின் 41ம் வருட நினைவுதினம் நேற்று (05.06.2015) ஆகும். பொன்.சிவகுமாரன் தமிழ் மக்களின் விடிவிற்கான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப ஹர்த்தாக்களில் ஒருவராவார். பொன்.சிவகுமாரன் தமிழ் மக்கள் மத்தியில் அன்பையும், மதிப்பினையும் பெருமளவில் பெற்றிருந்தார். இலங்கை போராட்ட வரலாற்றில் தமிழ் மக்களின் விடிவிற்காக முதன்முறையாக தம் இன்னுயிரைத் தியாகம் செய்து ஒரு வரலாறினை இவர் படைத்தார். 1950ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் திகதி பிறந்த இவர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரின் முன்னாள் மாணவராவார். 1974ம் ஆண்டு ஜூன்மாதம் 5ம்திகதி அன்று பொலீசாரின் சுற்றிவளைப்பின்போது அவர்களிடம் அகப்படாமல் தன்னுயிரை தியாகம் செய்தார்.

வில்பத்து மீள்குடியேற்றம் குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு-

adssவில்பத்து சரணாலயத்துக்கு அருகில் மேற்கொள்ளப்படும் மீள்குடியேற்றம் தொடர்பாக சுற்றாடல் அமைப்புகள் தயாரித்த அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், நேற்று கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நேற்றிரவு சுற்றாடல் அமைப்பு இந்த அறிக்கையை கையளித்துள்ளது. இவ் விடயம் சம்பந்தமாக தாம் பலதரப்பினரிடம் அறிக்கை கோரியிருப்பதாகவும் அவற்றை துரிதமாக வழங்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். அவ்வறிக்கைகள் கிடைத்த பின்னர் வில்பத்து சரணாலயத்துக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டு வரும் மீள்குடியேற்றம் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சாவகச்சேரியில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு-

dead.bodyயாழ். சாவகச்சேரி இல்லாரையிலிருந்து எரிந்த நிலையில் ஆணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி கல்வயலைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான சதாசிவம் சபாரட்ணம் (வயது 55) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று இரவு 9 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறியவர் இன்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மாங்காடு கடற்கரையில் வயோதிப மாதுவின் சடலம் மீட்பு-

bodyமட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு கடற்கரையில் இன்றுகாலை 8.30 மணியளவில் வயோதிப பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலம் களுதாவளையைச் சேந்த சின்னத்தம்பி பரஞ்சோதி (வயது63) என்பவருடையதென கணவரால் அடையாளம் காணப்பட்டது. குறித்த பெண், நேற்று இரவிலிருந்து காணமற்போயிருந்ததாகவும் அவரது குடும்பத்தினரால் அப்பெண் தேடப்பட்டு வந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

எகெலியகொட விபத்தில் நால்வர் உயரிழப்பு-

accidentஇரத்தினபுரி- கொழும்பு பிரதான வீதியின் எகெலியகொட பகுதியில் இன்று காலை 2.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. முச்சக்கர வண்டியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு, கொழும்பிலிருந்து இரத்தினபுரி நோக்கிச் சென்ற பஸ்ஸ{டன் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் 18 வயதான இருவர் மற்றும் 16 வயதான ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 29 வயதான ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தூக்கில் தொங்கிய நிலையில் மாணவியின் சடலம் மீட்பு-

suicideகிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளதாக குற்றங்களை கண்டறியும் பொலிஸ் பிரிவின் (சொகோ) மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி ஐ.பி.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். களுதாவளை மாவடி வீதியைச் சோந்த 25வயதான குணரத்தினம் வதனா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியா அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலய வெள்ளி விழா நிகழ்வு-(படங்கள் இணைப்பு)

IMG_3761வவுனியா அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயத்தின் 25ஆவது ஆண்டு நிறைவையொட்டி பாடசாலையின் வெள்ளி விழா நிகழ்வு இன்று (05.06.2015) வெள்ளிக்கிழமை காலை 9.30மணியளவில் வித்தியாலயத்தின் அதிபர் திரு. சு.உதயகுமார் அவர்களது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவசக்சதி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் ஆகியோரும், கௌரவ மாகாண சபை உறுப்பினர்கள் கே.சிவநேசன், ஜி.ரி லிங்கநாதன், எம்.பி நடராஜா ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்ததுடன், கல்வி சார் விருந்தினர்களாக வ.சிதம்பரநாதன் (பீடாதிபதி தேசிய கல்வியியற் கல்லூரி, வவுனியா), கலாநிதி தமிழ்மணி அகளங்கன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Read more

சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலையில் சுற்றாடல் தின பரிசளிப்பும்; பல்ஊடக எறியீ கையளிப்பும்-(படங்கள் இணைப்பு)-

IMG_2197 (1)இன்று உலக சுற்றாடல் தினமாகும். இதனை முன்னிட்டு யாழ். சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலையில் பாடசாலையின் அதிபர் திருமதி சி.கந்தசாமி அவர்களின் தலைமையில் இன்று சுற்றாடல் தின நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.

ஆரம்ப நிகழ்வாக திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் மூலிகைக் கண்காட்சியினை ஆரம்பித்து வைத்தார். இப்பாடசாலையில் பல்வகையான மூலிகை செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து பல்வகை மூலிகைச் செடிகளை நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. தொடர்ந்து சுற்றாடல் நிகழ்வுகளில் பங்குபற்றிய பிள்ளைகளுக்காக சுற்றாடல் அமைச்சினால் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இங்கு திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் உரையாற்றுகையில்,
நாம் எமது சுற்றாடலைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது மிக முக்கியமான விடயமாகும். இன்றைக்கு வடபகுதியைப் பொறுத்தமட்டில் சுற்றாடல் மிகவும் மாசடைகின்றது. குறிப்பாக இரசாயனப் பொருட்களினால் தண்ணீரும், விவசாய நிலங்களும் மாசடைகின்றது. எனவே இதனை நாம் ஒரு முக்கிய விடயமாகக் கவனத்திற்கொள்ள வேண்டும். ஏனென்றால் இதனால் மக்களின் சுகாதாரம் பாரியளவில் பாதிக்கப்படுகின்றது. மேலும்; பொலித்தீன் பாவனையும் நிலத்தினையும் நீரையும் பெருமளவில் மாசடையச் செய்கின்றது. 

Read more

புலிகள் சரணடைவது இந்தியாவுக்கு தெரியும்-

ananthiஇறுதி யுத்தத்தின்போது, படையினரிடம் புலிகள் சரணடையவிருந்த விவகாரம் தொடர்பில் இந்தியா உட்பட சர்வதேசம் அறிந்திருந்தது என புலிகளின் திருமலை மாவட்ட பொறுப்பாளர் சின்னத்துரை சசிதரனின் (எழிலன்) மனைவியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினருமான அனந்தி சசிதரன், நேற்று முல்லைத்தீவு நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார். இறுதி யுத்தத்தில் காணாமற்போன அனந்தி சசிதரனின் கணவர் எழிலன் உள்ளிட்ட 5 பேரின் உறவினர்கள் தாக்கல்செய்த ஆட்கொணர்வு மனு தொடர்பான விசாரணை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. நேற்று இந்த வழக்கில் அனந்தி சசிதரன் சாட்சியமளித்தார். மனுதாரர்கள் சார்பில் சிரேஷ்ட மனித உரிமைகள் சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் நீதிமன்றத்தில் ஆஜரானார். அனந்தி தனது சாட்சியத்தில், புலிகளின் சரணடைவு விவகாரமானது, சர்வதேசத்தின் ஏற்பாட்டில், முக்கியமாக இந்தியாவும் இதில் பங்கெடுத்திருந்தது என்றார். அத்துடன், தனது கணவர் எழிலன், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழியூடாக பாதுகாப்பு தரப்பிடம் சரணடையவிருந்தார். இதனை தான் கணவரின் அருகிலிருந்து செவிமடுத்ததாக அனந்தி குறிப்பிட்டார். இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூலை 7ஆம் திகதிக்கு நீதவான் எம்.எஸ்.ஷம்சுதீன் ஒத்திவைத்துள்ளார்.

வித்யா கொலையைக் கண்டித்து புத்தளத்தில் ஆர்பாட்டம்-

vidyaபுங்குடுதீவில் பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்டமையை கண்டித்து, புத்தளத்தில் இன்று அமைதிப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. புத்தளம் ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்றுகாலை புங்குடுதீவு மாணவிக்காக மெழுகுவர்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின்னர், பாடசாலையில் இருந்து ஆரம்பமான அமைதிப் பேரணி, உடப்பு வைத்தியசாலை சுற்றுவட்டத்தை சென்றடைந்து, மீண்டும் பாடசாலையை அடைந்துள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் மகளிர் பாதுகாப்பு தொடர்பான சுலோகங்களை ஏந்தியிருந்த மாணவர்கள், அமைதியான முறையில் பேரணியில் ஈடுபட்டதுடன், புங்குடுதீவு மாணவிக்கு நீதி வழங்கப்பட வேண்டுமென கோரியிருந்தனர்.

நீதிமன்ற தாக்குதல் கைதான இருவருக்கும் விளக்கமறியல்-

jaffna courtsயாழ், நீதிமன்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் நேற்று கைது செய்யப்பட்டவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாக்குதல் சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளைக் கொண்டு கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் நேற்றையதினம் இந்த இரு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அரியாலை மற்றும் மானிப்பாய் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 19ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ரவிராஜ் கொலை தொடர்பான முச்சக்கரவண்டி மீட்பு-

ravirajதமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியை கண்டுபிடித்துள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். முச்சக்கரவண்டி தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிரோஷா பெனாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு உத்தரவிட்டார். மேலும் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 5 சந்தேகநபர்களை எதிர்வரும் 19ம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தவிட்டுள்ளார். இதேவேளை ரவிராஜ் அவர்களின் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, இராணுவத்துக்கு உரித்துடையது என்று குற்றப்புலனாய்வு பிரிவினர், நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளனர்.

விகாரை கட்டுவதை எதிர்த்து உண்ணாவிரதமிருந்தவர்கள் கைது-

viharai arrestமுல்லைத்தீவு, கொக்கிளாயில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் விகாரையொன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று அடையாள உண்ணாவிரதமிருந்த காணி உரிமையாளர்கள் மூவரையும் முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, விகாரைக்கு முன்பாக முன்னெடுக்கப்படவிருந்து கண்டனப் போராட்டமும் கைவிடப்பட்டு, அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதத்துக்கு அனுமதி பெறாமல் அவற்றை முன்னெடுத்ததாகக் கூறியே மேற்படி மூவரும் கைது செய்யப்பட்டதாக முல்லைத்தீவு பொலிஸார் கூறியுள்ளனர். கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் மற்றும் கருநாட்டுக்கேணி ஆகிய கிராம மக்கள் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டம் நடத்துவடன், காணி உரிமையாளர்கள் யோகராசா ஜூட் நிமலன், திருஞானசம்பந்தர் மணிவண்ணதாஸ், எஸ்.சிவலோகேஸ்வரன் ஆகியோர் அடையாள உண்ணாவிரதத்திலும் ஈடுபடவும் தீர்மானித்திருந்தனர். இதன்படி காணி உரிமையாளர்கள் மூவரும் இன்றுகாலை விகாரை அமைக்கப்படும் இடத்துக்கு முன்பாக அமர்ந்து, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த பொலிஸார் அவர்களைக் கைது செய்தனர். முல்லைத்தீவு கொக்கிளாய் வைத்தியசாலை காணியின் ஒரு பகுதியையும், தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளையும் பாதை ஒன்றையும் இணைத்து பிக்கு ஒருவரால் படையினரின் துணையுடன் இந்த விகாரை அமைக்கப்படுகின்றது. பிந்திய தகவல்படி அவர்கள் விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

சர்வதேச மத்தியஸ்த நிலைம் திறந்து வைப்பு-

tradeகொழும்பு உலக சந்தை நிலையத்தில் சர்வதேச மத்தியஸ்த நிலையத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை திறந்து வைத்தார். இது இலங்கைக்கு வெளிநாட்டுச் செலாவணியை கொண்டு வருவதற்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது. இன்றைய வைபவத்தில் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவும் கலந்து கொண்டார். இலங்கையில் இத்தகைய நிலையமொன்று இல்லாததால் சிங்கப்பூர் இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து சர்வதேச மத்தியஸ்த சேவைகளைப் பெற வேண்டி இருந்தது. வெளிநாடுகளில் இருந்து இச்சேவையைப் பெறுவதால் பெருந்தொகை பணத்தையும் செலவிட நேரிட்டது. 1995 ஆம் ஆண்டின் 11 ஆவது மத்தியஸ்த சட்டத்தின் கீழ் உள்ளூரில் இரு மத்தியஸ்த நிறுவனங்கள் இலங்கையில் இயங்கிய போதும், சர்வதேச மத்தியஸ்த நிலையம் உருவாவது இதுவே முதல் தடவையாகும். இந்த நிலையத்தை அமைக்க 100 மில்லியன் ரூபாவை நிதி அமைச்சு செலவிட்டுள்ளது. உலகில் எந்த நாட்டுடனும் சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களுக்கும், சர்வதேச மத்தியஸ்த செயற்பாடுகளுக்கும் சேவைகளை இந்த நிலையம் மூலம் வழங்கலாமென நீதி அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

யாழ்ப்பாணத்தில் வீட்டு வாசலில் கிடந்த மோட்டார் குண்டு மீட்பு-

motorயாழ். அரியாலை பகுதியில் மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். முள்ளி வீதி – அரியாலை பகுதியில் உள்ள வீட்டு வாயிலின் முன்பாக குறித்த மோட்டார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி வீட்டு உரிமையாளர் உடனடியாக யாழ். பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதன் பிரகாரம், இராணுவத்தினருக்கு அறிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து குண்டினை மீட்டுள்ளனர்.

சாரண சேவை மற்றும் பொதுத்தொடர்புகள் வாரத்தினை சிறப்பிக்க பொதுமக்கள் முன்வரவேண்டும். திரு சு.காண்டீபன்-

trtrrஇன்றையதினம் முதல் 2015ஆம் ஆண்டிற்கான சாரண சேவை மற்றும் பொதுத்தொடர்புகள் வாரம் நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது. ஜூன் 5ல் இருந்து ஜூன் 15 வரை இலங்கை சாரணர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இலங்கை சாரணர் சேவை மற்றும் பொதுத் தொடர்புகள் நடைபெறவுள்ளதாக வவுனியா மாவட்ட ஊடக மற்றும் பொதுத் தொடர்புகள் பிரிவிற்கான உதவி மாவட்ட ஆணையாளர் திரு சு.காண்டீபன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில். சாரணர் சேவை மற்றும் பொதுத் தொடர்புகள் வாரமானது இலங்கை சாரணர் தலைமைக்காரியலயத்தினால் முன்னெடுக்கப்படும் நிகழ்வு ஆகும். இது சாரணர்கள் ஆண்டுதோறும் தமது சாரணர் குழுவுடன் இணைந்து மேற்கொள்ளும் ஓர் உன்னத நிகழ்வாகும். நாடு பூராகவும் 37 சாரண நிர்வாக மாவட்டங்களில் 45000 க்கு மேற்பட்ட சாரணர்கள் இம்முறை தமது சாரணர் சேவை மற்றும் பொதுத் தொடர்புகள் வாரத்தினை முன்னெடுக்கவுள்ளனர். சாரண சிறார்கள் சாரண சேவை மற்றும் பொதுத் தொடர்புகள் வாரத்தினை முன்னிட்டு உங்கள் இல்லங்கள், தொழில் நிலையங்கள் நோக்கி சமூக உணர்வுடன் தமது வேலை வாரத்தினை மேற்கொள்ள வருகை தரவுள்ளார்கள்.

Read more

போதைப் பொருள் பாவனையற்ற இலங்கையை உருவாக்குவோம்.! வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி-

unnamed (1)வவுனியா பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் போதைப் பொருள் பாவனையற்ற இலங்கையை உருவாக்குவோம் என்னும் தொனிப்பொருளில் நேற்று (04.05.2015) ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடைபெற்றது. வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மாபெரும் பேரணி அரச பேரூந்துநிலைய சுற்றுவட்டம் ஊடான மணிக்கூட்டு கோபுரத்தை சுற்றி பசார் நிலைய வீதி வழியாக வவுனியா பிரதேச செயலகத்தை அடைந்தது. இப் பேரணியில் போதைப் பொட்கள் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடக்கிய பதாதைகள் மற்றும் சிகரட்உரு பதாதையை பாடையில் ஏற்றி சாவு ஊர்வலம் போல் வெடிகள் கொழுத்திய நிலையில் பேரணி வவனியா பிரதேச செயலகத்தை சென்றடைந்தது. அதேவேளை மது விற்பனை நிலையங்கள், கள்ளத் தவறணைகளுக்கான அனுமதி பத்திரங்களை எதிர்காலத்தில் தடை செய்யவேண்டும், Read more

யாழ். நீதிமன்ற தாக்குதல், அறுவருக்கு பிணை-

courtsபுங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பேரணியின்போது நீதிமன்றத்தின்மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் மேலும் 40 பேர் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். இதில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேருக்கு 2லட்சம் சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 34 பேரை எதிர்வரும் 8ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். மேலதிக நீதவான் கே.கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார். இதில் ஒருவர் இன்று நீதிமன்றில் ஆஜர்செய்யப்படவில்லை. அவர் காயம் காரணமாக யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் 132 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அதில் 8 பேருக்கு மாத்திரம் பிணை வழங்கப்பட்டுள்ளது. ஏனையவர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நுகர்வோர் அதிகாரசபையின் பணிப்பாளர் இராஜினாமா-

rumi marzookநுகர்வோர் அதிகாரசபையின் பணிப்பாளர் ரூமி மர்சூக், அவரது பதவியை கடந்த வாரம் இராஜினாமா செய்ததையடுத்து, இன்று அமுலுக்கு வரும் வகையில், அவர் நுகர்வோர் அதிகாரசபையின் பணிப்பாளர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வர்த்தக அமைச்சின் செயலாளரிடம் அவரது இராஜினாமா கடிதத்தை கடந்த வாரம் கையளித்திருந்தார். கடந்த 8 வருட காலமாக நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் பதவியிலிருந்த இவர், அவருடைய சில தனிப்பட்ட தேவைகளுக்காகவே பதவியை இராஜினாமா செய்ததாக தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் பிறந்த குழந்தைகளுக்கு பிரஜாவுரிமை-

citizenshipஇந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இலங்கைப் பெற்றோருக்கு பிறந்த குழந்தைகளுக்கு இலங்கை பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடமாடும் சேவையொன்று, நாளையதினம் தென்மராட்சி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த செயலமர்வில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைப் பிரசவித்த இலங்கைப் பெற்றோர், தற்போது மீண்டும் இங்கு வந்து வாழ்ந்து வருகையில் அவர்களின் குழந்தைகளுக்கு இந்த நாட்டின் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்காக இந்த நடமாடும் சேவை நடத்தப்படவுள்ளது. தென்மராட்சிப் பிரதேசத்திலுள்ள இத்தகைய பெற்றோர்கள் இந்த நடமாடும் சேவை மூலம் பயனைப் பெறமுடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் வாள்வெட்டு, நால்வர் படுகாயம்-

knifeகிளிநொச்சி மலையாளபுரத்தில் நேற்று இரவு இடம்பெற்ற குழு மோதலில் நால்வர் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மலையாளபுரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் சுகந்தன் (வயது 19), எஸ்.சாந்தன் (வயது 19), மணிவண்ணன் பிரசாந்த் (வயது 19) ஆகியோரே வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளனர். இவர்கள் மூவரும் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் ரி.வினோதன் (வயது 21) என்பவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஐந்து பிரதி அமைச்சர்கள் பதவியேற்க ஏற்பாடு-

parliamentமேலும் ஐந்து பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவி ஏற்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. இதன்படி விஜய தஹனாயக்க, விக்டர் அந்தனி, எரிக் வீரவர்தன மற்றும் டுலிப் விஜயசேகர உள்ளிட்ட ஐந்து பேர் இவ்வாறு பிரதி அமைச்சர்களாக பதவி ஏற்கவுள்ளனர். பெரும்பாலும் அவர்கள் இன்று மாலை பதவி ஏற்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஐந்து பேர், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகவும், ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களாக கடந்த 29ம் திகதி பதவி ஏற்றிருந்தனர்.

இலங்கை அகதியை நாடு கடத்த பிரித்தானியா நடவடிக்கை-

dddfdஇலங்கையைச் சேர்ந்த தமிழ் அகதி ஒருவர் பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்படவிருப்பதாக பிரித்தானியாவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜனகன் சிவநாதன் என்ற 22வயதான அகதி சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு, பிரித்தானியாவின் மோர்டன் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரின் அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் இந்த கைது இடம்பெற்றிருந்தது. எனினும் அவர் நாடுகடத்தப்படுவதை தடுப்பதற்காக, அவர் தரப்பு சட்டத்தரணியால் கடந்த முதலாம் திகதி நீதிமன்றத்தில் ஆவணங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதில் அவர் இலங்கையில் இருக்கும்போது துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக தெரிவிக்கு மருத்துவ சான்றிதழ்களும் வழங்கப்பட்டிருந்தது. எனினும் இந்த வழக்கு எதிர்வரும் ஜுலை 15ம் திகதி முன்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என கூறப்படுகின்ற நிலையில், அதற்குள் அவர் நாடுகடத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுபல சேனா தேரர்கள் 6பேருக்கு எதிராக வழக்கு-

courtsபதுளை மாவட்டம் மஹியங்கனை பிரதேச சபையின் உறுப்பினரும் தேசிய பல சேனாவின் உறுப்பினருமான வட்டரக்க விஜித்த தேரரை மறைத்து வைத்திருப்பதாக கூறி, கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்குள் 2014ஆம் ஆண்டு அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் பொதுபல சேனா அமைப்பின் தேரர்கள் அறுவருக்கு எதிரான குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப்பத்திரத்தை ஜூலை 19ஆம் திகதி தாக்கல் செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் பியந்த லியனே, பொலிஸாருக்கு இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

முல்லைத்தீவு விபத்தில் மூவர் காயம்-

accidentமுல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் ஏ-35 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். தனியார் பஸ்ஸ_ம், முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த விபத்தில் மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். காயமடைந்த மூவரும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியாசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கானா எரிபொருள் நிலையத்தில் வெடிப்பு, 70 பேர் பலி-

ghanaகானா நாட்டிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்புச்சம்பவத்தினால் 70 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மழை காரணமாக அந்த நிலையத்தில் தஞ்சம் புகுந்திருந்த மக்களே இவ்வாறு பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடத்தப்பட்ட சிறுமி 8மணித்தியாலங்ளில் மீட்பு-

kidnapping_2களுத்துறை, மத்துகமை, பெலவத்தை மீகாதென்ன பிரதேசத்தில் கடத்தப்பட்ட 9வயது சிறுமியொருவர் 8மணித்தியால தேடலின்பின் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமி காட்டுப் பகுதியில் இருந்தே மீட்கப்பட்டுள்ளார். அருகிலுள்ள கடையொன்றுக்குச் சென்ற போதே சிறுமி கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவத்தின் போது அதனுடன் தொடர்புடைய நபர் அப்பிரதேசத்தில் இருந்து தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸார், பிரதேசவாசிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்தே தேடுதல் நடத்தினர்.