வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் உலர் உணவு பொருட்கள் வழங்கபட்டன-

j2வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் புதுக்காட்டு குடியிருப்பு மாவடியம்மன் வட்டக்கட்சி கிளிநொச்சியை சேர்ந்த 16 குடும்பங்களுக்கு 32096 ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொருட்கள் வழங்கபட்டுள்ளன. மேற்படி மக்களால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் விடுக்கப்பட்ட விண்ணப்பத்திற்கு அமைவாக எமது புலம்பெயர் உறவான அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்த திரு. ஜெகன் அவர்களால் தனது தாயாரின் 31ம் நாள் நினைவு தினத்தையோட்டி இக் கிராமத்தில் உள்ள 16 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தனூடாக வழங்கிவைத்துள்ளார். இம்மக்கள் தமது குடியிருப்பு பகுதியில் கிணறு மற்றும் மலசலகூட வசதிகள் கூட இல்லை. தாம் தமது காலை கடன்களை காட்டுப்பகுதியிலேயே செய்து வருகின்றோம். இங்கு உள்ளவர்கள் அன்றாடம் கூலி வேலை செய்யும் கூலிதொழிலாளர்கள். நாங்கள் தற்காலிக குடிசைகளிலேயே எமது வாழ்கையை ஓட்டிவருகின்றோம். எமக்கு சீரான தொழிலும் கிடைப்பதில்லை இதனால் நாங்கள் பல நாட்கள் உணவில்லாமல் பட்டினியாக வாழ்ந்து வருகின்றோம். எமக்கு இதுவரை எவ் நிவாரண பொருட்களும் கிடைக்கவில்லை. எனவே எங்களது விண்ணப்பத்தை கவனத்தில் எடுத்து வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் உலர் உணவு பொருட்களை வழங்கி வைக்குமாறு கேட்டு விண்ணப்பித்திருந்தனர். எமது கோரிக்கையை ஏற்று இம் மக்களுக்கு உதவிபுரிய முன்வந்த அவுஸ்திரேலியா நாட்டை சேர்நத ஜெகன் அவர்களின் தாயாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)

j1 j5 j7 j9 j10
j13
j16 j18 j19 j27 j30 j31 j32 j33