சிறுபான்மையை சிதைக்கும் நடவடிக்கைகள் பல அரங்கேற்றப்படுகின்ற நிலையில் சிறுபான்மையினரான நாங்கள்அதற்குள் சிக்குண்டு சிதைந்து உடையப் போகிறோமா 

அல்லது உரிமை என்ற கோட்டிற்குள் ஒருமித்து நிற்கப் போகின்றோமா என்பதே இன்றைக்கு கேள்வியாக இருக்கின்றதாக சுட்டிக்காட்டியிருக்கும் யாழ். கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி அதிபர் ல்லீசன் சிறுபான்மை சிதைவுற்றால் அது பெரும்பான்மையினருக்கு வேட்டையாக அமையுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே நாம் சிதைவுறாது எமது உரிமைக்காக ஒருமித்து பயணிக்க வேண்டும். ஏனெனில் ஒற்றுமை தான் எமது பலம். அந்த பலம் தான் எமது மண்ணையும் மக்களையும் வாழவைக்கும் என்றார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வி. தர்மலிங்கத்தின் நினைவஞ்சலி யாழ் தொனியில் அமைந்துள்ள அவரது நினைவு தூபியில் நேற்றும் திங்கட்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது…

தர்மலிங்கம் ஐயாவினுடைய பெயரில் தர்மம் இருப்பது போலவே அவரது தனது செயலில் தர்மங்களை வாரி வழங்கியிருக்கின்றறார். அவரைப் போலவே அவரது புதல்வரான சித்தார்த்தனும் தொடர்ந்து தன்னாலான அனைத்து கொடைகளையும் மக்களுக்காக வழங்கி வருகின்றார்.

இப்படியாக மக்களுடன் மக்களாக இணைந்து மக்களுக்காக சேவை செய்யப் கூடிய அரசுயல் பிரதிநிதிகளையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆகவே பொது வாழ்விற்கு வந்தவர்கள் தமது சுய நலன்களுக்கு அப்பால் பொது நலனில் அதீத அக்கறை கொண்டு செயற்பட வேண்டும்.

அதே நேரத்தில் தமிழ் மக்கள் தஆம் எதிர் நோக்குகின்ற தமது பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமென்று கோரி வருகின்றனர். அவற்றுள் தீர்த்து வைப்பதற்கு ஒற்றுமையாக பலமாக இருக்க வேண்டியது மிக அவசியமானது.

இந்த நாட்டில் தற்போது தேர்தல்கள் வரவிருக்கின்ற நிலையில் சிறுபான்மை மக்களின் வாக்கு என்பது மிக முக்கியமானதாக காணப்படுகிறது.  ஆகையினால் சிறுபான்மை மக்களின் வாக்கு தமக்கு பெற்றுக் கொள்வதற்காக பலரும் முனைகின்றனர்.

அதே வேளையில் சிறுபான்மை மக்களை சிதைத்தும் தமக்கான வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இடத்தில் தான் எங்களுடத்தே ஒற்றுமையும் நிதானமும் அவசியம் தேவைப்படுகிறது.

அது ஏன் எனில் சிறுபான்மையினரை சிதைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் சிறுபா்மையையானோர் உடையப் போகிறோமா அல்லலது உரிமை என்று ஒரு கோட்டை வரைந்து அதற்குள் நிற்கப் போகிறோமா என்பதே கேள்வியாக உள்ளது. இவ்வாறான நிலையில் நாம் ஒன்றாக இல்லை என்றால் தந்தை செல்வா சொன்னது போல கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

மேலும் சிறிபான்மை சிதைவுற்றால் அது பெரும்பான்மைக்கு வேட்டையாக அமையும். ஆகையினால் அதற்கு நாம் வாய்ப்பு வழங்கப் போகிறோமா அல்லது ஒன்று பட்டு நிற்கப் போகின்றோமா என்பதே முக்கியம்.

பெரும்பான்மையைப் பொறுத்தவரையில் சிறுபான்மை மக்களை இலகுவாக ஏமாற்றி விடலாம் என்ற நினைப்பு இருக்கிறது. ஏனெனில் அது தான் காலாதிகாலமாக நடக்கிறது. ஆனால் இன்றைக்கு மக்கள் இதனையெல்லாம் விளங்கி கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

ஆகையினால் ஏமாற்று வித்தைக்கு இனி இடம் கொடுக்க கூடாது. சிறுபான்மையை சிதைக்கும் நடவடிக்கைகளுக்கும் இடம் கொடுக்க கூடாது. இதனை மக்களும் அரசுயல் பிரதிநிதிகளும் உணர்ந்து செயற்பட வேண்டும். ஏனெனில் ஒற்றுமை தான் எங்கள் பலம். அந்த ஒற்றுமையின் பலம் தான் எங்கள் மண்ணையும் எங்களையும் வாழ வைக்கும்.

இதேவேளை அரசியல் தலைவர்கள் உட்பட எவரிடமும் தனிமனித சுய அதிகார பலம் வேண்டாம் எனபது தான் என்னைப் போன்ற சாதாரண அடி மக்களின் எதிர்பார்ப்பதாக உள்ளது என ல்லீசன் மேலும் தெரிவித்தார்