புலம் பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் ஜேர்மன் கிளையினர், வட்டு வடக்கு சித்தன்கேணியைச் சேர்ந்த முன்னாள் கழக அங்கத்தவர் நடராஜசர்மா கலியுகவரதன் அவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடமைப்புத்திட்ட வீட்டினை பூரணப்படுத்துவதற்காக அவருக்கு 50,000/- ரூபாவினை நிதியுதவியாக வழங்கியுள்ளனர். Read more
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவருவது தொடர்பில் வெளியான வர்த்மானி அறிவித்தலை இரத்துச்செய்யுமாறு கோரிக்கை விடுத்து அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று உயர்நீதிமன்றில் இன்று (17) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தான் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதே தனது பிரதான நோக்கமாக இருக்கும் என, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளதாக அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தாமரை கோபுரம் நிர்மாணத்தின் போது, சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 200 கோடி ரூபாய் பணம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் ஆணைக்குழுவினை நியமித்து விசாரணைகளை முன்னெடுக்கமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
GPS தொழில்நுட்பத்தினூடாக பயணிகள் பஸ்களை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேல்மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் துஷித குலரத்ன தெரிவித்துள்ளார்.