கொரோனா பாதிப்பு காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் பெரியகடை, கன்னியா, புளியங்குளம், லிங்கநகர், ஜமாலியா, சேனையூர், ஆகிய பகுதிகளில் வசிக்கும் தேவையுடைய சில கழக உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு புளொட் ஜேர்மன் கிளை தோழர்களின் நிதியிலிருந்து தலா 1400 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொருட்களும், தலா 500 ரூபாய் பணமும் வழங்கி வைக்கப்பட்டது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் தோழர் எல்லாளன், கட்சியின் மத்திய குழு உறுப்பினர் தோழர் அசோக் மற்றும் தோழர் வசந்தன் ஆகியோர் 25 பேருக்கு மேற்படி உதவியினை வழங்கி வைத்தார்கள்.