தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்று (16.07.2021) வெள்ளிக்கிழமை மாலை 4.00அளவில் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள அமரர் உமாமகேஸ்வரன் இல்லத்தில் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்)அவர்களின் தலைமையில் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக நடைபெற்றது. Read more
புளொட்டின் 32வது வீரமக்கள் தினம் அம்பாறை மாவட்டம் காரைதீவில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் தோழர் சங்கரி அவர்களின் தலைமையில் இன்றுமாலை 5.30 மணியளவில் சுகாதார சட்டதிட்டங்களுக்கு அமைவாக நடைபெற்றது.
கொரோனா பாதிப்பு காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வறுமை நிலையிலுள்ள மன்னார் மாவட்டத்தின் பாலம்பிட்டி, முள்ளிக்குளம், தட்சணாமருதமடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கு புளொட் பிரித்தானிய கிளை தோழர்களின் நிதியுதவியில் உலருணவுப் பொருட்கள் கழகத்தின் வீரமக்கள் தினமான இன்றைய தினத்தில் (16-07-2021) வழங்கி வைக்கப்பட்டன.
கொரோனா பாதிப்பு காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வறுமை நிலையிலுள்ள மற்றும் விசேட தேவையுடையவர்களைக் கொண்ட கிரான்குளத்தைச் சேர்ந்த 42 குடும்பங்களுக்கு புளொட் பிரித்தானிய கிளை தோழர்களின் நிதியுதவியில் தலா 2315 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொருட்கள் கழகத்தின் வீரமக்கள் தினமான இன்றைய தினத்தில் (16-07-2021) வழங்கி வைக்கப்பட்டது.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மட்டக்களப்பு மாவட்ட கிளையினரால் 16 -07-2021 இன்று காலை 9.30 மணியளவில் கிரான்குளம் சீ மூன் ஹோட்டல் மண்டபத்தில் அமைதியான முறையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மாவட்ட அமைப்பாளர் ம.நிஸ்கானந்தராஜா தலைமையில் வீரமக்கள் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
மன்னார் முருங்கனில் இன்று முற்பகல் வீரமக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. கட்சியின் மத்திய குழு உறுப்பினர் தோழர் சிவசம்பு, கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பிரதேச இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர். 
16.07.1989இல் மரணித்த மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதி செயலதிபர் அமரர் தோழர் முகுந்தன் (கதிர்காமர் உமாமகேஸ்வரன்) அவர்களின் 32ஆம் நினைவு நாளும் 32ஆவது வீரமக்கள் தின நிறைவு நாளும் இன்று..
16.07.1999இல் வவுனியாவில் மரணித்த தோழர் சபேசன் (டுமால்) (சபாரட்ணம் பாஸ்கரன்) அவர்களின் 22ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…