32 வது வீரமக்கள் தினம் பிற்பகல் 3மணியளவில் சுவிஸ் கிளையின் நிர்வாகப்பொறுப்பாளர் வரதனின் தலைமையில் ஆரம்பமானது.
முதலில் வீரமக்களுக்கு மெளன அஞ்சலியும் அதனை தொடர்ந்து நினைவுச்சுடரினை சுவிஸ் கிளை பொறுப்பாளர் ஆனந்தனுடன் ஜேர்மன் கிளை தோழர்கள் அப்பன், யூட், அவர்களும் மற்றும் தோழர் குமார் நடன ஆசிரியை குகறாஜசர்மா ஜெயவாணியும் ஏற்றி வைக்க அதனை தொடர்ந்து தோழர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் அனைவரும் இணைந்து மலரஞ்சலி செலுத்தினர். Read more
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 26 ஆண்களும் 17 பெண்களுமே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 3,870 பேர் உயிரிழந்துள்ளனர்
மாலைத்தீவின் ஜனாதிபதி இப்ராஹீம் மொஹமட் சொல்ஹி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார்.
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் மீதான வாக்கெடுப்பு இன்று (20) மாலை இடம்பெற்றது.
இலங்கையில் மேலும் 1,062 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதனடிப்படையில், மொத்த கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 287,481 பேராக அதிகரித்துள்ளது.
ஜேர்மனி ludwigsburg இல் வதியும், இன்று (19.07.21) தனது அறுபதாவது பிறந்த நாளைக் கொண்டாடும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் ஜேர்மன் கிளை அமைப்பாளர் தோழர் நல்லதம்பி பவானந் அவர்களும், நேற்று (18.07.21) தனது பிறந்த நாளைக் கொண்டாடிய அவரது மகளும் பல்கலைக்கழக மாணவியுமான பவானந்த் பௌர்ணியா ஆகியோரின் நிதியுதவியில் பொருளாதார ரீதியாக நலிவுற்ற நிலையில் வாழும், மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் ஒருவருக்கு மீன்பிடிக்கான வலைத்தொகுதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 30 ஆண்களும் 16 பெண்களுமே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 3,827 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் மேலும் 980 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். இலங்கையின் மொத்த கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 285,912 பேராக அதிகரித்துள்ளது.
தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் தமக்கான மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்கக் கோரியும், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார சேவைகள் பணியாளர்களும் பரிசோதகர்களும், இன்று (19) பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா நகரசபையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்களுக்கு, கொரோனா தடுப்பூசி வழங்குவதில் அரசாங்கமும் சுகாதாரத்துறையும் பாராமுகமாக செயங்படுவதாக, வவுனியா நகரசபை உறுப்பினர் க.சந்திரகுலசிங்கம் தெரிவித்தார்.