கனடாவில் மரணித்த யாழ் உரும்பிராயைச் சேர்ந்த தோழர் ராசா (முருகேசு சத்தியநாதன்) அவர்களின் 45ம் நாள் நினைவை முன்னிட்டு 50,000 ரூபாய் நிதியில் உரும்பிராய் பகுதியில் கொரோனா பாதிப்பு காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி குடும்பங்களுக்கும் , மேலும் 50,000 ரூபாய் நிதியில் கொரோனாவால் யாழ் தீவகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஒரு தொகுதி குடும்பங்களுக்கும் கழகத்தின் கனடா கிளையின் நிதியிலிருந்து நேற்று உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. Read more
இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களால் பெறப்பட்ட அனைத்து விதமான விஸாக்களின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 98 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 5,017 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் டெல்டா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் மக்கள் பின்பற்ற வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டல்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் – அதிபர் சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்த ஆர்ப்பாட்ட பேரணி கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா பல்கலைகழகத்தின் ஆரம்ப நிகழ்வுகள் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளன. யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகம் வவுனியா பல்கலைகழகமாக அண்மையில் தரமுயர்த்தப்பட்டது.