
கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக கொஹுவளை தனியார் வங்கி மூடப்பட்டுள்ளது. அத்துடன் நுகேகொடை, கிருலப்பனை, கொஹுவளை ஆகிய பகுதிகளிலுள்ள பல்பொருள் அங்காடியில் முறையே 40,26,18 ஊழியர்கள் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more
நாட்டில் கடந்த 25ஆம் திகதி முதலான 10 நாட்களில் 21,344 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி குறித்த காலப்பகுதியில் 591 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறினார்.
கொத்தலாவல பல்கலைக்கழக சட்ட மூலத்துக்கு எதிர்ப்பும் தெரிவித்தும் இலவச கல்வியில் இராணுவத்தின் தலையீட்டைக் கண்டித்தும் மட்டக்களப்பில், இன்று (05) பேரணி நடைபெற்றது.
அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க வலியுறுத்தியும் கொத்தலாவ சட்டமூலத்தை நீக்க கோரியும், எதிர்வரும் திங்கட்கிழமை (09), யாழில் மாபெரும் வாகனப் பேரணியொன்று நடத்தப்படவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் வீட்டு வேலைக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமி ஹிசாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் ‘ என் சாவுக்கு காரணம் ‘ என்று எழுதப்பட்டுள்ளமை விசாரணைக்குழுவினரால் இனங்காணப்பட்டுள்ளது.
அனைத்து அரச ஊழியர்களையும் நேற்று (02) முதல் சேவைக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, அவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கும் நோக்கில், அதிகளவான ரயில்கள் மற்றும் பஸ்களைச் சேவையில் ஈடுபடுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாட்டில் மேலும் 1,406பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 315,175ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் மேலும் 1,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 313,029ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரச நிறுவனங்களின் கடமைகள் இன்று முதல் சாதாரணமாக ஆரம்பிக்கப்படுவதால் இலங்கை ரயில்வே திணைக்களம் 104 ரயில் சேவைகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களின் பிரதிகளை நிகழ்நிலை (Online) மூலமாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் இன்று (02) தொடக்கம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.