யாழ்ப்பாணத்தில் வறிய நிலையிலுள்ள தோழர் கண்ணன் அவர்களின் வீட்டுத்திட்ட வீட்டினை பூர்த்தி செய்வதற்கு ஜெர்மனியில் இருந்து சமூக சேவையாளர்கள் அருட்சோதி சகிர்தன், அருட்சோதி சுகிர்தன் ஆகியோர் இணைந்து கழகத்தின் ஜெர்மன் கிளை ஊடாக அனுப்பி வைத்த ரூபாய் 100,000/= நிதியுதவியை கழகத்தின் மத்திய குழு உறுப்பினர் அ.கௌதமன் வழங்கி வைத்தார். Read more
பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலைக்கு ஒரு தொகுதி தளபாடங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டமைக்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை சாட்சி விசாரணையின்றி விடுதலை செய்வதா, இல்லையா என்பது தொடர்பான தீர்மானத்தை அடுத்த மாதம் 18 ஆம் திகதி அறிவிக்க மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று (20) தீர்மானித்தது.
அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லையை 65 ஆக அறிவிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.