துணை வைத்திய நிபுணர்களுக்கான கூட்டுப் பேரவையானது, மேல் மாகாண எல்லைக்குட்பட்ட அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று (26) காலை 7.00 மணி முதல் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை  ஆரம்பித்தது.

துணை மருத்துவ சேவை மற்றும் தாதிய சேவையிலுள்ள சம்பள முரண்பாடுகள் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க அதிகாரிகள் தலையிடாததை கண்டித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

துணை மருத்துவ சேவை, தாதிய சேவையில் உள்ள சம்பள முரண்பாடுகள் மற்றும் நிர்வாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண கோரி தாங்கள் ஏற்கெனவே மாகாண மட்டத்தில் மொத்தம் 8 தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.

இந்த பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகளை வழங்க சுகாதார அமைச்சும் அரசாங்கமும் தலையிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.