எதிர்வரும் வாரங்களில் விசேட தடுப்பூசி வேலைத் திட்டம் அமுல்படுத்தப்படும் என்று தெரிவித்த இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, அதற்கமைய பூஸ்டர் டோஸ் வழங்குவதற்கான நடமாடும் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
தியத்தலாவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது மேலும் அவர் தெரிவித்தாவது,
கடந்த இரண்டு நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், எனவே இதுவரை பூஸ்டர் டோஸ் பெறாதவர்கள் விரைவில் அதனை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தடுப்பூசி போடுவதற்காக விசேட தடுப்பூசி நிலையங்களை ஆரம்பிக்க இலங்கை இராணுவத்தினர் உட்பட நாட்டின் முப்படை வீரர்கள் பயன்படுத்தப்பட்டதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.