பத்தரமுல்லை – பொல்துவ சந்திக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது
யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு , புதைக்கப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மணியந்தோட்டம் உதயபுரம் பகுதியை சேர்ந்த பிரதீபன் ஜெசிந்தா (வயது 42) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தற்போதைய முட்டுக்கட்டைக்கு தீர்வு காண அரசாங்கம் சரியான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைப்போம் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தில் ஒரே நாளில், 2022.04.03 அன்று இராஜினாமா செய்த அமைச்சர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.
யாழில் பெண்ணொருவர் படுகொலை செய்து புதைக்கப்பட்டுள்ளார் எனும் சந்தேகத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் , பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த முதலாம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார் பாராளுமன்ற கட்டடத்திலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்தே இந்த பேச்சு வார்த்தை இடம்பெற்றுள்ளது.