கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சிவப்பு எச்சரிக்கை நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு இன்று விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 21 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னலுக்கான முன்னறிவிப்பை திணைக்களம் விடுத்துள்ளது. Read more
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் பதவி விலகுமாறு கோரி முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். காலி முகத்திடலில் இடம்பற்று வரும் போராட்டம் காரணமாக கோட்டை வரை கடும் வாகனநெரிசல் நிலவுகிறது. போராட்டத்தில் 10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
தனது பதவியை இராஜினாமா செய்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், தான் இலங்கையை விட்டு வெளியேறப் போவதில்லை என்றும், அதற்குப் பதிலாக பல்வேறு தரப்பினரால் தம்மீது சுமத்தப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.