தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரவைக்கு உத்தரவிடுமாறு கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்த இரண்டு மனுக்கள் குறித்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 42 பேரை ஏப்ரல் 8ஆம் திகதி மன்றில் ஆஜராகுவதற்காக நோட்டீஸ் அனுப்புமாறு, உயர்நீதிமன்றம், இன்று (04) உத்தரவிட்டது. Read more
ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக சுந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க, இன்று (04) தெரிவித்தார்.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமா செய்துள்ளார்.
புதிய அமைச்சரவை அமைச்சர்கள் சிலர் பதவியேற்றுள்ளதாக தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர்கள் பதவியேற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கல்விசார் நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை வீடுகளுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்தில் தொடர்ந்திருப்பதா? இல்லை விலகுவதா என்பதுத் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவில் இல்லத்தில் கூடி கலந்துரையாடியுள்ளனர்.
அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய காபந்து அரசாங்கத்தை நியமிக்கும் யோசனை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முன்வைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அத்துடன் புதிய பிரதமருக்கான பிரேரணையையும் முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று (03) மாலை முக்கியமான சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில், நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் இருவரும் ஆராய்ந்துள்ளனர்.
சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டமை மனித உரிமை மீறலாகும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் எவ்வித மதிப்பீடும் செய்யாமல் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியமையும் மனித உரிமை மீறல் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ள சமூக வலைத்தளங்கள் இன்று மாலை மீண்டும் வழமைக்கு திரும்பும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைகுழு தெரிவித்துள்ளது. இன்று மாலை 3.30 முதல் மணி முதல் இவ்வாறு வழமைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.