இம்மாதம் 20ஆம் திகதியை தேசிய எதிர்ப்பு தினமாக நாளாக அறிவித்து வேலைத்தலங்களில் தொடர் வேலைநிறுத்தத்துக்கு உழைக்கும் மக்களை அணிதிரட்டுவதற்கு தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. Read more
தற்போது நிலவுகின்ற விடயங்கள் குறித்த பல கலந்துரையாடல்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று, (16) முற்பகல் இடம்பெற்றன.
எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது சட்ட ரீதியான உரிமைகளை பயன்படுத்துவதை தடுக்கும் முயற்சிகளை கைவிடுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் துஷார ஜயசிங்க தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார். தனது கொள்கையின் அடிப்படையில் ஏப்ரல் 14 ஆம் திகதி முதல் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று நண்பகல் ஒரு மணி முதல் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையை வரையறுக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி, மோட்டார் சைக்கிளுக்கு 1,000 ரூபாவிற்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 1,500 ரூபாவிற்கும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.
கொழும்பு காலி முகத்திடலில் 7வது நாளாக ஆர்ப்பாட்டம் இன்றும் (15) தொடர்கிறது. நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் கலந்து கொண்ட இந்தப் ஆர்ப்பாட்டம் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமானது..அதன்படி, இரவு பகலாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கூடாரங்களை அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலை ஒன்று உருவாகியுள்ள போதிலும், அதனை சாதகமாக மாற்றவும் நாட்டில் அரசியல் அமைப்பு உருவாக்கம், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க , அரசியல் தீர்வுகளை பெற்றுக்கொள்ள இதுவே மிகச் சரியான சந்தர்ப்பமாகும்.
வெளிநாட்டுக் கடனைச் செலுத்தும் திறன் இலங்கைக்கு இல்லை எனவும், அது இடைநிறுத்தப்படும் எனவும் நிதியமைச்சு நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
இதில் ஆறு யுவதிகளும், ஒரு இளைஞனுமாக 7 பேர் கொண்ட குழுவினர் இறம்பொடை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள ஆற்றுப் பகுதியில் நீராடச்சென்றுள்ளனர். ´செல்பி´களை எடுத்தும் மகிழ்ந்துள்ளனர். எனினும், அவர்களின் சந்தோசம் நீடிக்கவில்லை.
மக்களின் அபிலாஷைகளுக்கும் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றமை உறுதியாகியுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.