இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நாட்டின் பல பாகங்களில் இன்று(10) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சம்பள முரண்பாடு தொடர்பான விடயங்களை முன்வைத்து குறித்த ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், இலங்கை போக்குவரத்து பஸ் சேவையை பயன்படுத்து பயணிகள் பாரிய சிரமத்துக்கு முகங்கொடுத்தனர்.

கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி செல்லும் இலங்கை போக்குவரத்து பஸ்கள் சேவையில் ஈடுடாதமையால் இன்று முற்பகல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.