நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் அனைத்து மாகாணங்களிலும் உள்ள நகர பாடசாலைகள், ஜூன் 27 முதல் ஜூலை 1 வரை மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

போக்குவரத்து பிரச்சினைகளால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிரமம் ஏற்படாத பட்சத்தில், நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் இல்லாத பாடசாலைகள் வழமை போன்று திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுபோன்ற பிரச்னை நீடித்தால், செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் மட்டுமே  பாடசாலைகள் செயல்பட வேண்டும் என அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.