கொழும்பு வலயம், மேல் மாகாணத்தின் புறநகர்ப் பகுதிகள் மற்றும் அனைத்து மாகாணங்களின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள பாடசாலைகள் ஜூலை 10ஆம் திகதி வரை மூடப்படும் என அமைச்சர் பந்துல குணவர்த்தன அறிவித்துள்ளார். ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைககள், அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளின் தீர்மானத்தின் படி செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மட்டெரிக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (27) இடம்பெற்றுள்ளது.
நாளை (28) முதல் அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 10ஆம் திகதி வரை சுகாதாரம், பாதுகாப்பு, மின்சாரம் மற்றும் ஏற்றுமதி துறைகளுக்கு மட்டுமே எரிபொருள் விநியோகிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.