Header image alt text

10.06.1991இல் வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர் மதி (முருகேசு ரத்தினவேல் – முகத்தான்குளம்) அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் புதியதாக இரண்டு அமைச்சுக்கள் ஸ்தாபிக்கப்பட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. Read more

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினராக தொழிலதிபர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சற்றுமுன்னர் வௌியிடப்பட்டுள்ளது. Read more

எதிர்வரும் 13ஆம் திகதியன்று அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளுக்கும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என  கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் குழு மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வி அமைச்சின் வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட போது பொலிஸார் அவர்களை கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறு கண்ணீர்ப்புகைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நாட்டின் பல பாகங்களில் இன்று(10) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சம்பள முரண்பாடு தொடர்பான விடயங்களை முன்வைத்து குறித்த ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more

மின்சாரம் நாட்டில் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. மின்சாரம் அடிக்கடி தடைபடுவதால் மக்கள்
அல்லல்படுகின்றனர். எங்களைப் பொறுத்தமட்டில் டொலர் தட்டுப்பாடும் பொருளாதாரப் பின்னடைவும் இருக்கின்ற போது டொலரை கொடுத்து வாங்கக்கூடிய எரிபொருள் மூலம் நடத்தப்படுகின்ற மின் உற்பத்தி நிலையங்களை நம்பியிருக்காமல் இயற்கை வளத்தால் கிடைக்கக் கூடிய மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். Read more

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் உறுதி செய்துள்ளது

அடுத்த சில மாதங்களில் உணவுப் பாதுகாப்பில் இலங்கை மேலும் சரிவை  சந்திக்கும்  என்றும் உணவு கிடைப்பது குறையும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் உலக உணவுத் திட்டம் ஆகியவற்றின் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. Read more