Header image alt text

இன்று 74 வது அகவை பூர்த்தியாகும் எமது கட்சி எனும் குடும்பத்தின் மூத்தவர், தலைவர் த. சித்தார்த்தன் அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் நலம் பெற்று வாழ வேண்டும், தமிழினத்தின் விடுதலைக்காக பணிபுரிய வேண்டும் என வாழ்த்தி நிற்கிறோம். Read more

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மட்டக்களப்பு மாவட்ட நிர்வாகக் கூட்டம் மாவட்ட அமைப்பாளர் தோழர் சூட்டி அவர்களின் தலைமையில் கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் பீற்றர், உபதலைவர் தோழர் கேசவன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் கடந்த (27/08/2022) நடைபெற்றது. Read more

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. Read more

இலங்கை மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் மறுசீரமைப்பு வேலைத் திட்டத்துக்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் நிதியுதவிகளைப் பெறுவதற்கு உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். Read more

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவை பொறுப்பேற்கவுள்ளதாக வெளியாகிய தகவல்கள் பொய்யானவை என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது போன்ற கலந்துரையாடல்கள் கூட நடைபெறவில்லை என கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் உள்ள 1 மில்லியன் விவசாயிகளுக்கு உதவுவதற்காக, அமெரிக்க மக்களிடமிருந்து இலங்கை விவசாயிகளுக்கு 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் (USAID) தலைவர் சமந்தா பவர் தெரிவித்தார். Read more

இலங்கை மீதான கண்காணிப்பை வலுப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. Read more

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்க அரசியலில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற பெயரில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கு பரிச்சயமான பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா, இன்று (10) இதுகுறித்து ஊகம் வெளியிட்டுள்ளார். Read more

வெளிநாடுகளிலுள்ள தனது இராஜதந்திர அலுவலக வலையமைப்பில் கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்த நோர்வே அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நோர்வே வெளிவிகார அமைச்சினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் (https://www.regjeringen.no/en/aktuelt/changes_abroad/id2927100/) குறிப்பிட்டுள்ளதற்கு அமைய, ஐரோப்பாவிலும், அதற்கு அப்பால் காணப்படும் இராஜதந்திர அலுவலக வலையமைப்பில் கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்த நோர்வே அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Read more