ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்றுக்காலை பயணமானார். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதியன்று இடம்பெற்ற உயர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான வழக்கு இன்று (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. Read more
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்துள்ள நிலையில், ஜனாதிபதி வெளிநாட்டில் இருக்கும் சமயத்தில் பணியாற்றுவதற்காக, தனக்குக் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்களை நியமித்துள்ளார். குறித்த அமைச்சுக்களின் இராஜாங்க அமைச்சர்களே இவ்வாறு பதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா நகரசபையை மாநகரசபையாக தரமுயர்த்தும் அறிவிப்பை வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பில் வவுனியாவ என குறிப்பிடப்பட்டிருந்தது தவறான நடவடிக்கையென பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஏற்றுக்கொண்டுள்ளார்.
கொழும்பில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த விமான சேவையை ஒக்டோபர் 9ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக ரஷ்ய விமான நிறுவனமான ஏரோஃப்ளோட் தெரிவித்துள்ளது. அதற்கமைய ஒக்டோபர் முதல் வாராந்தம் இரண்டு விமானங்கள் இயக்கப்படும் என்றும் பங்கொக் மற்றும் கோவாவுக்கான வழமையான விமான சேவைகள் இடம்பெறும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக சோசலிச இளைஞர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 84 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து மருதானை பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.
கொழும்பு மாவட்டத்தில் உள்ள அதி முக்கியமான இடங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ள மற்றும் நாடு திரும்ப விரும்பும் அகதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை இழப்பீடுகளுக்கான அலுவலகத்துடன் இணைந்து நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்ச ஆரம்பித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள தேசிய பேரவையில் 7 தமிழர்களும் 5 முஸ்லிம்களும் உறுப்பினர்களாக உள்வாங்கப்பட்டுள்ளனர்.
அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களை அத்தியாவசியப் பணிகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஊசி மூலம் போதைப் பொருளை பயன்படுத்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நபர்களை காப்பாற்றுவதற்கு லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார்.