08.11.2020 – 08.11.2022
யாழ்ப்பாணத்தில் மரணித்த தோழர் கலாமோகன் (அமரர் செல்லத்துரை கலாமோகன்) அவர்களின் இரண்டாமாண்டு நினைவுகள்…யாழ். அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern, யாழ் கொக்குவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இவர், கழகத்தின் தமிழீழ மாணவர் பேரவையில் இணைந்து செயற்பட்ட இவர் பின்னர் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தாயகம் திரும்பும்வரை கழகத்தின் சுவிஸ் கிளையில் இணைந்து செயற்பட்டு வந்தார்.
கொடிகாமம், திருநாவுக்கரசு ஆரம்பப் பாடசாலையில் தரம் 5 ல் கல்வி பயிலும் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை ஊக்குவிப்பதற்கான ஒரு தொகை நிதி ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) அமைப்பின் சமூக மேம்பாட்டுப் பிரிவினால் கையளிக்கப்பட்டுள்ளது. கழக சுவிஸ் கிளையின் நிர்வாகப் பொறுப்பாளர் தோழர் செல்வபாலனின் பங்களிப்பில் 40,000/= ரூபாய் நிதி பாடசாலை அதிபர் முன்னிலையில் வகுப்பாசிரியர்களிடம் கையளிக்கப்பட்டது.