ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் ஐக்கிய இராஜ்ஜிய கிளைத் தோழர் முகுந்தன் அவர்களின் நிதிப்பங்களிப்பில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக, மன்னார் மாவட்ட மாதா கிராமம் பெரியமுறிப்பைச் சேர்ந்த கழகத் தோழர் ஜோசெப் (கிறிஷாந்து ஜோசெப்) என்பவருக்கு நேற்று (09.11.2022) சுய தொழில் முயற்சியை மேற்கொள்வதற்காக 50,000 ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் மன்னார் மாவட்ட அமைப்பாளர் சம யோகானந்தராசா, மாவட்ட பொருளாளர் பா.மேரி லூட்ஸ்குருஸ் (மாலா) மற்றும் தோழர்கள் பாரி,மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.