கண்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா வெளிக்குளத்தை வாழ்விடமாகவும் கொண்டவரும் தோழர் ராஜா (சண்முகராசா) அவர்களின் அன்புத் தாயாருமான கந்தையா மாரியாயி அவர்கள் இன்று (09.11.2022) புதன்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகிறோம்.
அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு அன்னைக்கு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
09.11.2022.