12.11.1987 இல் கல்லாற்று பாலத்தருகில் மரணித்த தோழர்கள் பேர்னாட் (பருத்தித்துறை), கருணாகரன் (பள்ளிமுனை), சேகர் (மண்டான்), தமிழ்த்தம்பி (தி.இராசரத்தினம்- சுழிபுரம்), கரன் (சு.திருநாவுக்கரசு- ஸ்கந்தபுரம்), யோகன் (ஆட்காட்டிவெளி), பிரதிகரன் (கச்சாய்), ஞானராஜ் (ப.மோகன் – பன்குளம்), றமணன் (கனகரட்ணம் – யோகபுரம்) ஆகியோரின் 35ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..
கிழக்கு மாகாணத்திலுள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக திருகோணமையில் அமைந்துள்ள கோணேஸ்வரர் ஆலயம் திகழ்கின்றது. இந்நிலையில் தொல்பொருள் என்ற போர்வையில் அவ் ஆலயத்தின் கட்டுமானப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன, அங்கு சிங்கள ஆக்கிரமிப்பின் காரணமாக ஆலயத்தின் புனிதத்தன்மை பாதிக்கப்படுகின்றது. இவைகளையெல்லாம் இந்த அரசாங்கம் சட்டத்திற்கு மாறாக அனைத்தையும் மூடிமறைத்து, இந்து மதத்தையும் மக்களையும் வரலாற்றையும் மூடி மறைக்க முயல்கின்றது.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட நளினி இன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது