அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்திற்கு அமைவாக அரசியலமைப்பு பேரவைக்கான சிவில் பிரதிநிதிகளை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்காக தகுதியுடையோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்க முடியுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார். சிறப்பாகவும் நேர்மையாகவும் பொது அல்லது சமூக செயற்பாடுகளில் சிறந்து விளங்கும் அரசியல் கட்சி உறுப்பினர்கள் அற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more
கழகத்தின் ஐக்கிய இராஜ்ஜிய (UK) கிளைத் தோழரின் அனுசரணையில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் ஐக்கிய இராஜ்ஜிய கிளைத் தோழர் முகுந்தன் அவர்களின் நிதிப்பங்களிப்பில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக மன்னார் மாவட்டம் பெரியகுஞ்சுக்குளத்தைச் சேர்ந்த கழகத் தோழர் மணிமாறன் (அ.பீற்றர்) என்பவருக்கு மருத்துவ செலவுக்காக இன்று(13.11.2022) 50,000 ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது. நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் சம யோகானந்தராசா, மாவட்ட பொருளாளர் பா.மேரி லூட்ஸ்குருஸ் (மாலா) மற்றும் தோழர்கள் பாரி, ஈழன் மற்றும் தோழர் மணிமாறனின் துணைவியார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.