இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை, மன்னாரில் இருந்து படகு மூலம் புறப்பட்ட 2 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கை தமிழர்கள் 10 பேர், தனுஷ்கோடி வந்து இறங்கினர். பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையில் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக வரவு-செலவுத் திட்டம் நிறைவடைந்த அடுத்த வாரத்தில் பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுகூடி பேச்சுவார்த்தை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (23) நடைபெற்ற வரவு-செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அழைப்பு விடுத்தார்.
வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இரட்டைக் குடியுரிமை கொண்ட இலங்கையர்கள் பதிவாளர் நாயகத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று பதிவாளர் நாயகம் பி.எஸ்.பி. அபேவர்தன தெரிவித்துள்ளார். அந்த அனுமதியைப் பெறுவதற்கு இரண்டு தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவை இல்லாவிடின் திருமணத்துக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.