துன்புறுத்தல்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய ஹிருணிகா பிரேமச்சந்திர, கறுவாத்தோட்டப் பொலிஸாரால் இன்று(14) பிற்பகல் கைது செய்யப்பட்டார். பல குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Posted by plotenewseditor on 14 November 2022
Posted in செய்திகள்
துன்புறுத்தல்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய ஹிருணிகா பிரேமச்சந்திர, கறுவாத்தோட்டப் பொலிஸாரால் இன்று(14) பிற்பகல் கைது செய்யப்பட்டார். பல குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Posted by plotenewseditor on 14 November 2022
Posted in செய்திகள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் வீட்டுத்திட்டம் கிடைத்தும் மீதிப்பணம் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் கட்டிய அரைகுறை வீட்டினை நம்பி தற்காலிக வீடுகளில் வாழும் மக்கள் தற்போது பருவமழையினால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கடந்த மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்காலத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் சுமார் 1600 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கிவைக்கப்பட்ட போதும், அது வெறும் அத்திவாரத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 13 November 2022
Posted in செய்திகள்
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்திற்கு அமைவாக அரசியலமைப்பு பேரவைக்கான சிவில் பிரதிநிதிகளை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்காக தகுதியுடையோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்க முடியுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார். சிறப்பாகவும் நேர்மையாகவும் பொது அல்லது சமூக செயற்பாடுகளில் சிறந்து விளங்கும் அரசியல் கட்சி உறுப்பினர்கள் அற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 13 November 2022
Posted in செய்திகள்
கழகத்தின் ஐக்கிய இராஜ்ஜிய (UK) கிளைத் தோழரின் அனுசரணையில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் ஐக்கிய இராஜ்ஜிய கிளைத் தோழர் முகுந்தன் அவர்களின் நிதிப்பங்களிப்பில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக மன்னார் மாவட்டம் பெரியகுஞ்சுக்குளத்தைச் சேர்ந்த கழகத் தோழர் மணிமாறன் (அ.பீற்றர்) என்பவருக்கு மருத்துவ செலவுக்காக இன்று(13.11.2022) 50,000 ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது. நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் சம யோகானந்தராசா, மாவட்ட பொருளாளர் பா.மேரி லூட்ஸ்குருஸ் (மாலா) மற்றும் தோழர்கள் பாரி, ஈழன் மற்றும் தோழர் மணிமாறனின் துணைவியார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.Posted by plotenewseditor on 12 November 2022
Posted in செய்திகள்
12.11.1987 இல் கல்லாற்று பாலத்தருகில் மரணித்த தோழர்கள் பேர்னாட் (பருத்தித்துறை), கருணாகரன் (பள்ளிமுனை), சேகர் (மண்டான்), தமிழ்த்தம்பி (தி.இராசரத்தினம்- சுழிபுரம்), கரன் (சு.திருநாவுக்கரசு- ஸ்கந்தபுரம்), யோகன் (ஆட்காட்டிவெளி), பிரதிகரன் (கச்சாய்), ஞானராஜ் (ப.மோகன் – பன்குளம்), றமணன் (கனகரட்ணம் – யோகபுரம்) ஆகியோரின் 35ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..
Posted by plotenewseditor on 12 November 2022
Posted in செய்திகள்
கிழக்கு மாகாணத்திலுள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக திருகோணமையில் அமைந்துள்ள கோணேஸ்வரர் ஆலயம் திகழ்கின்றது. இந்நிலையில் தொல்பொருள் என்ற போர்வையில் அவ் ஆலயத்தின் கட்டுமானப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன, அங்கு சிங்கள ஆக்கிரமிப்பின் காரணமாக ஆலயத்தின் புனிதத்தன்மை பாதிக்கப்படுகின்றது. இவைகளையெல்லாம் இந்த அரசாங்கம் சட்டத்திற்கு மாறாக அனைத்தையும் மூடிமறைத்து, இந்து மதத்தையும் மக்களையும் வரலாற்றையும் மூடி மறைக்க முயல்கின்றது.Posted by plotenewseditor on 12 November 2022
Posted in செய்திகள்
இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட நளினி இன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது Read more
Posted by plotenewseditor on 11 November 2022
Posted in செய்திகள்
வவுனியா பூவரசங்குளத்தை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட இவர் ஆரம்ப காலங்களில் காந்தீயம் அமைப்பில் இணைந்து செயற்பட்டு வந்ததோடு, தொடர்ந்து கழகத்தின் செட்டிகுளம் பிரதேச உதவிப் பொறுப்பாளராகவும் செயற்பட்டவர். பின்னர் ஆசிரியராக பணியாற்றிய போதிலும் மரணிக்கும் வரை கட்சிப் பணிகளில் மிகுந்த அக்கறையுடன் தீவிரமாக செயற்பட்டு வந்தார்.Posted by plotenewseditor on 10 November 2022
Posted in செய்திகள்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் ஐக்கிய இராஜ்ஜிய கிளைத் தோழர் முகுந்தன் அவர்களின் நிதிப்பங்களிப்பில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக, அக்கரைப்பற்றைச் சேர்ந்த கழகத் தோழர் சரவணபவன் என்பவருக்கு 25,000 ரூபா நிதியுதவி வழங்கவைக்கப்பட்டது.Posted by plotenewseditor on 9 November 2022
Posted in செய்திகள்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் ஐக்கிய இராஜ்ஜிய கிளைத் தோழர் முகுந்தன் அவர்களின் நிதிப்பங்களிப்பில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக, மன்னார் மாவட்ட மாதா கிராமம் பெரியமுறிப்பைச் சேர்ந்த கழகத் தோழர் ஜோசெப் (கிறிஷாந்து ஜோசெப்) என்பவருக்கு நேற்று (09.11.2022) சுய தொழில் முயற்சியை மேற்கொள்வதற்காக 50,000 ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது.