நன்றி பிரதி சபாநாயகர் அவர்களே!Posted by plotenewseditor on 30 November 2023
						Posted in செய்திகள் 						  
நன்றி பிரதி சபாநாயகர் அவர்களே!Posted by plotenewseditor on 30 November 2023
						Posted in செய்திகள் 						  
யாழில் மலையகத்தை உணர்வோம்” எனும் தொனிப்பொருளில்; கண்காட்சி ஒன்று இடம்பெறவுள்ளது. விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இன்று முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரையில், குறித்த கண்காட்சி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் குறித்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது, கண்காட்சியுடன், சிறுவர் நாடகங்கள், ஆவணப் படங்கள் வாழ்வியல் பகிர்வுகள், மலையக மக்களின் புள்ளிவிபரப் பதிவுகள் அரசியல் பகிர்வுகள் போன்ற பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் அறிவித்துள்ளனர்.
Posted by plotenewseditor on 30 November 2023
						Posted in செய்திகள் 						  
2024ஆம் ஆண்டுக்குள் இலங்கை போக்குவரத்து சபை(SLTB) இலாபம் ஈட்டாவிடின், அதனை தனியார் மயமாக்க நேரிடும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதனை தவிர்க்க வேண்டுமாயின், இலங்கை போக்குவரத்து சபையை இலாபகரமான நிறுவனமாக மாற்ற வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின் பல டிஜிட்டல் திட்டங்களை எதிர்வரும் ஆண்டில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். Read more
Posted by plotenewseditor on 29 November 2023
						Posted in செய்திகள் 						  
சபாநாயகர் அவர்களுக்கு நன்றிPosted by plotenewseditor on 29 November 2023
						Posted in செய்திகள் 						  
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் வௌியிட எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை முடிவுகளை வௌியிடுவதற்கு தாமதம் ஏற்படுகின்றமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் குணபால ரத்னசேகர இன்று சபையில் கேள்வியெழுப்பினார்.  இதற்கு பதில் வழங்கிய போதே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்தார்.  Read more
Posted by plotenewseditor on 29 November 2023
						Posted in செய்திகள் 						  
வடக்கு , கிழக்கு மாகாணங்களில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கான ஆதரவை ஜப்பான் மீண்டும் நீடிக்கவுள்ளது. அதற்கமைய, கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள Mines Advisory Group எனப்படும் MAG மற்றும் HALO Trust நிறுவனங்களுக்கு ஜப்பான் அரசாங்கம் 23 கோடியே 80 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளது.  Read more
Posted by plotenewseditor on 29 November 2023
						Posted in செய்திகள் 						  
29.11.1985 அன்று திருவையாறில் மரணித்த தோழர்கள் சின்ன நியாஸ் (நா.பாலசந்திரன் – வட்டகச்சி), ஐவன் (மகாலிங்கம் – கனகபுரம்) ஆகியோரின் 38ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 28 November 2023
						Posted in செய்திகள் 						  
நாட்டின் சுகாதாரத்துறையில் நிலவும் பிரச்சினைகள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றன. வருடத்தின் கடந்த 10 மாதங்களில் மாத்திரம் ஆயிரத்திற்கும் அதிகமான வைத்தியர்கள் நாட்டை விட்டு சென்றுள்ளனர். இதனால், நாடளாவிய ரீதியில் 40 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பல்வேறு பிரச்சினைகளால் 100 வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  Read more
Posted by plotenewseditor on 28 November 2023
						Posted in செய்திகள் 						  
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சவுதி அரேபிய பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் பைசல் F.அலிப்ரஹிம் (Fisal F.Alibrahim) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேற்று(27) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் சவுதி அரேபியா இடையில் நிலவும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.  Read more
Posted by plotenewseditor on 27 November 2023
						Posted in செய்திகள் 						  
ரொஷான் ரணசிங்க அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நீர்ப்பாசன அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். ரொஷான் ரணசிங்க வகித்த அனைத்து அமைச்சு பதவிகளில் இருந்தும் நீக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(27) நடவடிக்கை எடுத்திருந்தார். விளையாட்டு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு பதவிகளில் இருந்து ரொஷான் ரணசிங்கவை நீக்குவதற்கான கடிதம், பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று(27) பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது வழங்கப்பட்டிருந்தது.