
Posted by plotenewseditor on 10 November 2023
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 10 November 2023
Posted in செய்திகள்
• தீபாவளிக்கு மறுநாள் 13ம் திகதி மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கும் அன்றையதினம் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் இவ்விசேட விடுமுறைக்கான பதில் பாடசாலை 18 ஆம் திகதி நடத்தப்பட வேண்டும் எனவும் மாகாண கல்வி அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 10 November 2023
Posted in செய்திகள்
திருகோணமலை- பெரியகுளம் பகுதியில் தொழில் முயற்சியாளர்களுக்கு காணி வழங்கக்கோரி வெள்ளிக்கிழமை (10) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பெரியகுளம் பகுதியில் பொது மக்கள் சிலர் தங்களுக்கு குடியிருப்பு மற்றும் சுயதொழில் முயற்சிக்கு அரச காணியை வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். Read more
Posted by plotenewseditor on 10 November 2023
Posted in செய்திகள்
ஹொரவப்பொத்தான- கெப்பித்திக்கொல்லாவ பிரதான வீதியில் கிவுளக்கடை பகுதியில் வானொன்று விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (10) காலை இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பில் இருந்து வவுனியாவுக்கு நேர்முகத் தேர்வு ஒன்றுக்காக சென்றவர்களே விபத்தில் சிக்கியுள்ளனர். வாகனம் வீதியோரம் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்தவர்கள் ஹொரவப்பொத்தான வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Posted by plotenewseditor on 10 November 2023
Posted in செய்திகள்
யாழ்ப்பாண மாவட்ட செயலக நுழைவாயிலை முடக்கி கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலகம் முன்பாக வெள்ளிக்கிழமை (10) காலை 10 மணியளவில் ஒன்று கூடிய கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்திய இழுவைமடிப் படகுகளை கட்டுப்படுத்த கோரி யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. Read more