Header image alt text

வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் வசிக்கும் பெ.மாயன்பெருமாள் என்பவருக்கு வாழ்வாதார உதவியாக கழகத்தின் சுவிஸ் தோழர் சிவா (செல்லத்துரை சிவானந்தசோதி) அவர்களின் நிதியுதவியில் 30,000/- பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் இன்று (05.11.2023) வழங்கிவைக்கப்பட்டது.

Read more

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 10 தூதுவர்கள் தமது நற்சான்று பத்திரங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளனர். கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து அவர்கள் ஜனாதிபதியிடம் தமது நற்சான்று பத்திரங்களை கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. லட்வியா, பிலிப்பைன்ஸ், கம்போடியா, ஃபின்லாந்து, வெனிசுவெலா, நோர்வே மற்றும் போர்த்துக்கல் ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்களே இவ்வாறு தமது நற்சான்று பத்திரங்களை சமர்ப்பித்துள்ளனர்.

இலங்கை மற்றும் இந்திய கடற்படையினருக்கு இடையில் 33 ஆவது சர்வதேச கடல் எல்லை சந்திப்பு இடம்பெற்றுள்ளது. காங்கேசன்துறை வடக்கு கடற்பரப்பில் இந்திய கடற்படையின் சுமித்ரா கப்பலில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இந்து சமுத்திர பிராந்தியத்தில் பொதுவான கடல்சார் சவால்களை சமாளிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இரு நாடுகளினதும் கடற்படைகள் மற்றும் கடலோரப் பாதுகாப்பு திணைக்களங்களுக்கு இடையில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்காக ஆண்டுதோறும் இந்த சந்திப்பு நடத்தப்படுகிறது.