மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ள இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருகோணமலை சென்றுள்ளார். இன்று காலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று அவர் வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன்போது, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்ட பிரமுகர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
திருகோணமலையில் STATE BANK OF INDIA வங்கிக் கிளையையும் இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.
இதன் பின்னர் திருகோணமலையிலுள்ள லங்கா IOC எண்ணெய்க் குதங்களையும் அவர் பார்வையிட்டார்.