பருத்தித்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட தோழர். முருகதாஸ் (மனோகரன் முருகதாஸ்) அவர்கள் இன்று (03.11.2023) அதிகாலை காலமானார் எனும் துயரச் செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அனைவருக்கும் அறியத்தருகிறோம். இவர் ஆரம்ப காலங்களில் கழகத்தின் தீவிர ஆதரவாளராக இருந்ததோடு, கழகத்தின் வளர்ச்சியிலும் கழகத்தின் பல்வேறு சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தியிருந்தார்.

பின்னர் புலம்பெயர்ந்து வாழ்ந்தபோதிலும் அவர் கழகத்தின் சுவிஸ் கிளையின் இணைந்து அதன் முக்கிய செயற்பட்டாளர்களுள் ஒருவரானார் .
அன்று சுவிஸில் கழகம் சந்தித்த நெருக்குவாரங்கள், அச்சுறுத்தல்கள் என அனைத்திற்கும் தோழர்களுடன் தோள்நின்று முகங்கொடுத்தார்.
அவரது இழப்பு அவரது குடும்பத்திற்கு மாத்திரமல்ல கழகத்துக்கும் ஒரு பேரிழப்பாகும்.
அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப் பெருந்துயரைப் பகிர்ந்து கொள்வதோடு துயரந் தோய்ந்த எமது அஞ்சலியையும் சமர்ப்பிக்கிறோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF)
03.11.2023.