இலங்கை மற்றும் இந்திய கடற்படையினருக்கு இடையில் 33 ஆவது சர்வதேச கடல் எல்லை சந்திப்பு இடம்பெற்றுள்ளது. காங்கேசன்துறை வடக்கு கடற்பரப்பில் இந்திய கடற்படையின் சுமித்ரா கப்பலில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இந்து சமுத்திர பிராந்தியத்தில் பொதுவான கடல்சார் சவால்களை சமாளிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இரு நாடுகளினதும் கடற்படைகள் மற்றும் கடலோரப் பாதுகாப்பு திணைக்களங்களுக்கு இடையில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்காக ஆண்டுதோறும் இந்த சந்திப்பு நடத்தப்படுகிறது.